அரிதாரங்கள் கலைக்கும் நேரத்தில்
இவன் தன்னிடம் எப்போதுமிருக்கும்
ஒரு பொம்மையைத் தேடுகிறான்

தையல் பிரிந்து பஞ்சு வெளியில் தெரியும்
இந்த பொம்மையை நிராதவராய்
அழுதுகொண்டிருந்த
ஒரு நடுநிசியில் அவன் கண்டெடுத்தான்

கொடூரமான கனவுகள் வந்த
ராத்திரிகளிலும் அந்த பொம்மை அவனிடம் இருந்தது

ஒரு பொம்மையை இவ்வளவு
நெருக்கமாய் வைத்திருப்பவனின்
உளவியல்
உங்களுக்கு விசித்திரமாக இருக்கிறது
உங்களுக்கேன் ஒரு பொம்மையை
நேசிப்பது குழந்தைத்தனமாக உள்ளது
என்ற கேட்படாத கேள்வி அவனிடமும்
இருக்கிறது

பொம்மை காணாமல் போகும்
ஒரு நள்ளிரவில்
அவன் தூக்கு மாட்டிக்கொள்வான்
என்பது உங்களில் பலருக்கு
ஓரு கேலியான செய்தி இல்லையா....?

- ஞா.தியாகராஜன்