நிலைக்கண்ணாடியில்
சாத்தானை தரிசித்தபடி
புணரும் பொழுதின்
நீட்சியாய்
ஆலயம்யாவும்
கடவுளை தரிசித்தபொழுது
பயபக்தியுடன்
சூம்பிப்போன சாத்தான்
தெரிவதில்லை
குட்டப்பனிடம் சொல்லி
பீடத்திற்கு பின்
நிலைக்கண்ணாடி ஒன்றை
வைக்க வேண்டும்.

- பாண்டித்துரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)