எங்கோ உள்ள துருக்கி தேசத்தைப் பழிவாங்க நினைத்து இஸ்லாம் சமூதாயத்திற்குப் பிரிட்டிஷார் இழைத்த கொடுமைக்குப் பரிகாரம் தேடப் பாரத தேசமே போர்க்கோலம் பூண்டிருந்த நிலையில், பெரும் கலகமொன்று மலையாளப் பிரதேசத்தில் நிகழ்ந்தது. இது ‘மாப்பிள்ளைமார் கலகம்’ எனப் பெயர் பெற்றது.

மலபார் சென்னை ராஜ்யப் பிரதேசமாதலால் தமிழ்நாட்டையும் அதிரச் செயவதாக இருந்தது மாப்பிள்ளைமார் கலகம். இந்தக் கலகம் முதலில் அரசுக்கு எதிரானதாக மாறி வகுப்புத் தோன்றி பின்னர் இந்து முஸ்லிம் வகுப்புக்கலவரமாக மாற்றப்பட்டது. மாப்பிள்ளைமார் என்பவர் மலபார் பிரதேசத்தில், அது சேர மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது குடியேறிய அரேபியர்களின் சந்ததியாவர். இவர்கள் குடியேறிய காலத்தில் தமிழில் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. இந்த மாப்பிள்ளைமார்கள் மிகுந்த வீரமிக்கவர்கள். இவர்களைக் கண்டு பிரிட்டிஷாருக்கு அச்சம். அதனால் இவர்களை அடக்கி ஒடுக்க மலபார் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பெரிய வகுப்புக் கலவரமாக மாறி விட்டது அரசு.

தென்னிந்தியாவில் இது போன்ற ஒரு மதக்கலவரம் இதற்கு முன்னும் பின்னும் நிழந்ததே இல்லை. இந்துக்களில் பலர் மாப்பிள்ளைகளால் பலாத்காரமாக மதமாற்றம் செய்யப்பட்டனராம். ராஜாஜியும் யாகூப் அச்னும் கலவரப் பகுதிக்குச் சென்று மக்களிடையே அமைதி நிலைநாட்ட அகிம்சைப் பிரச்சாரம் செவதற்கு சென்னை மாகாண அரசிடம் அனுமதி கோருனர்.

அச்சமயத்தில் ராஜாஜி காங்கிரசஸ் மகாசபையின் பொதுச் செயலாளராக இருந்தார். அந்நாளில் வகுப்புக் கலவரம் எங்கு நடந்தாலும் அங்குத் தாமதமின்றி தேசியத் தலைவர்கள் செல்ல விரும்புவது வழக்கம். அரசு அவர்களுக்கு அனுமதி தர மறுப்பதும் வழக்கம். நாட்டில் உருவாகி வந்த இந்து முஸ்லீம் ஒற்றுமையை உடைக்க அரசு மலபார் சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டது. மாப்பிள்ளைமாரில் பலர் இந்து நிலப்பிரபுக்களிடம் குத்தகைதாரராக இருந்தனர்.

மலபார் செல்லும் வழியில் ராஜாஜியும் ஹசனும் தடுக்கப்பட்டனர். அதனால் திரும்பும்போது ‘இந்த அடக்கு முறை ஆட்சியாளர் வைத்த பொறியில் சிக்கி விட வேண்டாம்’ என மாப்பிள்ளைமார்களை எச்சரித்து அறிக்கை விட்டனர். மாப்பிள்ளைமார் மிகுதியாக வாழும் இரண்டு தாலுகாக்களில் ராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக 2339 பேர் இறந்தனர். தமிழினத்தாரின் மாப்பிள்ளைமார்கள் மாண்டனர். 24,167 பேர் கடுந்தண்டனைகளுக்கு ஆளாயினர். 150 மாப்பிள்ளைக் கைதிகள் ஒரு கூட்ஸ் ரயில் பெட்டியில் அடைத்துக் கொண்டு போகப்பட்டனர். அவர்களில் 66 பேர் மூச்சுத் திணறி இறந்தனர். இது ‘மரண வண்டி நிகழ்ச்சி’ எனப் பெயர் பெற்றது.
Pin It