நிறைவேறாத
தன் கனவுகளை
ஊன்றிக் காத்திருக்கிறான்
நீண்ட நாட்களாய்
தன் கனவு மரங்களில்
அமர்ந்த பறவைகளை
கல்லெறிந்து
துரத்தி
தனக்கான கனவுகளை
அந்தப் பறவையோடு
கடத்தி பறக்க விடுகிறான்
மீண்டும் அதே இறகுடன்
கூடு திரும்பும் பறவை
கனவுச் சிறகுகளை
உதிர்க்கிறது

- ப.தனஞ்ஜெயன்