எழுதி நீண்ட நாட்களானது,
எழுதித் தொலையும்
காதலும் தீர்ந்தது.

ஏதோ ஒன்றின் மீதான விருப்பும்,
வெறுப்புமே வார்த்தைகளாய் இருந்தது.

பிடித்தல்களைப் போலவே,
வெறுப்புகளையும் பகிர்ந்தளிக்கும் இவ்வாழ்வு.

பிடிவாதமாய்ப்
பிடித்துப் போன
ஒன்றே தான்,
பிடிவாதமாய்
வெறுத்தும்
போகச் செய்கிறது.

வெறுத்து ஒதுக்கும்
ஒவ்வொரு நிகழ்வுகளின்
வினாடிகளிலும்
நம்மை மீறியே
அளப்பரிய காதல்
பற்றித் தொலைகிறது.

முன்னொரு நாள்
இரசிக்கப் பெற்ற நிகழ்வு,
அவ்வப்போது வந்து
செல்லும் வினாடிகளே அன்பின் விந்தை.

ஜன்னல் ஓரம் அமர்ந்து
ஆசுவேசக் காற்றில்
ஆகாயம் பார்த்து வரும் போதுதான்,
அலைமோதி நுரை தவழ்ந்து
கரை தொடும் அந்த காதல்.

உண்மையில் வெறுப்பை
வென்றுதான் விடுகிறது
நம் விருப்பம்.

- பிரியா சுப்ரமணியம்