harish mohammed 350பதவி ஏற்ற காலம் தொட்டு வெளிநாட்டு வாழ் இந்தியரை போல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வரும் மோடி அவர்களுக்கு வரவேற்புகளை விட எதிர்ப்புகள்தான் அதிகம் கிடைக்கின்றது.

மோடியின் அதிமுக்கியம் வாய்ந்த பயணமாக கருதபட்ட அமெரிக்க பயணத்தில் அவரை அமெரிக்க மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும், அமெரிக்க வாழ் இந்திய மக்களும் "Modi you are India`s prime murderer" என வரவேற்று அவருக்கெதிராக மக்கள் நீதிமன்றத்தை நடத்தி தங்களது எதிர்ப்பினை ஆக்ரோஷத்துடன் பதிவு செய்ததை இந்திய மீ(மோ)டியாக்கள் மறைத்த நிலையில் வைகறை வெளிச்சம் மக்கள் மன்றத்தில் தோலுரித்து கட்டியது.(பார்க்க வைகறை வெளிச்சம் நவம்பர் 2014)

தற்போது G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்ற மோடியை "Modi you have Blood on your hands" (மோடியே உனது கரங்களில் இரத்தம் உள்ளது) என குஜராத் மனித படுகொலையை நினைவுப்படுத்தி மோடி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வரும்போது பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

அதோடு அல்லாமல் 2002 குஜராத் படுகொலைக்கும் 1984 சீக்கிய கலவரத்திற்கும் நீதியை கேட்டு முழக்கமிட்டுள்ளனர்.

ஒரு இந்திய பிரதமருக்கு வெளிநாடுகளில் இத்துணை எதிர்ப்புகள் காட்டப்படுவதும் செல்லும் இடங்களெல்லாம் மக்கள் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

மோடியின் பயணங்களை புகழ்ந்து, எழும் எதிர்ப்புகளை மறைத்தும், முதல் பக்கம் தொடங்கி பக்கம் பக்கமாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும் அதனை வெளிநாட்டு ஊடகங்கள் பொருட்படுத்தவில்லை. G20 மாநாட்டிற்கு வரும் பல நாட்டு தலைவர்களின் படங்களையும் தனது முதற்பக்கத்தில் போட்டு அலங்கரித்த ஆஸ்த்திரேலிய பத்திரிக்கைகள் மோடியை கண்டுகொள்ளவேயில்லை.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இந்திய ஊடகங்கள் எல்லாவற்றையும் மறைத்து மோடிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என எழுதி வருகின்றனர். மக்கள் மன்றத்தில் மறைக்கப்படும் உண்மைகளை நாம் நமது வைகறை வெளிச்சத்தில் நெஞ்சுறத்தோடு தொடர்ந்து எழுதி வருகின்றோம்.

மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது இந்திய வர்த்தகக்குழு ஒன்றும் ஆஸ்திரேலியா சென்று வந்துள்ளது. அந்த குழுவில் குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியும் இடம்பெற்று ஆஸ்திரேலியா சென்று வந்தார்.

banner modi 600

( இந்த அதானி மோடிக்கு மிக நெருக்கமாக இருப்பதும், அதானி தேர்தலுக்காக மோடிக்கு பல்கோடிகளையும், தன் விமானத்தையும் தாரைவார்த்து ஊர் அறிந்த விடயம் )

ஆஸ்த்திரேலியாவில் கார்மிக்கேல் (குயின்ஸ்லேண்ட்) என்கின்ற இடத்தில் சுரங்கக் கம்பெனி ஒன்றை துவங்க அதானி குழுமத்திற்கு ஆஸ்த்திரேலிய அரசு அனுமதி கொடுத்திருக்கின்றது.

இந்த திட்டத்திற்காக அதானி குழுமத்திற்கு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பு சுமார் 61,532,000,000 ரூபாய்) கடனாக கொடுக்க இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முன்வந்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் ஏற்கனவே உள்ள நிலக்கரி சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால் அந்நாட்டில் சுமார் 400 சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டின் இருதியிலிருந்து சுரங்கம் செயல்படும் என அதானி குழுமம் உத்தரவாதம் அளித்துள்ளது. தோண்டப்படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்துவதற்காக நிலக்கரி தோண்டப்படும் இடத்திலிருந்து 400கி.மீ. தொலைவில் துறைமுகத்தையும், சுரங்கத்திலிருந்து துறைமுகம் வரையிலான 400கி.மீ. தூரத்திற்கு இரயில் பதையையும் அதானி குழுமமே அமைத்து கொள்ள வேண்டும் என்கின்ற விதியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

modi 350"Make in india" என்று முழங்கி வரும் பா.ஜ.க அரசு இத்துனை கோடி முதலீட்டை ஆஸ்திரேலியாவிற்கு தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம்? என்பதே இந்தியர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

மேலும் அந்நாட்டின் முதன்மை நிலக்கரிச் சுரங்க நிறுவணமான Glencore இந்நிறுவனத்திற்கு மொத்தம் 13 சுரங்கங்கள் உள்ளன) நஷ்டத்தில் இயங்கி வருவதால் அந்நிறுவனத்தின் 8000 ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறித்து அத்துறை சார்ந்த நிபுணர்கள் சொகின்றனர்.

தாழ்த்தப்பட்ட சிறுபாண்மை சமூகங்களின் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுப்பதற்கே இழுத்தடிக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆஸ்திரேலியாவில் நிலக்கரித்துறை தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் இத்துனை கோடி ரூபாய் ஒரு தனி நபருக்கு கடனாக எவ்வாறு கொடுக்கின்றது.

ஏற்கனவே விஜய் மல்லையா கிங்பிஷர் நிறுவணத்திற்கு பொதுத்துறை வங்கிகள் பலகோடி ரூபாய் கடனாக கொடுத்து அவன் கைவிரித்து அது விலையேற்றமாக யார் தலையில் சுமத்தப்பட்டது. அதே போல் நாளை அதானியும் கைவிரித்தால் யார் ஈடுகட்டுவது இத்துனை கோடி ரூபாய் இழப்பை?

நம் நாட்டின் பணத்தை அதிலும் பலர் சிறுக சிறுக சேமித்த பணத்தை ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய போகிறதே பா.ஜ.க அரசு நாளை ஆஸ்திரேலிய அரசு சட்ட விதிமுறைகளை மற்றி ஒப்பந்தம் செல்லாது என்று அறிவித்தால் அதானியால் கட்டப்படும் துறைமுகமும் 400கி.மீ இரயில் பாதையும் யாருக்கு சொந்தம்? இதற்கு வெளிநாட்டு வாழ் இந்தியராக மாறியுள்ள மோடியின் பதில் என்ன?

ஆக தனக்காக பல வகையிலும் உதவிய அதானியின் செஞ்சோற்று கடன் தீர்க்கவே மோடியின் இந்த ஆஸ்திரேலிய பயணமும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கடனுதவியும்.