காத்திருக்கும் பொழுதுகளில்
கதவுகள் திறப்பதில்லை...
கதவுகள் திறக்கும் பொழுதுகளில்
வாயிலில் யாருமில்லை ..
மூடிய கதவுகளின்
முன்னிற்கும் தருணங்களில்
வேறெங்கோ கதவுகள்
திறந்து மூடப்படுகின்றன...
மூடிய கதவுகளையே
தட்டிக் கொண்டிருப்போர்க்கு
திறக்கப்பட்ட கதவுகள்
தென்படுவதில்லை..
தட்டப்படும் கதவுகள்
எல்லோருக்கும் திறப்பதில்லை....
திறக்கப்படா கதவுகள்
எல்லோருக்கும் இடறலில்லை...

- அருணா சுப்ரமணியன்