தற்காலம் இந்தியாவின் அபிப்பிராய பேதத்திற்கும், ஒற்றுமையின்மைக்கும்,வகுப்புத் துவேஷங்களுக்கும் ஒரே மருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான் என்று சில நாட்களுக்கு முன்னர் “குடி அரசி”ன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பற்றி வெளிப்படையான ஆட்சேபங்கள் ஒன்றும் வரவில்லை. ஆனாலும், அதனால் பாதிக்கப்படக் கூடிய வகுப்பைச் சேர்ந்ததான “சுதேசமித்திரன்” பத்திரிகை மந்திரி ஒப்புக்கொள்ளுகிறார் என்கிற தலைப்பின் கீழ் ஒரு சொற்பெருக்கில் தனக்கு அநுகூலமான பாகத்தை மட்டும் எடுத்து எழுதி ஜனங்களை ஏமாற்றி, யோசித்துப்பாருங்கள் என்று கேட்டிருக்கிறது. “அதாவது பிரதிநிதிச்சபைகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே ஜஸ்டிஸ் கட்சியாரின் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அது தற்கால ஏற்பாடு. அதை ஒரு ஸ்திரமான ஏற்பாடாகக் கொண்டால்,அது நம் தேசிய இயக்கம் சிதருண்டு போகும்படி செய்யக்கூடியது”.
“திராவிடன்” பத்திரிகை மேற்படி மந்திரியின் சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு வெளியிட்டிருக்கிறது. “சமநியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றிமையாதது. இக்கொள்கை புதிதானதல்ல.சீர்திருத்தச் சட்டம் நடப்புக்கு வந்தபின்னர் ஏற்பட்டதுமல்ல,இம்மாகாணத்தைத் திறமையாய் முன்னர் ஆட்சி செய்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே இதை ஒப்புக்கொண்டு 1840 -ம் ஆண்டில் போர்டு ஸ்டாண்டிங் ஆர்டர் 125ல் அமைத் திருக்கிறார்கள். ஆனால் தற்காலமுறையாய் ஏற்பட்டதென்பதை நீங்கள் உணரவேண்டும்.நிலையாகவோ,முதன்மையாகவோ அஃதிருப்பின் தேசிய அபிவிருத்திக்குக் கெடுதி விளைவிக்கும்.எல்லா சமூகத்தார்களும் சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீரவேண்டும்” என்று பேசியிருக்கிறார்.இவற்றிலிருந்து “சுதேசமித்திரன்” பத்திரிகை ஜனங்களை எப்படித் தனது சூழ்ச்சிகளால் ஏமாற்றி வருகிறதென்றும்,அதை நம்பி ஜனங்கள் எவ்வளவு பேர் ஏமார்ந்து போகின்றார்களென்றும் வாசகர்களே அறிந்துகொள்ளலாம்.
மந்திரி ஸ்ரீமான் பாத்ரோ அவர்கள் தற்கால நிலைமைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேவையென்று சொல்லுவதோடு நிரந்தரமாய் அது நமக்கு இருக்க வேண்டியதில்லையென்றும்,எல்லா சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீரவேண்டும் என்றும் சொல்லுகிறார். நமது தேசத்தில் எல்லா சமூகத்தாரும் ஒற்றுமைப்பட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாகி,ஒருவரை ஒருவர் ஏமாற்றிப்பிழைக்கும் வழக்கம் நீங்கி எல்லோரும் சமம் சகோதரர்கள் என்கிற உணர்ச்சிவரும்பொழுது ஒரு தேசத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியதில்லைதான்.‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்று கூப்பிடுவதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால் தற்காலம் தேச முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பது ஒற்றுமைக்குறைவு என்பதையும், ஒற்றுமைக்குறைவிற்குக் காரணம் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் தாழ்த்தி ஏமாற்றி மோசம் செய்துதான் முன்னுக்குவரப் பார்ப்பதுதான் என்றும் வியக்தமாய் தெரிந்துகொண்ட பிறகு தர்ம சாஸ்திரம் பேசுவது ஒழுங்காகுமா?
இந்தியக் கிறிஸ்தவர்களுக்கும், மகம்மதியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆங்கிலோ இந்தியருக்கும் சில இலாகாக்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்துவிடவில்லையா? அதுபோல், பிராமணர்,பிராமணரல்லாதார் என்போருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டுவிடின் தேசத்திற்கு என்ன கெடுதி சம்பவிக்கும்? இந்து, மகம்மதியர், கிறிஸ்தவர் முதலியவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும், நம்பிக்கையும் பிராமணர் பிராமணரல்லாதார் என்கிற வகுப்பினருக்குள் இருக்கிறதா? ஒரு மதஸ்தர்களுக்குள்ளாகவே ஒருவர்தான் பிறவியினாலேயே உயர்ந்தவரென்றும், தான் எவ்வளவு ஈனராயிருந்த போதிலும் பிறவியின் காரணமாகவே தனக்குச் சில பெருமைகளும் உரிமைகளும் உண்டென்றும், பிராமணர் ஒழிந்த மற்றவர்கள் எவ்வளவு உயர்ந்தவராயிருந்த போதிலும் அவர்கள் தாழ்ந்தவர்களென்றும், அவர்களைத் தொட்டால், பார்த்தால், நெருங்கினால், தெருவில் நடந்தால் பாபமென்னும் தத்துவங்களையும், கொள்கைகளையும் மத ஆதார மூலமாக வைத்துக்கொண்டு இருக்கிறவரையில் இரு வகுப்பாருக்குள்ளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் அன்பும் எப்படி உண்டாகும்?
மகம்மதியரும், பிராமணரல்லாத இந்துக்களும், இந்தியக் கிறிஸ்தவர்களும், ஐரோப்பியரும், ஆங்கிலோ இந்தியரும் ஒரு சமயம் ஒற்றுமை ஆனாலும் ஆகலாம். ஆனால் பிராமணரும், பிராமணரல்லாத இந்துக்களும் ஒற்றுமையாக ஏதாவது இடமிருக்கிறதா? இந்துக்களில் பிராமணர் ஒழிந்த மற்றவர்கள் சூத்திரர்களென்றும், அவர்கள் பிராமணர்களுக்கு ஊழியர்களென்றும், அடிமைகளென்றும், தாசி மக்களென்றும்,அவர்கள் சொத்துக்கள் வைத்திருப்பதற்குப் பாத்தியமில்லையென்றும்,சூத்திரர்களின் சொத்துக்களைப் பிராமணர்கள் பலாத்காரமாய்ப் பிடிங்கிக் கொள்ளலாமென்றும் மனுதர்மசாஸ்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில் 413, 415, 417 சுலோகங்களாக எழுதி வைத்துக்கொண்டு அவற்றையே இந்து சமூகத்திற்கு ஆதாரமாக்கி, அதர்க்குத் தகுந்த மாதிரியாக வாழ்க்கையையும் நடத்திக்கொண்டு அதையே தங்கள் தந்திரங்களாலும், செல்வாக்கினாலும் பாமரஜனங்களையும் நம்பும்படி செய்து கொண்டிருக்கும் ஒரு சாதியுடன் எப்படி மற்றொரு சாதி ஒருமைப்படமுடியும்?
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு வந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் ஆறு ஏழு கோடி ஜனங்கள் தங்கள் நாட்டில் தீண்டாதவர்களாகவும் தெருவில் நடக்காதவர்களாகவும்,பார்க்காதவர்களாகவும் கருதப்படுகிறார்களென்றால் இனி எந்தக்காலத்தில் இவர்களுக்கு விமோசனம் உண்டென்று நம்ப இடமிருக்கிறது? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தப்பு என்பாரும், உயர்ந்த சாதி என்பாரும், இந்த அரசாங்கத்தாரும் நாளதுவரையில் இந்தத் தீண்டாதாருக்கு என்ன செய்திருக்கிறார்கள்? இனிமேலும் என்ன செய்வார்கள் என்று நம்பஇடமிருக்கிறது? சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்னராவது இந்தத் தீண்டாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்திருந்தால் இவர்களின் நிலை இன்று இப்படி இருக்குமா? இந்துக்களில் சிலர் மகம்மதியர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த மனப்பான்மை இப்பொழுது எப்படி மாறிற்று? அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்காமலிருந்திருந்தால் அவர்கள் முன்னுக்கு வந்திருப்பார்களா? நாமும் அவர்களைத் தொட்டால் தொட்ட விரலை வெட்டி எறிய வேண்டும் என்று தானே நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்றதெனச் சொல்லிக் கொண்டிருப்போம்.
ஒன்றரை நூற்றாண்டு பிரிட்டிஷ் ராஜ்யபாரம் நடந்தும் பிரிட்டிஷார் வருமுன் ராஜியபாரம் செய்து கொண்டிருந்த சாதியெல்லாம் பிற்போக்கான சாதிகளில்தானே சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம், இவர்களை நம்பி வாழ்ந்தவர்களெல்லாம் முற்போக்குள்ள சாதிகளில் சேர்க்கப் பட்டுப் போய்விட்டது. இந்தத் தீண்டாதவர்களும், பிற்பட்ட சாதிகளும் எந்தக் காலத்திற்குத் தீண்டக்கூடியவராகவும் முற்போக்குள்ள சாதியர்களாகவும் ஆகப்போகின்றனர்? சட்டசபைகளில் சகல சாதிகளுக்கும் உத்தியோகங்கள் சரிவர நிரப்பிக்கொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானித்தார்களே, அது அமுலில் வருகிறதா? சர்க்காருக்கு சம்பந்தப்பட்ட சகல தெருக்களிலும், சர்க்காரின் சகல பிரஜைகளுக்கும் சம உரிமை உண்டென்று ஒரு தீர்மானம் செய்தார்களே, அது அமுலில் வருகிறதா?
காங்கிரஸில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று தீர்மானம் செய்தார்களே, அதைக் காங்கிரஸில் உள்ளவர்களாவது ஒப்புக்கொண்டு அமுலில் கொண்டுவந்தார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி கூட்டத்தில் பிறவியினால் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம் செய்யப்பட்டதைக் காங்கிரஸ்வாதிகளாவது ஒப்புக்கொண்டார்களா?
பறையனுடனும் சாப்பிடுவேன், இன்னும் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடுவேன், என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன், என் இனத்தார்கள் மாத்திரம் பிராமணரல்லாத பையன்களுடன் உடனுண்ணலை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொல்லித் தியாகிகள் என்போரும் யோகிகள் என்போரும் காங்கிரஸில் தங்கள் பதவிகளை விட்டுவிட்டு ஓடிப் போகவில்லையா? எங்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மனப்பான்மையே இப்படியிருந்தால் ஒருவேளை ஒரு பிராமணரல்லாத பிள்ளையுடன் ஒரு பிராமணப் பிள்ளை உட்கார்ந்து உணவுண்டதாகக் கேள்விப்பட்டால் ஒருமாதம் பட்டினி விரதம் இருப்பேன் என்று சொல்லும் கூட்டத்தாரிடம் நாம் எப்படி ஒத்து வாழமுடியும்?
நமக்கும் அவர்களுக்கும் எப்போதாவது ஒற்றுமை ஏற்படும் என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? இம்மாதம் திருச்சியில் நடந்த கூட்டத்தில் சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கிற தத்துவத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னதில் சுயராஜ்யக் கட்சியின் தலைவர் இத்திட்டத்தை நீங்கள் அதில் சேர்க்கப் பிரயத்தனப்படுவீர்களானால் கொஞ்சம் நஞ்சமுள்ள பிராமணர்களும் காங்கிரசை விட்டுப்போய் விடுவார்களென்று பயமுறுத்தினார். தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று மகாத்மா வாயளவில் சொன்னபொழுது கூடவே கோவிந்தா போட்டுக் கொண்டிருந்தவர்கள் அது அமுலில் வருகிற காலத்தில் ஒரு பக்கம் மகாத்மாவின் பெயரைச் சொல்லிப் பதவிகள் அடைந்து வந்தாலும், மற்றொரு பக்கம் மகாத்மாவின் செல்வாக்கைக் குறைக்கப் பாடுபட்டு வருகிறார்கள், குறைத்தும் விட்டார்கள். இவற்றையெல்லாம் அறிந்த பிராமணரல்லாதாரில் சிலரும், பிராமணர்களிடத்தில் தங்களுக்குச் செல்வாக்குக் குறைந்துவிடும் என்கிற பயத்தினாலும், அவர்களால் தங்களுக்குப் புகழும் கீர்த்தியும் இல்லாமற்போய் விடுமே என்கிற பயத்தினாலும் விபூஷணாழ்வாரைப்போல் நடிக்கிறார்கள். ராமர் ராஜ்யத்திலேயே விபூஷணர் இருந்தால் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் விபூஷணர்கள் இருப்பது அதிசயமா?
அடிமை வியாபாரத்தை ஒழிக்க சட்ட மேற்படுத்தப்பட்ட காலத்தில் அடிமைகளே அச்சட்டத்தை எதிர்த்தார்களென்று சொல்லப்படுகின்றது. ஆனபோதிலும் வாஸ்தவத்திலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வந்தால் தேசமுன்னேற்றம் தடைப்பட்டுப் போய்விடுமோ என்று தெரிந்தோ தெரியாமலோ பயப்படுகிற உண்மையாளர் சிலர் இருக்கிறார்களென்பதை நாம் மறுக்க வில்லை.
மகம்மதியர், கிறிஸ்தவர் முதலானவர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்டபின் எவ்வித முற்போக்கிற்குத் தடை ஏற்பட்டுவிட்டது? கடைசியாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாயிருக்கின்றவர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். இவர்கள் எப்பொழுதாவது பிராமணர்களும் பிராமணர் அல்லாதாரும் ஒன்றுபடுவார்கள், பிராமணரல்லாதாரை அவர்கள் சுய மரியாதைக்குப் பங்கமில்லாதபடிக்கு எப்பொழுதாவது மதிப்பார்கள், பிராமணரல்லாதாருக்கும் தீண்டாதாருக்கும் இப்பொழுது இருக்கும் குறைவுகளெல்லாம் நீங்குவதற்கு பிராமணர்கள் அனுகூலமாய் இருப்பார்கள் என்று உண்மையாய் நம்புகிறார்களா? தீண்டப்படாதார் என்னும் 7 கோடி ஜனங்களுக்கு பிராமணரல்லாத இந்துக்கள் என்கிற முறையில் இன்னும் நாம் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க மறுப்போமேயானால் மகம்மதியர்கள் என்கிற பெயராலோ கிறிஸ்துவர்கள் என்கிற பெயராலோ சீக்கிரத்தில் நாம் அவர்களுக்கு கொடுக்கப் போகிறோம்.
இவர்கள் எப்படி நம்மை நம்புவார்கள்? நம்முடன் ஒத்துழைப்பார்கள். சர்க்காரோடு ஒத்துழைக்கக்கூடாது என்கிற நாம் நம்மை சூத்திரர் என்றும் அடிமை என்றும் தாசிமக்களென்றும் தொட்டால், பார்த்தால், தெருவில் நடந்தால் பாபம் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிற ஒரு ஜாதியாருடன் எப்படி ஒத்துழைக்க முடியும்? ஒரு காலத்தில் ஒத்துப் போகலாம் என்றாவது எப்படி எதிர்பார்க்க முடியும். ஒரு வக்கீலும் ஒரு போலீஸ்காரனும் தம்மை பிராமணன் என்றும் உயர்ந்த ஜாதியான் என்றும் எண்ணிக்கொண்டிருப்பானானால் உலகில் சண்டாளரென்று யாரைத்தான் சொல்ல முடியும்? உண்மையாய் பிராமணதர்மத்தோடு இருக்கும் யாரிடத்திலும் நமக்குத் துவேஷமில்லை. இவர்களை வணங்கவும் பின்வாங்கவில்லை, நம்மைப் போலவே நம்மிலும் கீழாகவே இருக்கிற நடக்கிற ஒருவன் நம்மை கீழ்ஜாதி என்று சொல்வதை எப்படி சகிக்கமுடியும்? - என்பதுதான் கேள்வி. இதை நிவர்த்தித்துக் கொள்ளாமல் நமக்கு என்னதான் ராஜிய சுதந்திரம் வந்தாலும் என்ன பலன்? இரண்டு சீர்திருத்தம் வந்தும் தாழ்த்தப்பட்டவர்கள் என்போருக்கு என்ன பலன் கிடைத்தது என்பதை யோசிக்கக் கோருகிறோம்.
(குடி அரசு - கட்டுரை - 16.08.1925)
(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது)
தற்காலம் இந்தியாவின் அபிப்பிராய பேதத்திற்கும், ஒற்றுமையின்மைக்கும்,வகுப்புத் துவேஷங்களுக்கும் ஒரே மருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான் என்று சில நாட்களுக்கு முன்னர் “குடி அரசி”ன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பற்றி வெளிப்படையான ஆட்சேபங்கள் ஒன்றும் வரவில்லை. ஆனாலும், அதனால் பாதிக்கப்படக் கூடிய வகுப்பைச் சேர்ந்ததான “சுதேசமித்திரன்” பத்திரிகை மந்திரி ஒப்புக்கொள்ளுகிறார் என்கிற தலைப்பின் கீழ் ஒரு சொற்பெருக்கில் தனக்கு அநுகூலமான பாகத்தை மட்டும் எடுத்து எழுதி ஜனங்களை ஏமாற்றி, யோசித்துப்பாருங்கள் என்று கேட்டிருக்கிறது. “அதாவது பிரதிநிதிச்சபைகளிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே ஜஸ்டிஸ் கட்சியாரின் லட்சியமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அது தற்கால ஏற்பாடு. அதை ஒரு ஸ்திரமான ஏற்பாடாகக் கொண்டால்,அது நம் தேசிய இயக்கம் சிதருண்டு போகும்படி செய்யக்கூடியது”.

“திராவிடன்” பத்திரிகை மேற்படி மந்திரியின் சொற்பொழிவை கீழ்க்கண்டவாறு வெளியிட்டிருக்கிறது. “சமநியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றிமையாதது. இக்கொள்கை புதிதானதல்ல.சீர்திருத்தச் சட்டம் நடப்புக்கு வந்தபின்னர் ஏற்பட்டதுமல்ல,இம்மாகாணத்தைத் திறமையாய் முன்னர் ஆட்சி செய்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப காலத்திலேயே இதை ஒப்புக்கொண்டு 1840 -ம் ஆண்டில் போர்டு ஸ்டாண்டிங் ஆர்டர் 125ல் அமைத்திருக்கிறார்கள். ஆனால் தற்காலமுறையாய் ஏற்பட்டதென்பதை நீங்கள் உணரவேண்டும்.நிலையாகவோ,முதன்மையாகவோ அஃதிருப்பின் தேசிய அபிவிருத்திக்குக் கெடுதி விளைவிக்கும்.எல்லா சமூகத்தார்களும் சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீரவேண்டும்” என்று பேசியிருக்கிறார்.இவற்றிலிருந்து “சுதேசமித்திரன்” பத்திரிகை ஜனங்களை எப்படித் தனது சூழ்ச்சிகளால் ஏமாற்றி வருகிறதென்றும்,அதை நம்பி ஜனங்கள் எவ்வளவு பேர் ஏமார்ந்து போகின்றார்களென்றும் வாசகர்களே அறிந்துகொள்ளலாம்.

மந்திரி ஸ்ரீமான் பாத்ரோ அவர்கள் தற்கால நிலைமைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேவையென்று சொல்லுவதோடு நிரந்தரமாய் அது நமக்கு இருக்க வேண்டியதில்லையென்றும்,எல்லா சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீரவேண்டும் என்றும் சொல்லுகிறார். நமது தேசத்தில் எல்லா சமூகத்தாரும் ஒற்றுமைப்பட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாகி,ஒருவரை ஒருவர் ஏமாற்றிப்பிழைக்கும் வழக்கம் நீங்கி எல்லோரும் சமம் சகோதரர்கள் என்கிற உணர்ச்சிவரும்பொழுது ஒரு தேசத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியதில்லைதான்.‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்று கூப்பிடுவதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஆனால் தற்காலம் தேச முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பது ஒற்றுமைக்குறைவு என்பதையும், ஒற்றுமைக்குறைவிற்குக் காரணம் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் தாழ்த்தி ஏமாற்றி மோசம் செய்துதான் முன்னுக்குவரப் பார்ப்பதுதான் என்றும் வியக்தமாய் தெரிந்துகொண்ட பிறகு தர்ம சாஸ்திரம் பேசுவது ஒழுங்காகுமா?

இந்தியக் கிறிஸ்தவர்களுக்கும், மகம்மதியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆங்கிலோ இந்தியருக்கும் சில இலாகாக்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்துவிடவில்லையா? அதுபோல், பிராமணர்,பிராமணரல்லாதார் என்போருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டுவிடின் தேசத்திற்கு என்ன கெடுதி சம்பவிக்கும்? இந்து, மகம்மதியர், கிறிஸ்தவர் முதலியவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையும், நம்பிக்கையும் பிராமணர் பிராமணரல்லாதார் என்கிற வகுப்பினருக்குள் இருக்கிறதா? ஒரு மதஸ்தர்களுக்குள்ளாகவே ஒருவர்தான் பிறவியினாலேயே உயர்ந்தவரென்றும், தான் எவ்வளவு ஈனராயிருந்த போதிலும் பிறவியின் காரணமாகவே தனக்குச் சில பெருமைகளும் உரிமைகளும் உண்டென்றும், பிராமணர் ஒழிந்த மற்றவர்கள் எவ்வளவு உயர்ந்தவராயிருந்த போதிலும் அவர்கள் தாழ்ந்தவர்களென்றும், அவர்களைத் தொட்டால், பார்த்தால், நெருங்கினால், தெருவில் நடந்தால் பாபமென்னும் தத்துவங்களையும், கொள்கைகளையும் மத ஆதார மூலமாக வைத்துக்கொண்டு இருக்கிறவரையில் இரு வகுப்பாருக்குள்ளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் அன்பும் எப்படி உண்டாகும்?

மகம்மதியரும், பிராமணரல்லாத இந்துக்களும், இந்தியக் கிறிஸ்தவர்களும், ஐரோப்பியரும், ஆங்கிலோ இந்தியரும் ஒரு சமயம் ஒற்றுமை ஆனாலும் ஆகலாம். ஆனால் பிராமணரும், பிராமணரல்லாத இந்துக்களும் ஒற்றுமையாக ஏதாவது இடமிருக்கிறதா? இந்துக்களில் பிராமணர் ஒழிந்த மற்றவர்கள் சூத்திரர்களென்றும், அவர்கள் பிராமணர்களுக்கு ஊழியர்களென்றும், அடிமைகளென்றும், தாசி மக்களென்றும்,அவர்கள் சொத்துக்கள் வைத்திருப்பதற்குப் பாத்தியமில்லையென்றும்,சூத்திரர்களின் சொத்துக்களைப் பிராமணர்கள் பலாத்காரமாய்ப் பிடிங்கிக் கொள்ளலாமென்றும் மனுதர்மசாஸ்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில் 413, 415, 417 சுலோகங்களாக எழுதி வைத்துக்கொண்டு அவற்றையே இந்து சமூகத்திற்கு ஆதாரமாக்கி, அதர்க்குத் தகுந்த மாதிரியாக வாழ்க்கையையும் நடத்திக்கொண்டு அதையே தங்கள் தந்திரங்களாலும், செல்வாக்கினாலும் பாமரஜனங்களையும் நம்பும்படி செய்து கொண்டிருக்கும் ஒரு சாதியுடன் எப்படி மற்றொரு சாதி ஒருமைப்படமுடியும்?

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு வந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் ஆறு ஏழு கோடி ஜனங்கள் தங்கள் நாட்டில் தீண்டாதவர்களாகவும் தெருவில் நடக்காதவர்களாகவும்,பார்க்காதவர்களாகவும் கருதப்படுகிறார்களென்றால் இனி எந்தக்காலத்தில் இவர்களுக்கு விமோசனம் உண்டென்று நம்ப இடமிருக்கிறது? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தப்பு என்பாரும், உயர்ந்த சாதி என்பாரும், இந்த அரசாங்கத்தாரும் நாளதுவரையில் இந்தத் தீண்டாதாருக்கு என்ன செய்திருக்கிறார்கள்? இனிமேலும் என்ன செய்வார்கள் என்று நம்பஇடமிருக்கிறது? சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்னராவது இந்தத் தீண்டாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்திருந்தால் இவர்களின் நிலை இன்று இப்படி இருக்குமா? இந்துக்களில் சிலர் மகம்மதியர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த மனப்பான்மை இப்பொழுது எப்படி மாறிற்று? அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்காமலிருந்திருந்தால் அவர்கள் முன்னுக்கு வந்திருப்பார்களா? நாமும் அவர்களைத் தொட்டால் தொட்ட விரலை வெட்டி எறிய வேண்டும் என்று தானே நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்றதெனச் சொல்லிக் கொண்டிருப்போம்.

ஒன்றரை நூற்றாண்டு பிரிட்டிஷ் ராஜ்யபாரம் நடந்தும் பிரிட்டிஷார் வருமுன் ராஜியபாரம் செய்து கொண்டிருந்த சாதியெல்லாம் பிற்போக்கான சாதிகளில்தானே சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம், இவர்களை நம்பி வாழ்ந்தவர்களெல்லாம் முற்போக்குள்ள சாதிகளில் சேர்க்கப் பட்டுப் போய்விட்டது. இந்தத் தீண்டாதவர்களும், பிற்பட்ட சாதிகளும் எந்தக் காலத்திற்குத் தீண்டக்கூடியவராகவும் முற்போக்குள்ள சாதியர்களாகவும் ஆகப்போகின்றனர்? சட்டசபைகளில் சகல சாதிகளுக்கும் உத்தியோகங்கள் சரிவர நிரப்பிக்கொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானித்தார்களே, அது அமுலில் வருகிறதா? சர்க்காருக்கு சம்பந்தப்பட்ட சகல தெருக்களிலும், சர்க்காரின் சகல பிரஜைகளுக்கும் சம உரிமை உண்டென்று ஒரு தீர்மானம் செய்தார்களே, அது அமுலில் வருகிறதா?
காங்கிரஸில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று தீர்மானம் செய்தார்களே, அதைக் காங்கிரஸில் உள்ளவர்களாவது ஒப்புக்கொண்டு அமுலில் கொண்டுவந்தார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி கூட்டத்தில் பிறவியினால் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம் செய்யப்பட்டதைக் காங்கிரஸ்வாதிகளாவது ஒப்புக்கொண்டார்களா?

பறையனுடனும் சாப்பிடுவேன், இன்னும் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடுவேன், என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன், என் இனத்தார்கள் மாத்திரம் பிராமணரல்லாத பையன்களுடன் உடனுண்ணலை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொல்லித் தியாகிகள் என்போரும் யோகிகள் என்போரும் காங்கிரஸில் தங்கள் பதவிகளை விட்டுவிட்டு ஓடிப் போகவில்லையா? எங்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மனப்பான்மையே இப்படியிருந்தால் ஒருவேளை ஒரு பிராமணரல்லாத பிள்ளையுடன் ஒரு பிராமணப் பிள்ளை உட்கார்ந்து உணவுண்டதாகக் கேள்விப்பட்டால் ஒருமாதம் பட்டினி விரதம் இருப்பேன் என்று சொல்லும் கூட்டத்தாரிடம் நாம் எப்படி ஒத்து வாழமுடியும்?

நமக்கும் அவர்களுக்கும் எப்போதாவது ஒற்றுமை ஏற்படும் என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? இம்மாதம் திருச்சியில் நடந்த கூட்டத்தில் சுயராஜ்யக் கட்சித் திட்டத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்கிற தத்துவத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னதில் சுயராஜ்யக் கட்சியின் தலைவர் இத்திட்டத்தை நீங்கள் அதில் சேர்க்கப் பிரயத்தனப்படுவீர்களானால் கொஞ்சம் நஞ்சமுள்ள பிராமணர்களும் காங்கிரசை விட்டுப்போய் விடுவார்களென்று பயமுறுத்தினார். தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று மகாத்மா வாயளவில் சொன்னபொழுது கூடவே கோவிந்தா போட்டுக் கொண்டிருந்தவர்கள் அது அமுலில் வருகிற காலத்தில் ஒரு பக்கம் மகாத்மாவின் பெயரைச் சொல்லிப் பதவிகள் அடைந்து வந்தாலும், மற்றொரு பக்கம் மகாத்மாவின் செல்வாக்கைக் குறைக்கப் பாடுபட்டு வருகிறார்கள், குறைத்தும் விட்டார்கள். இவற்றையெல்லாம் அறிந்த பிராமணரல்லாதாரில் சிலரும், பிராமணர்களிடத்தில் தங்களுக்குச் செல்வாக்குக் குறைந்துவிடும் என்கிற பயத்தினாலும், அவர்களால் தங்களுக்குப் புகழும் கீர்த்தியும் இல்லாமற்போய் விடுமே என்கிற பயத்தினாலும் விபூஷணாழ்வாரைப்போல் நடிக்கிறார்கள். ராமர் ராஜ்யத்திலேயே விபூஷணர் இருந்தால் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் விபூஷணர்கள் இருப்பது அதிசயமா?

அடிமை வியாபாரத்தை ஒழிக்க சட்ட மேற்படுத்தப்பட்ட காலத்தில் அடிமைகளே அச்சட்டத்தை எதிர்த்தார்களென்று சொல்லப்படுகின்றது. ஆனபோதிலும் வாஸ்தவத்திலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வந்தால் தேசமுன்னேற்றம் தடைப்பட்டுப் போய்விடுமோ என்று தெரிந்தோ தெரியாமலோ பயப்படுகிற உண்மையாளர் சிலர் இருக்கிறார்களென்பதை நாம் மறுக்க வில்லை.
மகம்மதியர், கிறிஸ்தவர் முதலானவர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்டபின் எவ்வித முற்போக்கிற்குத் தடை ஏற்பட்டுவிட்டது? கடைசியாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாயிருக்கின்றவர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். இவர்கள் எப்பொழுதாவது பிராமணர்களும் பிராமணர் அல்லாதாரும் ஒன்றுபடுவார்கள், பிராமணரல்லாதாரை அவர்கள் சுய மரியாதைக்குப் பங்கமில்லாதபடிக்கு எப்பொழுதாவது மதிப்பார்கள், பிராமணரல்லாதாருக்கும் தீண்டாதாருக்கும் இப்பொழுது இருக்கும் குறைவுகளெல்லாம் நீங்குவதற்கு பிராமணர்கள் அனுகூலமாய் இருப்பார்கள் என்று உண்மையாய் நம்புகிறார்களா? தீண்டப்படாதார் என்னும் 7 கோடி ஜனங்களுக்கு பிராமணரல்லாத இந்துக்கள் என்கிற முறையில் இன்னும் நாம் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க மறுப்போமேயானால் மகம்மதியர்கள் என்கிற பெயராலோ கிறிஸ்துவர்கள் என்கிற பெயராலோ சீக்கிரத்தில் நாம் அவர்களுக்கு கொடுக்கப் போகிறோம்.-

Pin It