முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். பாஜகவின் (BJP - Black Money Janata party) செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்தன் நோக்கம், கள்ள நோட்டு ஒழியும், கருப்புப் பணம் ஒழியும், லஞ்சம் லாவண்யத்தை ஒழிப்பதற்கான முயற்சி, பயங்கரவாத செயல்களுக்கு வரக்கூடிய பணம் ஒழிப்பு. ஆனால் இவர்களால் ரூபாய் நோட்டுகளை கூட சரியாக அச்சிட முடியவில்லை. மத்தியப் பிரதேசத்தில் ஒரு வங்கியில் வழங்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில், அச்சுப் பிழை காரணமாக, காந்தி படம் இல்லாமல் வெளிவந்திருக்கிறது.

modi jaitley 330"Make in India" என்றார் மோடி. "Make for India" என்றார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். பார்வையற்றவர்கள் உலகில் ஒற்றைக்கண் கொண்டவரே அரசர் என்றார் ரகுராம் ராஜன். அவரின் நக்கலால் ஆத்திரப்பட்ட அருண் ஜெட்லியும், நிர்மலா சீதாராமனும் அவர் எல்லை மீறிப் போவதாக எச்சரித்தனர். அதற்கு ரகுராம் ராஜன் "எனது வார்த்தைகளால் பார்வையற்றவர்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறி பார்ப்பன பாசிச திமிர் பிடித்த ஆர்.எஸ்.எஸ் கும்பலை நாக்கைப் பிடுங்கி கொள்ளும் நிலைக்குத் தள்ளினார்.

வலிமையான அரசுகள் மக்களுக்கு வளமையைத் தருவதில்லை. வலிமையான தலைவரான ஹிட்லர் ஜெர்மனியைத் திறமையாகவும் உறுதியோடும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றார் என்று உதாரணமும் சொன்னார்.

"கார்பொரேட் நிறுவனங்களுக்கு அரசு முறைகேடான சலுகைகளை வழங்கி ஊட்டி வளர்க்கக் கூடாது. மாறாக கார்பொரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு சந்தையில் போட்டியிட்டு தொழிலை நடத்த வேண்டும். இல்லையென்றால் மூடிவிட்க்ச் சென்றுவிட வேண்டும். தனியொரு மனிதனின் வருமானத்தை எடுத்துக்கொண்டால் இந்தியா இன்னும் ஏழை நாடுகளில் ஒன்றாக இருப்பதை உணர வேண்டும்" என்றார்.

தரகு முதலாளிகளின் வட்டியைக் குறைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிர்பந்தம் கொடுத்தபோது "நாங்கள் யாருக்கும் தீபாவளி போனஸ் வழங்குவதில்லை" என்றார். இந்திய முதலாளிகள் சவால்களை எதிர்கொள்வதில்லை. நல்ல காலங்களில் இலாபத்தை அறுவடை செய்து கொள்ளும் இவர்கள், மோசமான தருணங்களில் வங்கிகளால் தூக்கி விடப்படுகிறார்கள் என்ற ஓட்டுண்ணித்தனத்தை நாறடித்தார்.

பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டுவிடுவதால் அது இளவரசியாகவிடாது என்றார். மனதளவில் ரகுராம் ராஜன் இந்தியர் இல்லை என்றார் சுப்ரமணியசுவாமி. பொதுத்துறை வங்கிகளை உங்கள் விருப்பம்போல் கொள்ளையடிப்பதை அனுமதிக்க இயலாது என்று இந்திய தரகு முதலாளிகளிடம் சொன்னார் ரகுராம் ராஜன். பணபலத்தாலும் அரசியல் பலத்தாலும் அவரை அந்த பதவிலிருந்து நீட்டிக்காமல் தூக்கியடித்தார்கள்.

பருப்பில் தண்ணீர் நிறைய ஊற்றி குழம்பு வைத்தால், பருப்பு விலையைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறிய பாபா ராம்தேவ், ஜியோ சிம் போன்ற இந்திய பெரு முதலாளிகளுக்காகவே இந்த அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. Make in India, Stand up India, Start up India, Digital India, Clean India, Cashless India என்று விதவிதமான வார்த்தை ஜாலங்களில் பேசுகிறார்கள்.

சுதந்திரத்திற்குப் போராடியதாக, தூக்கிலிடப்பட்ட ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இப்படித்தான் இருக்கிறது அவர்களின் செயல்பாடுகள். சுதந்திரத்திற்க்காகப் போராடிய காந்தி மட்டும் இப்பொழுது இருந்திருந்தால் அவரும் ஏடிம் வரிசையில் நின்றிருப்பார்.

இதுவரை நூறு பேருக்கு மேல் இறந்துபோய் இருக்கிறார்கள், மக்கள் இன்னும் வரிசையில் நிற்கிறார்கள் என்றால், நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் போது கியூவூம் அதிகமாகத்தான் இருக்கும் என்றார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி வாராக்கடன்களை அரசு வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. பசுவைக் காப்பதற்கு தனிச் சட்டம் இருக்கும் இந்த நாட்டில் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பணத்தை சுருட்டிக்கொள்ளும், நம்பிக்கை மோசடி செய்யும் முதலாளிகளை, அதிகார வர்க்கத்தைத் தண்டிப்பதற்கு தனிச் சட்டம் கிடையாது. இவர்கள் ஆட்சியில் எப்போது ஏழைகளுக்கு நீதி கிடைக்கும்? இவர்கள் ஆட்சியில் நீதி கிடைப்பது என்பது கால் இல்லாதவன் மரம் ஏறிப் பழம் பறிப்பது போன்றதுதான்.

- தங்க.சத்தியமூர்த்தி