பாகிஸ்தான் ஆட்சியாளர்களைப் போல் தன் சொந்த மக்களுக்குத் துரோகம் செய்தபர்கள் இந்த உலகில் வேறு எங்குமில்லை.

"பர்வேஷ் முஷ்ரப்" என்ற சர்வாதிகாரி ஆட்சி செய்தபோது, பாகிஸ்தானின் அப்பாவி இளைஞர்களைப் பிடித்து அமெரிக்காவிடம் தந்தார். அவர்களைத் தீவிரவாதிகள் என்றும், அல்காயிதா என்ற அமைப்பின் அங்கத்தினர்கள் என்றும் முத்திரைக் குத்தித்தான் அமெரிக்காவிடம் ஒப்படைத்தார்.

இவர்கள் கவுண்டனாமோ சிறைகளுக்கு அனுப்பப்பட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள்.

அப்பாவிகளான அந்த இளைஞர்கள் தங்களைத் தீவிரவாதிகள் என ஒத்துக் கொண்டு வாக்கு மூலங்களைத் தந்திடும் வரை சித்திரவதைகள் தொடர்ந்தன. ஒவ்வொரு இளைஞனுக்கும் இத்தனை டாலர்கள் என லஞ்சம் பெற்றார் முஷ்ரப். தான் சொந்தமாக லஞ்சம் வாங்கியது அல்லாமல், பாகிஸ்தானுக்கும் பணம் பெற்றார்.

     அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு தாராளமாகப் பணத்தை அள்ளிக் கொட்டியது. அமெரிக்கா தனது மக்களிடமும், மகான்களிடமும் பாகிஸ்தானுக்குத் தாரை வா£க்கப்படும் பணம் தீவிரவாதத்திற்கு எதிரானப் போரில், பாகிஸ்தானை இணைத்திட தரப்படும் உதவிகள் என விளக்கம் சொன்னார்கள்.

                அமெரிக்கா பாகிஸ்தானின் மதரஸாக்கள்தாம் ஆப்கானிஸ்தான் முஜாஹித்களை உருவாக்குகின்றது என்றார்கள். அந்த மதரசாக்களை அழிப்பதற்கு ஆவன செய்தார்கள் அமெரிக்கர்கள். தாராளமாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தனது விமானத்தளங்களையும், போர் விமானங்களையும் அமெரிக்கர்களுக்குத் திறந்துவிட்டார் முஷாரஃப்.

                பல பாகிஸ்தான் போர் விமானங்கள் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை யோரத்திலுள்ள மதரசாக்களை நோக்கிப் பறந்தன. ஒரே இரவில் 800 மதரஸா மாணவர்களும் ஆசிரியர்களும் குண்டுவீச்சுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

                இப்போது பாகிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள், இந்த முஷாரஃப்புக்குச் சற்றும் இளைத்தவர்களல்ல.

கேசாப்- ஐ தூக்கிலிடுங்கள்...

                இப்போது இப்படியரு கூப்பாட்டை போடுபவர்கள் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் தாம். அவர்கள் இப்படி ஒரு கூப்பாட்டைப் போடுவது கேசாப் குற்றவாளி என்பதால் அல்ல, மாறாக கேசாப் போன்றவர்களைத் தூக்கிலே போட்டால் ஜோராப்ஜித் சிங் போன்றவர்களைத் தூக்கிலே போடலாம் என்பதால்தான்.

                ஆனால் கேசாப் மும்பை தாக்குதல் நடந்த 2008 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே 2006 முதலே நம்மவர்களின் கைகளில் இருக்கின்றார். அவருக்கும் மும்பைத் தாக்குதலுக்கும் எள் மூக்கின் முனை அளவு கூட தொடர்பில்லை. இந்த உண்மைகளை எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்கள் கர்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலில் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். ஆனால் பாகிஸ்தான் வழக்கம் போல் தன் சொந்த குடிமக்களின் உயிரை தன் சுயநலத்திற்காக பகடைகாயாகப் பயன்படுத்துகின்றது.

                உண்மையிலேயே பாகிஸ்தான் நகர்த்திய பல காய்கள் நமது இந்திய அரசுக்கும், தீவிரவாதத்தின் உண்மை முகமாகிய, சங்கப் பரிவாரத்திற்கும் பயங்கர நெருக்கடிகளைத் தந்து கொண்டிருக்கின்றன.

                ஆமாம் ! நமது இந்திய அரசை நோக்கி நீங்கள் கேசாப் -ஐ தூக்கில் போடுங்கள் அதே வேகத்தில் 'ஷம்ஜோத்தா' ரயிலில் குண்டு வைத்த இந்துத்துவ வாதிகளையும் தூக்கில் போடுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த அரசியல் நரித்தனங்களுக்கு இந்திய குடிமக்களாகிய நாமும், பாகிஸ்தான் மக்களும் எந்த ஆதரவையும் தந்திடவில்லை. காரணம் இரண்டு நாட்டுக் குடி மக்களும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் அப்பாவிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த நிலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் காப்பாற்றப் படவேண்டும் இதில் அரசியல் விளையாட்டுகள் அர்த்தமற்றவை.

                நீதி நிலைக்கட்டும்.

Pin It