அத்தனையும் தாண்டி
அந்த காக்கைகளுக்கும் சேர்த்துதான்
சமைக்கிறார்கள் பாப்பாள்கள்

*

பச்சை காதாட்டும் இலைகள்
படபடக்கையில் இதய சாயல்

*

யாருக்காவது கிடைத்தால்
கொடுத்து விடுங்கள்
யாராவது கிடைத்தால் கேட்க வேண்டும்

*

நிகழ இருக்கும் எல்லாமும்
நிகழ்ந்தவை தான்

*

இரண்டு நாட்களாக இருமல் சத்தமில்லை
என்னவோ போலிருக்கிறது
தாத்தா செத்தது

*

வெண்மை சமாதானமென்று
யார் சொன்னது
கொக்கிடம் மாட்டிய மீன் கேட்கிறது

- கவிஜி