அந்தியிலே பூத்தமலர் அப்பொழுதே கொய்ததெண்ணி
நொந்து நொந்து நெஞ்சமெலாம் நோக - வண்ணப்
பூச்சரமாய் மாறியதில் பயனுண்டா என்றுசொல்லிக்
கூச்சலிட முடியாமல் பூக்கடையில் வாட
அந்த வேளையிலே வந்து நின்ற
நங்கையவள் பட்டுவிரல் பட்டவுடன் மொட்டுமலர்
தங்கமென ஜொலித்ததென்ன சொல்ல; அடடா
கன்னியவள் பூச்சூடும் அழகதனைக் கண்டால்தான்
அந்தநாள் இனியநாள் கும்; அன்னவள்
மொய்குழலில் சூடுகின்ற மலர்கொண்ட வாசத்தில்
மெய்மறந் திருந்தால்தான் வாழ்வில்சுகம் சேரும்.


இராஜகுரு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.