1) அது காதல் இல்லை என்று


காதல் பாடல்களைக் கேட்கும் போது
காரணமில்லாமல் நினைவில் வந்தாய்
காதல் வசனங்களைக் கேட்கும் போது காரணமில்லாமல்
நினைக்க வைத்தாய்
காதல் ஓவியங்களைப் பார்க்கும் போது
காரணமில்லாமல் கனவாய் வந்தாய்

அப்போது புரியவில்லை
 காதலிக்க காரணம் தேவையில்லை என்று
இப்போது புரிகிறது
காரணத்தோடு வந்தால்
அது காதல் இல்லை என்று


2) தவிக்கிறேன்....

நான் ஒரு ஓவியனாய் பிறந்திருந்தால்
உன் முகத்தினை வரைந்தே என் கை ரேகை அழிந்திருக்கும்...
ஒரு சிற்பியாய் பிறந்திருந்தால்
உன் உருவத்தினை செதுக்கியே என் உ ளியும் உடைந்திருக்கும்...
ஒரு பாடகனாய் பிறந்திருந்தால்
உன் நினைவுகளை வர்ணித்தே என் குரலும் கரைந்திருக்கும்
அட, ஒரு கவிஞனாய் பிறந்திருந்தால் கூட
உன் காதலை விவரித்தே என் சொற்களும் தீர்ந்திருக்கும்..........
ஆனால்,நானோ,
உன்னைக் காதலிக்க பிறந்து விட்டதால் ,
உன் முகம் பார்க்காத நாட்களிலும்,
உன் பார்வை தீண்டாத கணங்களிலும்,
உன் குரல் கேட்காத கனவுகளிலும்...
ஓவியனில்லா தூரிகையாய்...
சிற்பி தீண்டாத கற்களாய் ....
ஸ்ருதியில்லா ஸ்வரங்களாய்...
சிதறிக் கிடக்கும் சொற்களாய்....
தவிக்கிறேன்...............

 - ச‌த்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.