எப்போ?
ஆகஸ்டு 5, 2007 - ஞாயிற்றுக் கிழமை

எங்கே?
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் (Marina Campus)

எவ்வளவு நேரம்?
காலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.

எதற்கு?
• பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு தொடர்பு-பின்னல்(network) உருவாக்குவது.
• பயன் தரக் கூடிய தகவல்களை அளிப்பது.
• புதியவர்களுக்கு வலைப்பதிவு, தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
• வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்
• பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
• பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
• இணையத்தில் தமிழ் தழைக்க பணி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல்
இன்னும் ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

எத்தனை பேர்?
100லிருந்து 150 பேர் கலந்து கொள்ளும் வகையில் இது இருக்கும்.

யாருக்கு?
1. வலைப் பதிவில் தீவிரமாகச் செயல் படும், மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் பணி புரிபவர்கள் (20-25 பேர்)
2. வலைப்பதிவுகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும், மென் பொருள் துறையில் பழக்கம் இல்லாதவர்கள் (30-40 பேர்)
3. வலைப்பதிவுகள் குறித்து அறிமுகம் இல்லாதவர்கள். (50-70 பேர்)

யார் நடத்துகிறார்கள்?
நாம் எல்லோரும் சேர்ந்துதான்.

கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததைக் கற்பிக்கவும், தமக்கு வேண்டியதைக் கற்றுக் கொள்ளவும் தயாராக வர வேண்டும்.

பங்கு கொள்ள என்ன செய்ய வேண்டும்?
பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?
• தத்தமது நண்பர்கள், தெரிந்தவர்களை பட்டறைக்கு அழைத்து வருதல்
• பயிற்சிக்கு வசதியாக இணைய வசதியோடு கூடிய கணினிகள் ஏற்பாடு செய்தல்
• தமிழ் இணையம் குறித்து புத்தகம், குறுவட்டு தயாரித்தல்
• வணிக நிறுவனங்களின் ஆதரவைத் திரட்டுதல்
• பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களைத் தொடர்பு கொள்ளுதல்

முழுவிபரங்களுக்கு
தமிழ் வலைப்பதிவுகளின் செயல்பாட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு போகும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.

Pin It