ஏய் கொக்கி நில்றா. நானும் வரேன்.

வா பா ரூட்டு. நேத்து நா ஒரு புக் குடுத்தனே. அதை படிச்சியா.

ம்ம். ஆரம்பிச்சிட்டேன். பாதி படிச்சிட்டேன் இன்னும் மீதி படிச்சிட்டு கொடுக்குறேன். அந்த புக் யை படிச்சிட்டு இருக்கும் போது பக்கத்து வீட்ல இருக்குற சேஷாத்திரி ஒரு பையன் ஒரு கேள்வி கேட்டான் மச்சா. எனக்கு என்ன சொல்றது னே தெரில டா.

அப்புடி என்னடா கேட்டேன்.

பெரியாரும், கருப்பு சட்டை போட்டுண்டு இருக்கிற அவாளோட ஃபாலோயர்ஸ் ம் எப்பா பாத்தாலும் இந்துமதத்தை யே தான் திட்டுவா. கடவுள் இல்ல னு சொல்லுவா ஆனா அல்லா இல்ல, ஜிஸஸ் இல்ல னு சொல்ல மாட்டிங்குறாளே னு கேட்டான் மச்சி.

அடத்தூ. இதை தான் கேட்டானா. நான் கூட ஏதோ ஒர்த் ஆன கேள்வி கேட்டுஇருப்பான் னு நினைச்சேன். சரி நா சொல்றத நல்லா கேட்டுகோ. போன வாரம் நைட் ஷோ படத்துக்கு போயிருந்தோம் ல. அப்போ  நடுவுல படத்துல தம் அடிக்கிற சீன் லாம் வரும் போது ஒரு வார்னிங் மேசேஜ் போடுவான் தெரியுமா. என்னனு போடுவான்.

ம்ம்ம். புகையிலை புற்று நோய் யை உண்டாக்கும், புகைபிடித்தல் உடல் நலத்திற்க்கு கேடு னு போடுவான்.

பரவால்ல மச்சா படத்தை பாக்கிறியோ இல்லையோ இதை லாம் நல்லா வாட்ச் பன்ற. சரி. புகைபிடித்தல் உடல் நலத்திற்க்கு கேடு னு சொல்றிங்களே அப்போ பீடி புடிக்கிறது, சுருட்டு புடிக்கிறதை பத்தி லாம் பேச மாட்டிங்களா. சிகரெட் மட்டும் தா புடிக்க கூடாது னு சொல்விங்களா னு கேட்டா உனக்கு என்ன தோனும்.

சரியான பைத்தியகாரனா இருப்பான் போல னு தோனும் மச்சா.

அதேதான். சிகரெட் உடல்நலத்திற்க்கு கேடு அல்லது பீடி உடல் நலத்திற்க்கு கேடு னு தனி தனியா போடாம புகைபிடித்தல் உடல்நலத்திற்க்கு கேடு னு பொதுவா போட்டா அதுல சிகரெட் யை மட்டும் குறிக்காது, சிகரெட், பீடி,சுருட்டு இப்படி எல்லாத்தையும் சேர்த்து பொதுவா சொல்றாங்க. அதே மாதிரி தான் நம்ப சிவன் இல்லை, அல்லா இல்ல, ஜீஸஸ் இல்ல னு தனி தனியா சொல்றதுக்கு பதிலா கடவுள் இல்லை னு சொல்றோம். கடவுள் இல்லை னு சொன்னா அது ஹிந்து மத கடவுள் யை மட்டும் சொல்றது இல்ல ஹிந்து, இஸ்லாம், கிருத்துவம் னு எல்லா மத கடவுளையும் சேர்த்து சொல்றது தான்.

செம்ம மச்சா. சூப்பரா சொன்னா டா. அப்புறம் ஹிந்து மதத்தையே திட்டுறிங்களே. ஏன் பிற மதத்துல பிரச்சனை இல்ல. அதை பற்றி லாம் பேச மாட்டிங்குளா னு கேட்டானே. அதுக்கும் பதில் சொல்றா மச்சா.

இரு மச்சி இன்னும் முடியல. அதே படத்துல இடைவெளி முடிஞ்சி படம் போடும் போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன வார்னிங் வீடியோ போடுவான் தெரியுமா.

ஆமா ஒரு அப்பா சிகரெட் புடிச்சி இரும்புவாரு. அவரோட குழந்தை பாக்கும். அது அப்புறம் கீழ போட்டுவாரு. அப்புறம் சரியா ட்யூன் பன்னாதா ரேடியோ மாதிரி ஒரு வாய்ஸ் ல ஒருத்தன் புகைபிடிக்கிற ஒவ்வொரு நபருக்கும் நாம் ஆண்டு தோறும் சேமித்து பார்த்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது. இது மிகவும் கொடிய நோய் னு சிகரெட் புடிக்கிற மாதிரி காமிப்பான்.

ம்ம்ம். அதே தான். அப்போ அவனுங்க கிட்ட ஏன் எப்ப பாத்தாலும் சிகரெட் புடிக்கிற மாதிரியே காமிக்குறிங்க. சிகரெட் ல மட்டும் தா பிரச்சனை இருக்கா, பீடி, சுருட்டு ல லாம் பிரச்சனை இல்லை யானு கேட்டா எவ்வளவு கேனத்தனமா இருக்குமோ அதே மாதிரி தா இவனுங்க கேக்குறதும். இங்கே பீடி, சுருட்டை விட சிகரெட் ல தா அதிகம் பிரச்சனை இருக்கு. நிறைய பேர் சிகரெட் தா புடிக்கிறாங்க. அதனால தான் இடைவெளி ல சிகரெட் புடிக்கிற மாதிரி காமிக்குறாங்க. அதே மாதிரி தா இதுவும் இங்கே எந்த மதம் பெரும்பான்மை மக்களை முட்டாள் ஆக்குதோ, எந்த மதத்தை அதிக மக்கள் பின்பற்றாங்களோ, எந்த மதத்துல பிரச்சனை அதிகமா இருக்கோ அதுக்கு தா அதிக முக்கியத்துவம் கொடுத்து எதிர்ப்பாங்க. பெரியார் மதம் மனிதனை மிருகமாக்கும் னு எல்லா மதத்தையும் தா சொன்னாரு. ஆனா ஹிந்து மதத்தை மட்டும் பெரியாரும், நம்பளும் அதிகமா எதிர்க்கிறோம்.  தன்னுடைய மதத்தை சேர்ந்த 97% மக்களை சூத்திரன் ( தேவிடியா பையன்)  னு எந்த மதமும் இழிவுபடுத்தல , சக மனிதனை தொட்டா தீட்டு னு அவனோட ஜாதியை வைச்சி ஒடுக்கி அவன் மேல அதிக்கம் செலுத்தல, நான்கு ஜாதியை நா தான் படைச்சேன் அதை நான் நினைச்சால மாத்த முடியாது னு எந்த மதகடவுளும் சொன்னதாக புராணங்களில் இல்ல ஹிந்து மதத்தை தவிர, ஜாதி, தீண்டாமை, மூட நம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், ஆபாச கதைகள் னு இப்புடி பிற மதங்களை விட மக்களுக்கு அதிக பாதிப்பையும், பிரச்சனையும் உண்டாக்குறது இந்த கேடுகெட்ட ஹிந்து மதம் தான் அதிகமா விமர்சிப்போம், முதலில் அழிக்க நினைப்போம்.
இதை போய் அவா கிட்ட சொல்லு.

சரிங்கோ னா. நன்னா பேஷா சொல்லிடுறேன். ஹாஹாஹா.

- குகன்