நண்பகல் வேளையில்
அந்தப் பூவரசமரம் 
ஏதோ சொல்ல விரும்புகிறதென
என் ஊசிமுனைக் காதுகளைக் கூர்மையாக்கி  
ஆசுவாசித்து அமர்ந்தேன் அதன்நிழலில்.

வெம்மையினை
சுரீரென படர்த்திய பெருவெயிலில்
என் செவிகள் கேட்கும் திறனை 
இழந்திருந்த உண்மையை 
அறிந்தேன் அப்போதே.
பார்வையும் சற்று மங்கலாய்...

வானம் பார்க்க
சட்டென நிமிர்கையில்
அத்துனை நேரமும் என் புலம்பலை உள்வாங்கியமைக்கு அத்தாட்சியாய் 
என் மீது எச்சமிட்டு அமர்ந்திருந்தது
ஒரு பூவரசம்பறவை.

- வான்மதி செந்தில்வாணன்