வாசனை மிகுந்த
மலர்களை
உனக்கெனப் பறித்து
வரும் வேளையில்,
என் நெருங்கிய
தோழியான வான்மகள்
எனக்கு உதவுவதாய்
நினைத்தே சிறிதுசிறிதாய்
பன்னீர் தெளிக்கிறாள்
மெல்லிய தூறலாய்...

பன்னீரில் நனைந்த
பூக்களில் ஈரம்
காயும் முன்னே
உன்னிடம் முழுவதுமாய்
தந்துவிட எண்ணி
உன் வீட்டுக்கதவருகே
காத்து நிற்கும் நொடிகளில்
உன் பூப்பாதம்
நோகுமென்று நான்
கவலை கொள்வேனோ என்றே,
தன் மென்கரங்களால்
மெல்ல வீசிச்சில
பூவிதழ்களை சிதறச்செய்கிறாள்
நீ வந்து நிற்கையில்
அவைகள் உன்னைத் தாங்கிக்
கொள்ளட்டும் என்றே...
 
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)