இளவெயில் பகலை இதமாக
இழைத்து இழைத்து
இரண்டறக் கோர்த்து
புணர்ச்சியிலாடும் பட்டுப்பூச்சிகளை
தரிசிப்பதும் பெருவரம்தான்..
நீர்வரத்து அதிகமான பொழுதுகளில்
நதியோரக்கரைகளில்
பொக்கலின்கள் துருப்பிடித்துப் போக
மோகவெள்ளம் கரையுடைத்துப் பாயட்டும்
வரப்பெங்கும் காதல் மணிகள் சாயட்டும்
களஞ்சியங்கள் நிரம்பிட
கலவிதானே சூத்திரம்.

- சதீஷ் குமரன்