சீறிப் பாய்கிறது
அறச்சீற்றம்
கானல் நீராய்
கால்வாய்களின் வெடிப்பில்
கந்தலாகிக் கிடக்கிறது
உயிர்களின் பசித்த வயிறுகள்.
செழித்து நிலம் கிழிக்கும்
சீமைக் கருவேல மரங்களின்
வேர்களில் நொறுங்கிக் கிடக்கிறது
தலைமுறையின் தானியக் குதிர்கள்.
வந்துவிட்ட நீருக்காக
பெருங்கவலையுடன் கரையேறுகின்றன
அரச வாகனமான மணல் லாரிகள் ..

- சதீஷ் குமரன்