chennai floodsதிருக்குறள், ‘வான் சிறப்பு’ என்ற இரண்டாம் அதிகாரத்தில், வான் இவ்வுலகில் சிறப்பானது என்கிறார், குறளில் வல்லவரான வள்ளுவர்.

உண்மை. அதில் ஐயமில்லை. ஏனெனில், இவ்வுலக உயிர்கள் உயிர்வாழ இன்றியமையா நீரைப் மழையாகப் பொழிந்து தருகிறது.

அந்த மழை நீரை ‘அமிழ்தம்’ (குறள் எண்.11) என்கிறார் பொய்யாமொழிப் புலவர்.

தமிழகத்தின் பலப் பகுதிகளிலும்; குறிப்பாக; சிற்றூர் மக்கள், கடலோரத்து கிராமத்து மக்கள், அதிகமான மழையின் காரணமாக இன்று அல்லலுற்று அவதியுற்று இருக்கின்ற நிலையில், இம்மழையை அமிழ்தம் என்றா போற்றுவர்?.

நஞ்சு என நெஞ்சம் குமுறி வசைபாடுவர். ஏனெனில், அளவுக்கு மீறினால் அமிழ்தம் கூட நஞ்சுதான் என நமக்கு உணர்த்தியுள்ளனர்.  

எஃதும் அளவுக்கு மீறினால் தீங்கினைத்தான் நல்கும். இதே வள்ளுவர், வேறொரு குறளில்

"பீலிப்பெய் சாக்காடும் அச்சிறும்" (குறள் எண்.475)

என்கிறார்.

எட்டு நாள் தொடர் மழையால் இன்று பல தரப்பினரும் கண்ணீர் சிந்துகின்றனர். அது செந்நீராய் மாறி எங்களை வாட்டி வதைக்கிறது.

திருமந்திரம் உயிரை வளர்க்கும் என்றார் ‘அறிஞர் கரு.  ஆறுமுகத்தமிழன்’. அஃது உண்மை.

அதைப்படித்து உணர்ந்தோர்தான் உணர முடியும்.

உன் தன்மையறிந்த ஆங்கிலேயர்

"Rain rain go away" என்றனர்.

அவ்வாறெனில், நீ எப்போதுமே எங்களுக்கு தேவையில்லை, ஆகையால் எங்களைவிட்டு வெளியேறு,இனி வரவேண்டாம் எனப் பொருளாகும்.

உன் இயல்பைப் புரிந்துக் கொண்ட எங்கள் வள்ளுவ பெருமகனார்

வேறு குறளில் "எல்லாம் மழை" (குறள் எண்.15) என்றார்.

ஆங்கிலேயர் உன்னை விரட்டாமல் உலக உயிர்களை அமைதிப்படுத்தினார்.

ஆகையால்தான், அவர் வழித்தோன்றலாகிய நாங்களும்,சிலரை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது "Go back " என்று நயமாக எடுத்துரைத்தோம்.

அதன் பொருள் நீங்கள் இப்போது தீயவர், திருந்தி நல்லவராகி வருக என்தே அதன் உட்பொருள்.

நீ தரும் மழை நீரை அமிழ்தம் என்றபோதிலும் நீ எங்களை வாட்டி வதைக்கிறாய்.

உன்னை எங்கள் சிறார்களின் மழலை சொற்களால் "மழையே மழையே வா வா"என்று வரவேற்றோம்.

அதற்கு, நீ காட்டும் நன்றி உணர்வா? இஃது.

போதும் உன் நீர்.

பொறுத்துக்கொள்.

வறட்சியான நேரத்தில் வரலாம்.

- ப.தியாகராசன்