ஒவ்வொரு கணப்பொழுதும் ஏதாவதொரு மீன் தூண்டிலில் மாட்டிக் கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு கணப்பொழுதும் எவனாவதொருவன் மீன் எதுவும் சிக்காத விரக்தியில் தூண்டிலை சுருட்டிக் கொண்டும் இருக்கிறான்.
மீன் கிடைத்தவன் கடவுளுக்கு நன்றி சொல்கிறான் மீன் கிடைக்காதவன் கடவுளைச் சபிக்கிறான் சிக்கிய மீன் கடவுளை சபிப்பதுமில்லை தப்பிய மீன் கடவுளுக்கு நன்றி சொல்வதுமில்லை!
- சேயோன் யாழ்வேந்தன்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.