ஸ்பானிய மொழியிலான இப்படம் புரட்சிகர இயக்கம் சார்ந்த ஒன்றின் செயல்பாடுகளைச் சொல்லும்போது எடுத்துக்கொண்டுள்ள விவரிப்பு முறை புரட்சி இயக்க செயல்பாட்டின் இறுக்கமான சூழலை மீறி பிறக்கும் குழந்தையின் பார்வையிலிருந்து ஆரம்பித்து அந்தக் குழந்தையின் வெவ்வேறு காலகட்டங்களை மையமாகக் கொண்டு குழந்தைகளுக்கான வெகுளித்தனமான பார்வையையும், சித்திர வடிவங்களையும், கொலாஜ் தன்மையையும், சித்திர கதை பாணியையும் கலந்து விவரிக்கிறது. வெனிசுலோவாவில் 1960ல் ஏற்பட்ட இடதுசாரிகள் எழுச்சியை இது மையமாகக் கொண்டிருக்கிறது. தலைமறைவு வாழ்க்கையில் கொரில்லா இயக்கத்தைச் சார்ந்த ஒரு பெண் குழந்தையன்றைப் பெற்றெடுக்கிறாள். அன்று தாய்மார்கள் தினம். அதையட்டின கொண்டாட்டங்களில் அவளின் புகைப்படம் தினசரிகளில் வருகிறது. அது அவளுக்கு சிக்கலாக அமைந்து, இருக்கும் இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற வேண்டியிருக்கிறது. வெவ்வேறு தோற்றங்கள், வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு பெயர்கள் என்று கழிகிறது.

கொரில்லா யுத்த முறைகள் படத்தில் விரிவாகக் காட்டப்படுகின்றன. காவல் துறையினரால் உறவினர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். குழந்தைப் பருவத்தை மீறி ராணுவத்தின், காவல் துறையின் கண்காணிப்பை குழந்தையே உணர்கிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கிற ஒவ்வொரு முறையும் அம்மாவைப் போலவே குழந்தையும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. பாட்டிகள் பிணஅறைக்கு அழைக்கப்பட்டு பிணங்களை அடையாளம் கண்டு சொல்லச் சொல்கிறார்கள். இறந்து பிணமாகக் கிடக்கும் எல்லோரையும் தங்கள் மகன்களாக, மகள்களாக, பேரப்பிள்ளைகளாகவே அவர்கள் சொல்கிறார்கள். புரட்சிகர இயக்கங்கள் காரணமாக குடும்பச்சூழ்நிலையும், கொண்டாட்டங்களும் மறுக்கப்பட்டு தனிமையாக்கப்படுகிறார்கள். இந்த விபரங்களை வெளிப்படுத்தும் திரைப்பட மொழி படத்தின் மையத்தின் தீவிரத்தோடு சம்பந்தமில்லாத வகையில் பெரும்பகுதி குழந்தை தன்மையோடு விவரிக்கப்பட்டிருப்பதில் புது வடிவம் கிடைக்கிறது.

இவை எனது குழந்தை பருவ நினைவுகள் என்கிறார் லெனின் கிரேடிலிருந்து தபால் அட்டைகள் படத்தின் இயக்குனர் திருமதி மரியானா ரான்டன். இப்படத்தின் ஒழுங்கற்ற வடிவமைப்பு என்பது தேவையான திட்டமிடப்பட்டதாகும். ஒரு குழந்தை கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் வடிவமாகும்.

கொந்தளிப்பான சூழலை உங்கள் படம் பிரதிபலிக்கிறது. ஆனால் எற்த பக்கமும் சாரவில்லை. இது திட்டமிடப்பட்ட முடிவா?

பதில் குழந்தையின் பார்வையில் போரைப்பற்றியது என் படம். அந்த குழந்தைத் தன்மை என்னைப் பாதித்தது. முடிவை எடுப்பவர்கள் வளர்ந்தவர்கள். வேறு வழியில்லை. குழந்தைகள் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில்லை, அது திரைப்படமானாலும்.

இது உங்களின் சொந்த அனுபவங்கள் என்பதால் அது சிக்கலான முறையானதா?

கடந்த இருபது ஆண்டுகளாக இதைத் தயாரிக்க நான் யோசித்தேன். ஆனால் அதை சொல்ல ஒரு வழியில்லை. பிறகு இதை சொல்ல ஒரேவழி இருப்பதாக உணர்ந்தேன் என் ஞாபகத்தில் இருப்பது போல.

படத்தின் அமைப்பைப் பற்றி பேசும்போது முறையில்லாத ஒழுங்கும், துண்டு துண்டாகக் காட்டப்படும் காலமும், பார்வையாளன் புரிந்து கொள்ள சிரமமானது ஆனது பற்றி...

ஆமாம். நானும் நானும் பயந்திருந்தேன். ஆனால் பொதுமக்களை நான் அணுகும் முறை உணர்வுபூர்மானது, அறிவுப்பூர்வமானது அல்ல. ஆமாம், காலமாற்றம் குழப்பமாகத்தான் இருந்தது. காலமாற்றத்தில் குறிப்புகளைப் பதித்திருந்கிறேன்.

இப்படத்தில் தாங்கள் பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பம் வித்தியாசமானது.

ஆமாம். 1960களை மையப்படுத்திய கதை என்பதால் அவ்வாறு இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். காலத்தை மறு உருவாக்கம் செய்யவேண்டியிருந்தது. ஆகவே தான் 16 எம்.எம். படத்தைப் பயன்படுத்தினேன். இத்திரைப்படத்தில் அமைந்திருக்கும் அனிமேசன் குரூரமானதே.

இப்படத்தின் வர்ணம் குறிப்பிடத்தக்கது. அதன் வர்ணம் வலியுறுத்துவது என்ன?

ஆமாம், ஸ்கிரிப்டை மூன்று முறை திருத்தி எழுதினேன். வர்ணத்தை வலியுறுத்தும் விதமாய் ஸ்கிரிப்டின் மையத்தோடு வெகுவாக திருத்தி எழுதினேன். ஒரு நிலைக்குப் பிறகு பிரக்ஞைப்பூர்வமில்லாமல் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இதை கருப்பு வெளுப்பில் எடுக்க நினைத்திருந்தேன். ஆனால் அது என் நாட்டிற்கோ எனது கதைக்கே யதார்த்தமாக அமையாது என்ற முடிவுக்கு வந்தேன்.

பொதுவாக உங்களின் திரைக்கதைகளையே நீங்கள் இயக்குகிறீர்கள், ஏன்?

மற்றவர்கள் திரைக்கதை அமைக்கும் போது எனக்கு ஆர்வம் ஏற்படுவதில்லை. திரைப்படம் என்பது உங்கள் உலகத்தைக் காட்டும் கருவியாகும். எனக்கொரு பார்வை இருக்கிறது.

Pin It