பிஜேபியால் தமிழ்நாட்டுக்கு இன்று சோபியா என்ற ஆளுமை கிடைத்திருக்கின்றார். ஒருவேளை அந்த விமானத்தில் தமிழிசை வரவில்லை என்றால், இப்படி ஒரு வீரமிக்க, துணிவுமிக்க, தன்மானமும், சுயமரியாதையும் உள்ள தமிழ்ப் பெண் தமிழ்நாட்டில் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். ஒட்டுமொத்த இந்தியாவைப் பிடித்த பெரும் தரித்திரமாய், பீடையாய் பாஜக‌ மாறியிருக்கின்றது. அந்தக் கட்சியை சேர்ந்தவர்களையோ, அதற்கு ஆதரவாய் இருப்பவர்களையோ பார்த்தாலே மக்கள் இயல்பாகவே பெரும் கோபமடைகின்றார்கள். தங்கள் வாழ்வாதாரங்களை எல்லாம் அழித்து தங்களைச் சாகடிக்க வந்த குற்றக் கும்பலாக பாஜகவை மக்கள் கருதுகின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் விமானம் என்று கூட பார்க்காமல் சோபியாவை ஆத்திரப்பட வைத்திருக்கின்றது. அவரது கோபம் தமிழிசை என்ற தனி ஒரு பெண்ணைச் சார்ந்தது கிடையாது. அவர் சார்ந்து இருக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் என்ற தரம்கெட்ட கும்பலின் மீதான கோபம். அதன் பிரதிநிதியாய், தலைவியாய் தமிழ்நாட்டில் தமிழிசை இருப்பதால்தான் அந்தக் கோபத்தை அவர்மீது காட்டவேண்டிய சூழ்நிலை உருவாகின்றது.

Sophia Loisஒட்டுமொத்த இந்திய மக்களும் காறித் துப்பினாலும், செருப்பால் அடித்தாலும் கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லாமல், பொதுவெளியில் கம்பீரமாய் வரும் அவர்களின் இயல்பு சுயமரியாதையும், தன்மானமும் நிறைந்த இந்த மண்ணின் மக்களுக்கு பெரும் அருவருப்பையும், அசூசையையும் தருகின்றது. இது போன்று சொந்த மண்ணின் மக்களைக் கொல்வதற்காக உயிர்வாழும் ஜென்மங்களும் தங்கள் மண்ணில் வாழ்கின்றார்கள் என்பதையே வெட்கக்கேடாக அவர்கள் நினைக்கின்றார்கள். அதனால் தான் அது போன்ற ஜென்மங்களைப் பார்த்த மாத்திரத்தில் ஆத்திரத்தை அடக்க முடியாமல் தங்கள் கோபத்தை வெளிக்காட்டி விடுகின்றார்கள். சோபியா மீத்தேன் திட்டத்தாலும், நியூட்ரினோ திட்டத்தாலும், எட்டுவழிச்சாலை திட்டத்தாலும் பாதிக்கப்படும் மக்களின் குரலாக ஒலித்திருக்கின்றார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக, பாசிச அரசின் ஆணைக்கிணங்க சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குரலாக ஒலித்திருக்கின்றார். நியாயமாகப் பார்த்தால் தூத்துக்குடி விமான நிலையத்தில் பிஜேபியினர் சோபியாவின் காலில் விழுந்து வணங்கி அவரைப் பார்த்து ‘பாரத் மதா கீ ஜே’ என்று முழக்கம் இட்டிருக்க வேண்டும்.

ஆனால் நாட்டை காட்டிக் கொடுப்பவனுக்கும், கூட்டிக் கொடுப்பவனுக்கும் பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட கர சேவகர்கள் அந்த வீரப்பெண்ணை ஒரு தீவிரவாதியைப் போல கைது செய்ய வைத்திருக்கின்றார்கள். 'பெண்கள் படுத்துத்தான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்' என்று சொன்ன எஸ்.வி. சேகரையும் , படுக்க வந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று சொல்லி தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரத்துக்கு அழைத்த நிர்மலா தேவியையும் இரு கண்களாகக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவியான தமிழிசை கொடுத்த ஒரு புகாரை தெய்வத்தின் வாக்காக நினைத்து, உடனே கைதுசெய்த காவல்துறையும், பிஜேபிக்கு எதிராக கோஷமிட்டதை ஏதோ பிரியாணி அண்டாவைத் திருட நடந்த மாபெரும் சதி போலக் கருதி அவரை 15 நாட்கள் ரிமாண்ட் செய்ய உத்திரவிட்ட நீதிபதியும் கடும் கண்டனத்துக்கு உரியவர்கள்.

தற்போது சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் கிடைத்திருந்தாலும் அவர் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக இந்த அரசு ரத்து செய்ய வேண்டும். கடிக்க வரும் நாயை கல்லால் அடிக்க உரிமை இருப்பது போல இந்த மண்ணில் தன்மானமும், சுயமரியாதையும் உள்ள ஒவ்வொருவருக்கும் பிஜேபியையும், ஆர்எஸ்எஸ்சையும் முச்சந்தியில் வைத்து நினைக்கும்தோறும் அசிங்கப்படுத்த உரிமையுள்ளது என்பதை உத்திரவாதப் படுத்த வேண்டும். இந்த மண் பார்ப்பனக் கும்பலாலும், அவர்களின் காலை நக்கிக் குடிக்கும் அடிமை சூத்திரக் கும்பலாலும், சாதியாலும், மதத்தாலும், மூட நம்பிக்கையாலும் சுரண்டப்படாமல் காக்கப்பட வேண்டும் என்றால், நாம் சோபியா போன்றவர்களை சுதந்திரமாக தங்கள் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்.

தமிழிசை போன்றவர்கள் இந்த மண்ணை வடநாட்டு பார்ப்பன, பனியா கும்பலுக்கு விற்று, அதன் மூலம் உயிர்வாழ நினைக்கும் பாசிச இனத் துரோகிகள். எச்சை ராஜா, இல.கணேசன், எஸ்.வி.சேகர், நிர்மலா தேவி, பொன்.ராதாகிருஷ்ணன், அர்ஜூன் சம்பத் என ஒரு சிறிய குள்ள நரிக் கூட்டம் கோடிக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்வோடும், அவர்களின் சுய கெளரவத்தோடும் தொடர்ந்து மோதிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டை ஆளும் அடிமை அரசு இந்தக் குற்றக் கும்பலை தொடர்ந்து அது போன்று நடந்து கொள்ள அனுமதிப்பதோடு, அவர்களுக்கு எதிராகப் பேசும் இந்த மண்ணின் மக்களை சிறைப்படுத்தி தனது சூத்திர அடிமைத்தனத்தைக் காட்டி வருகின்றது.

tamilisaiதமிழிசை சொல்கின்றார், “சமதளத்தில் பாஜக அரசு பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும், அவர்களுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், விமானத்துக்குள் பேச அவர்களுக்கு உரிமை இல்லை. அவரது பின்புலம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனது உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை அங்கே இருந்தது” என்கின்றார். ஆனால் இதுவரை சமதளத்தில் நடந்த எதற்கும் அவர் பதில் சொன்னதில்லை என்பதுதான் உண்மை. திருப்பூரில் கள்ளக்காதலால் தூக்கு போட்டு செத்துப்போன மாரிமுத்துவை ஏதோ இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் கொன்றுவிட்டதுபோல நாடகமாட, மோடியின் படத்துக்கு பிஜேபியினரே செருப்பு மாலை போட்டு கலவரத்தை தூண்டப் பார்த்தார்களே... இதைவிட கீழ்த்தரமான சில்லரைக் கும்பலை எங்காவது நாம் பார்க்க முடியுமா? ஆனால் தமிழிசை, மாரிமுத்துவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராடப் போவதாக அறிவித்தார். இதுதான் தமிழிசை என்ற பாசிச மனநோயாளியின் யோக்கியதை. கோயம்புத்தூரில் ரவுடி சசிகுமாரின் பிணத்தை சாக்காக வைத்துக் கொண்டு திருடித் தின்ற பிரியாணி அண்டாவுக்கே இன்னும் பதில் சொல்லவில்லை. அது எல்லாம் கூட இருக்கட்டும், ஆளுநர் தாத்தாவா இல்லையா என்பதையாவது தமிழிசையால் சொல்ல முடியுமா? இல்லை அதைப் பற்றி விவாதிக்கத்தான் முடியுமா? தமிழ்நாட்டின் அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இந்தச் சங் பரிவாரக் கும்பல்கள் உருவெடுத்திருக்கின்றன. இவர்களின் பின்புலங்கள் உடனடியாக ஆராயப்பட வேண்டும். ஆளுநர் மாளிகைக்கும், நிர்மலா தேவிக்கும் உள்ள தொடர்பு பற்றி நேர்மையாக விசாரணை நடத்தினால் தமிழ்நாட்டில் சங் பரிவாரக் கும்பல்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டிருப்பதை நிச்சயமாக வெளிக்கொண்டுவர முடியும்.

சிலைகளைக் கடத்தி விற்பது, விபச்சாரத் தொழில் செய்வது, கள்ள நோட்டு அடிப்பது, குழந்தைகளைக் கடத்தி விற்பது என எல்லாவகையான தேசவிரோத செயல்களையும் தமிழ்நாட்டில் செய்து வருகின்றார்கள். ஆனால் காவல்துறை சம்மந்தப்பட்ட குற்றவாளிகளோடு கள்ள உறவு வைத்துக்கொண்டு, அப்பாவித் தமிழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றது. தமிழக அரசு இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவான போக்கையே தொடர்ந்து எடுத்து வருவதால் முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் களத்தில் இறங்கி, இந்த அநீதிக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். நாம் சோபியாக்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுப்போம். சோபியா போன்றவர்கள் இந்த மண்ணின் பெருமை மிகு அடையாளங்கள். சோபியாவைப் போன்றே தமிழ்நாட்டில் தன்மானமும், சுயமரியாதையும் உள்ள மாணவர்கள் அனைவரும் வீதிக்கு வந்து ‘பாசிச பிஜேபி ஒழிக’ என குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குரல் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் ஒலிக்க வேண்டும்.

- செ.கார்கி