இந்தியாவில் குண்டுவெடிப்புகள், தீவிரவாத தாக்குதல்கள் இவை வித்தியாசமான பல திருப்பங்களைச் சந்தித்து வருகின்றன.

     காரணம், இந்துத்துவவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

     ஆனால், நமது அரசுக்கு இரகசிய ஆலோசனைகளை வழங்கிடுவோர் பல குண்டு வெடிப்புகளை நடத்தி அவற்றில் முஸ்லிம்களைச் சம்மந்தப்படுத்தி வருகின்றார்கள்.

     டிசம்பர் 6 ஐ மையப்படுத்தி ஒரு பெரும் கபளீகரத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். முஸ்லிம்களை இன்னொரு முறை மூச்சுத்திணறவைத்து விட்டார்கள். ஆனால் டிசம்பா 6 நாடெங்கும் அமைதியாகவே கழிந்தது, உளவுத்துறையும் காவல்துறையும் ஏற்படுத்திய கபளீகரங்களைத் தவிர. ஏற்படுத்திய பரபரப்பைப் பயன்படுத்தி, பல அப்பாவி முஸ்லிம்களைக் கைதும் செய்துவிட்டார்கள்.

     absal_370இந்நிலையில் மும்பைத் தாக்குதல், கஷ்மீரைச் சார்ந்த அப்பாவி அப்சல் குரு ஆகியோர் பற்றிய செய்திகளும் நமது ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டன.

     இதில் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலையில் தண்டனைப் பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் இவர்களை தூக்கிலிருந்து காப்பாற்றிட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களைப் காப்பாற்றிட முயற்சிகளை மேற்கொண்டவர்கள், அப்சல் குருவைப் பற்றியும் பேசினார்கள். இன்னும் ஒரு படிமேலே போய் தூக்குத்தண்டனைக்கு எதிராக ஒரு போர்க்கொடியைத் தூக்கினார்கள். இந்த இயக்கம் இன்றளவும் நடைபெற்றுவருகின்றது

     ஏற்கனவே தூக்குத் தண்டனையை எதிர்த்துக் கொண்டிருந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.அப்சல் குருவின் வழக்கு, இன்னும் விசித்திரம் நிறைந்தது. அப்சல் குருவை தூக்கில் போட்டிட நமது உச்ச நீதி மன்றம் எந்த உருப்படியான காரணத்தையும் சொல்லவில்லை. சொன்ன காரணம் இதோ !      

"பெரும் (உயிர்)இழப்புகளுக்குக் காரணமான இச்சம்பவம் தேசம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குற்றவாளிக்கு மரணதண்டனை அழிப்பதன் மூலமே சமூகத்தின் கூட்டுமனசாட்சியைத் திருப்திப்படுத்த முடியும்" உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் மொழிபெயர்ப்பு.

     நமது இந்திய தண்டனைச் சட்டத்தில், இப்படிக் காரணம் சொல்லி ஒருவரைத் தூக்கில் போடலாம் என்று எங்கேயும் சொல்லிடவில்லை. என்கின்றனர் சட்டமேதைகள்.

     ஆனால் நம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாங்கள் சொல்வதெல்லாம் சட்டம், இதில் நாங்கள் எந்த நீதி நெறியையும் பின்பற்றிடத் தேவை இல்லை என்ற பாங்கிலேயே தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

     இந்நிலையில் தான் பிரிதொரு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

பாகிஸ்தானில் குண்டு வைத்த இந்தியர்.

     அதாவது ஜேராப் சிங் என்பவர் இந்திய குடிமகன். பாகிஸ்தானில் வாழ்ந்து வந்தவர்.

     இவர் 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒரு தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தினார். இந்தக் குண்டுகள் வெடிப்புகள் பாகிஸ்தானிலுள்ள முக்கிய நகரமாகிய லாகூர், முல்டான் ஆகிய இடங்களில் நடை பெற்றன 14பேர் உயிரிழந்தார்கள்.

     'ஜேராப் சிங்' இன் இயற்பெயரை 'மிகச் சிலரே' அறிவார்கள். அவர் "ஜால்சித் சிங்" என்ற பெயரிலேயே பாகிஸ்தானில் உலவிவந்தார்.

     குண்டு வெடிப்பு நடந்த பல நாள்களுக்குப் பின்னர்தான் இவரே குண்டுவெடிப்புகளின் மூளை என்பதும் இவருடைய இயற்பெயர் "ஜோராப்ஜித் சிங்" என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

     வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவர், தான், குண்டு வைக்க திட்டமிட்டதிலிருந்து அனைத்தையும் செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டது. 14 அப்பாவி பாகிஸ்தானிய குடிமக்கள் மரணத்திற்குக் காரணமான இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.பின்னர் பாகிஸ்தானின் உச்ச நீதி மன்றமும் இந்த மரண தண்டனையை உறுதி செய்தது.

     ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப் படவில்லை, காரணம் நமது இந்திய அரசு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவரை விட்டுவிட வேண்டும் என பாகிஸ்தான் அரசைக் கேட்டுக் கொண்டதுதான்.

     இரண்டு முறை "ஜோராப்ஜித் சிங்" ஐ தூக்கில் போட்டிட நாள் குறிப்பிடப்பட்டு இரண்டு முறையும் மனிதாபிமானத்தின அடிப்படையில் தள்ளிப் போடப்பட்டது. நமது இந்திய அரசின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

     ஆனால் "ஜேராப்ஜித் சிங்" இன் குடும்பத்தவர்கள் அவரை சிறையிலிருந்தே விடுவிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றார்கள்.

     ஆனால்....!

     அப்சல் குரு நம் நாட்டின் குடிமகன்தான்.

     அவர் சட்டப்படி குற்றவாளி என்பது நிரூபிக்கப்படவில்லை. அவரைத் தூக்கிலிட நமது உச்ச நீதி மன்றம் கூறியுள்ள காரணத்தை நம் நாட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நம் நாட்டில், மக்களைத் திருப்திபடுத்திட ஒருவரை தூக்கிலிடுவது இதுதான் முதல் முறை. அவர் முஸ்லிமாக இருப்பதாலும் கஷ்மீரைச் சார்ந்தவராக இருப்பதாலும் தூக்கிலிட அவர் இரட்டிப்புத் தகுதிகளைப் பெற்றுவிடுகின்றார்.

     இதில் வேதனை என்னவெனில் பாகிஸ்தானில் குண்டு வைத்த குடிமகனுக்கு மனிதாபிமானம் காட்டப்பட வேண்டும் எனக் கோரும்நாம் அப்சல் குருவை சட்டப்படி நடத்தவே தயங்குகின்றோம். நமது உச்ச நீதி மன்றத்தின் கூற்றுப்படி நம் சமுதாயத்தின் மனம் திருப்தியடைய அப்சல் குரு தூக்கில் போட வேண்டும்.

     ஐந்தறிவு படைத்தவை கூட சமயத்தில் நீதியோடு நடந்திடும்போலும்.

     அப்சல் குருவை சம்மந்தப்படுத்தியுள்ள நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து “PUDR” ‘People’s Union For Democratic Rights ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் தந்த அறிக்கை நாடாளுமன்றத் தாக்குதல். கஷ்மீரில் இயங்கிக் கொண்டிருந்த அரசு சிறப்புப் படையின் கை வண்ணம் என்கின்றது. அந்த உண்மை இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதை மீண்டும் இங்கே தருகின்றோம்.

     Finally. Parts of afsal’s 313 When Conjoined and Interpreted, ralse dark issues about the complicity of the security agencies in the conspiracy

     அதாவது "அப்சல் குருவிடம் 313 (CRPC) இன் கீழ் வாங்கப்பட்ட வாக்குமூலத்தை இதர சாட்சியங்களோடு ஒப்பிடும் போது (நாடாளுமன்ற தாக்குதல்) சதியில் பாதுகாப்புப் படையினரும் உண்டு என்ற கசப்பான உண்மைப் புலப்படுகின்றது"

     Source : December 13 Terror over democracy page 47 a document by pudr.

     இந்த வழக்கில் வாதிடும் போது தான் முன்னாள் சட்ட அமைச்சர் இராம் ஜெத்மலானி இப்படிப் பேசினார்.

     This is case of no evidence. The Law of evidence has been Treated as non existent. The provisions of the code of Criminal procedure and Ev idence act have neen Flagrantly Violated.

     எந்த அத்தாட்சியுமில்லாத வழக்கு இது. சாட்சியத்திற்கான சட்டம் ஒன்று இல்லை என்ற அளவுக்கு சாட்சியத்திற்கான சட்டங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதேபோல் குற்றத்தை நிரூபிக்கப் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளும் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.

     இத்தனைக்கும் பிறகும் அப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா....?

     அவருக்கு அனுதாபம் காட்டச் சொல்லவில்லை மடிப்பிச்சைக் கேட்கவில்லை. மாறாக சட்டத்தின் படி நீதி வழங்ககோருகின்றார்கள் மக்கள்.

     செய்தி ஆதாரம்....

     The Hindu sept 1,2011, NOV 12,2011.

மேலும் விபரங்களுக்குப் படியுங்கள். வேர்கள் வெளியீட்டகத்தின் வெளியீடான ‘நாடாளுமன்றத் தாக்குதல் – வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்’

Pin It