இதுவரை இந்தியாவில் தீவிரவாத முத்திரையில் கைது செய்யப்பட்டு பல ஆண்டு சிறைக்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்ட வழக்குகளில் சில...

muslim rallyநஸ்ருதின் அஹ்மத் - 23 வருட சிறை.
கைது செய்யப்பட்டது - 1994.
விடுதலை செய்யப்பட்டது - 2015
கைது செய்யப்படும் போது வயது - 19.
வழக்கு - பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தின் போது நடந்த ஐந்து இரயில் குண்டுவெடிப்பு, இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பின் போது குற்றம் இழைக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டார்.

குல்சார் அஹ்மத் பானி - 16 வருட சிறை.
கைது செய்யப்பட்டது - 2001
விடுதலை செய்யப்பட்டது - 2017
கைது செய்யப்படும் போது வயது- 28.
வழக்கு - சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.

ஜாஹீருதீன் அஹ்மத் - 23 வருட சிறை.
கைது செய்யப்பட்டது - 1994
விடுதலை செய்யப்பட்டது - 2016
வழக்கு - மும்பையில் சிவில் பொறியாளராக இருக்கும் போது தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

md ஆமிர் கான் - 14 வருட சிறை
கைது செய்யப்பட்டது - 1998
விடுதலை செய்யப்பட்டது - 2012
கைது செய்யப்படும் போது வயது- 20.
வழக்கு - டெல்லியில் 20 சக்தி குறைந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்று கைது செய்யப்பட்டவர்.

ஹபீப் பாவா மற்றும் ஹனிப் பாகிட்வாலா - 14 வருட சிறை.
கைது செய்யப்பட்டது - 2003
விடுதலை செய்யப்பட்டது - 2017
வழக்கு - 2002 ல் டிபன் பாக்ஸ் குண்டு பேருந்தில் வெடித்த வழக்கு.

ஹுசைன் பாசிலி மற்றும் ராபிக் ஷாஹ் - 12 வருட சிறை.
கைது செய்யப்பட்டது - 2005
விடுதலை செய்யப்பட்டது - 2017
வழக்கு - ஷாஹ் இஸ்லாமிய மாணவராக இருக்கும் போது கைது செய்யப்பட்டார், டெல்லி தொடர் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டார்.

ஆறு பேர் - 11 வருட சிறை.
கைது செய்யப்பட்டது - 2003
விடுதலை - 2014
வழக்கு - 2002 அக்ஸர்தம் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

இர்ஷத் அலி மற்றும் மௌரிப் கமர் - 11 வருட சிறை.
கைது - 2005
விடுதலை - 2017
வழக்கு - அல்-பத்ர் எனும் குழுவில் உறுப்பினர்கள் என்று கைது செய்யப்பட்டார்கள்.

ஒன்பது பேர் - 10 வருட சிறை.
கைது - 2006
விடுதலை - 2016
வழக்கு - மாலேகான் குண்டுவெடிப்பு.

malegaon victimஅப்துல் வாகித் செய்க் - 9 வருட சிறை
கைது - 2006
விடுதலை- 2015
வழக்கு - 11/07 மும்பை ரயில் குண்டுவெடிப்பு,

ஐந்து பேர் - 9 வருட சிறை.
கைது - 2007
விடுதலை - 2016.
வழக்கு - தடைப்பட்ட ஹுஜி குழுவை சார்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பினார்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்கள்.

சொஹெப் ஜாஹிர்தார், அப்துல் நய்யிம், md இம்ரான் கான் மற்றும் சையத் கான் - 7 வருட சிறை.
கைது - 2007
விடுதலை- 2014
வழக்கு - மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு.

ரியாஸ் கான் மற்றும் அப்துல் சையத் - 7 வருட சிறை.
கைது - 2010
விடுதலை - 2017
வழக்கு - மக்கா குண்டுவெடிப்பு வழக்குக்கு பழிவாங்க காவலதிகாரியை கொலை செய்ததாக கைது.

17 பேர் - 7 வருட சிறை.
கைது - 2008
விடுதலை - 2015
வழக்கு - சிமி அமைப்பில் இருந்து நாட்டுக்கு எதிராக போரில் ஈடுபட்டவர்கள்.

ஹாரூன் ரஷீத், Md. இஃப்திகார், மசூத் அஹ்மத், திலாவர் கான் - 5 வருட சிறை.
கைது - 2005
விடுதலை - 2010
வழக்கு - டெஹ்ராடூனில் இருக்கும் மிலிட்டரி பள்ளியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

மஹ்பூப் இப்ராகிம், சபாப் சோப்தார் - 5 வருட சிறை
கைது - 2006
விடுதலை- 2011
வழக்கு - டெல்லியில் உள்ள IIT மீது தீவிரவாத தாக்குதலை நடத்த முயற்சித்தார்கள் என்று கைது.

இப்படி கைது செய்யப்பட்டு அப்பாவி என்று கூறி விடுவிக்கப்பட்ட எவருக்கும் எந்த வித இழப்பீடும் கிடையாது. பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் 23 வருடங்கள் வரை தங்கள் வாழ்வை இழந்தவர்கள் கூட இருக்கிறார்கள். இந்த நிலையை கொண்டு வந்ததற்கே நமது நீதிமன்றங்கள் குற்ற உணர்வை கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் அக்ஸர்தம் குண்டுவெடிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பேர் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் இது "ஓர் மோசமான முன்மாதிரியாக" மாறி விடும் என சொல்லியது. இந்நாட்டில் நீதிமன்றங்களே பாசிச சிந்தனையில் மூழ்கியிருக்கும்போது இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது?.

(ஆதாரம் - டைம்ஸ் ஆப் இந்தியா 11/08/17)

- அபூ சித்திக்