வானவீதியில்
பறவைகள்
வட்டம் இடுவதை
ஒருபோதும்
பார்க்காதவன்,
ஆற்று நீரோட்டத்தை
எதிர்த்து நீந்தும்
மீன்களை
ஒருபோதும் பார்க்காதவன்,
வானவில்லை மட்டும்
பார்த்து
என்ன செய்துவிடப் போகிறான்?!

- ப.சுடலைமணி