kulfi iceசுவை காண்பதாய் வேண்டி
ஆரம்பித்தது,
அவனோ, தினசரி வாடிக்கையாளராய்
வரும் போதெல்லாம் மணி அசைக்கிறான்
நானும் திறவாது கதவருகே நிற்கிறேன்
போவதாயில்லை, அவனை போக சொல்லவும் மனமில்லை
வெளியே நிற்கும் ஈருருளியை
அகத்தே வைக்க கூட இருமாடி இறங்க
இருபதாயிரம் முறை யோசிப்பவன்
ஆனால் என் கண் முன்னால் வந்து போகும்
குல்பி குச்சியால் விறகு எரிக்கும்
வடக்குகாரனின் வயிற்றுப்பசி;
மணிச்சத்தம் கேட்கிறது
அவனாத்தான் இருக்கனும்
இரண்டு மாடி இறங்குவதெல்லாம் வழக்கமாய் கொள்கிறேன்
பையா பத்து ரூபாவாலவா; இருபது ரூபாவாலாவா
கேட்டதை குடுத்திட்டு
“கல் மிலேங்கே” எனச் சொல்லி என்னை
நாளையும் வாடிக்கையாக்கி
தெருமுனை மறைகிறான்…

- சிவகுரு பிரபாகரன்.மா