கர்கரேயைக் கொலை செய்தது யார்?.. என்ற நூலைத் தமிழில் கொண்டு வந்திட வேண்டும் என முடிவு செய்தபோது நூலாசியர் எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்களும் வெளியீட்டாளர் பெரோஸ் மீடியாவும் ஆர்வமுடன் அனுமதி தந்தார்கள்.

மிக வேகமாக மொழிபெயர்த்து அதைத் தமிழில் கொண்டு வந்தோம். மதுரையில் வெளியிட்டோம். அதன் பிறகு அதனை மாவட்டந்தோறும் வெளியிடும் ஒரு மகத்தான இயக்கத்தையும் நடத்தினோம். உண்மையைச் சொன்னால் இந்தியத் தீவிரவாதத்தின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வந்தோம்.

அதனை கும்பகோணத்தில் வெளியிடும் பணியை அண்ணன் டி.எம். உமர் ஃபாரூக் மேற்கொண்டார்கள். மயிலாடுதுறையில் வெளியிடும் பணியை தம்பி அப்துல் ரவூஃப் அவர்கள் மேற்கொண்டார்கள்.

ஆனால் நிகழ்ச்சியை தடுக்க, உளவுத்துறையும், அதன் கடைக்கண் அசைப்பில் இயங்கிய காவல் துறையும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. உள்ளூரிலுள்ள காவல்துறையினர் தன் கைப்பாவையினரையும் முடுக்கிவிட்டார்கள்.

தம்பி அப்துல் ரவூஃப் ஆடிட்டர் அப்துல்லாஹ் உள்ளிட்ட குழுவினர் பம்பரமாகச் செயல்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்க உளவுத் துறை மேற்கொண்ட முயற்சியில், பல முஸ்லிம் முஹல்லாக்களில் துண்டுப்பிரசுரங்கள் கொடுப்பதைத் தடுத்தார்கள். இதனை அவர்கள் நேரடியாகச் செய்திட வில்லை.

உள்ளூரிலுள்ள தங்களது கைக் கூலிகளையே பயன்படுத்தினார்கள்.எப்போதும், முஸ்லிம்களோடு மோதுவதில்லை, என்ற நமது முடிவை குலைத்திட தங்களால் இயன்றதையெல்லாம் செய்தார்கள். நாம் உறுதியாக நின்றோம் நமது முடிவில்.

நாம் ஒட்டிய சுவரொட்டிகளின் மேல் சுவரோட்டிகளை ஒட்டிட தங்களால் இயன்றதையெல்லாம் செய்தார்கள். இதில் இந்துத்துவ சக்திகள் உளவுத்துறைக்குப் பல்வேறு பகுதிகளிலும் உதவிசெய்தன. ஆகவே மயிலாடுதுறையில் அவர்கள் துணை நின்றதில் நமக்கொன்றும் ஆச்சரியம் இல்லை.

இதனிடையே தம்பி அப்துல் ரவூஃப் மீது மொட்டைப் பெட்டிஷன்கள் பறந்துகொண்டிருந்தன. இது நமக்குத் தெரியாது தெரிய வாய்ப்பில்லை.

எல்லா தடைகளையும் தாண்டி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

நமது கர்கரேயைக் கொலை செய்தது யார்?. என்ற நூலின் மகத்துவம் என்னவெனில், அதில் பொதிந்துகிடக்கும் உண்மைகள் முஸ்லிம்களையே சுற்றிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. மாறாக அஃது. சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்களைச் சென்றடைந்திட வேண்டும். ஆகவே சகோதர சமுதாயத்தவர்களிடம் இதனைக் கொண்டு சேர்ப்பதில் நாம் முழுமையாகக் கவனம் செலுத்தினோம்.

முஸ்லிம்களிடையே ¬க்கூலிகளைக் கண்டுபிடித்த உளவுத்துறையினருக்கு சகோதர சமுதாயத்தில் ஊடுருவுவதில் அதிக சிரமம் இருக்கவில்லை.

ஆனால் உண்மையை விரும்புகின்றவர்கள் எல்லா இடமும் இருக்கின்றார்கள். அந்தச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் நிரம்பவே வந்தார்கள் ஆனாலும் பலரை காவல்துறையினர் வரவிடாமல் தடுத்துவிட்டார்கள். இதற்கு அவர்கள் ஒரு தனியுக்தியைக் கடைப்பிடித்தார்கள்.

நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்கு வெளியே நின்றுகொண்டார்கள். வந்துகொண்டிருந்த சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்களை பல கேள்விகளைக் கேட்டுத் துழைத்தெடுத்தார்கள். நீங்கள் எங்கே போகின்றீர்கள் என்பதே முதல் கேள்வி. அவர்கள் நாங்கள் நிகழ்ச்சிக்குப் போகின்றோம் எனச் சொன்னால், அஃது முஸ்லிம்கள் நிகழ்ச்சி நீங்கள் ஏன் அங்கே போகின்றீர்கள், கலகம் விளைவிக்கவா? என்ற கேள்விக்கனைகளைத் தொடுத்தார்கள். இந்த கேள்விகளுக்குப் பின், சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் நிச்சயமாக நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள்

உளவுத்துறையின் இந்த வினாவையும் விஞ்சி. சிலர் நிகழ்ச்சி எல்லோருக்குந்தான் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல, எங்களையும் அழைத்தார்கள் என்று சொன்னால். அழைப்பிதழ் கையிலுக்கின்றதா? எனக் கேட்டார்கள்.

உண்மையில் நாம் நோட்டீஸ் என்ற கையேடுகளை விநியோகித்தோம் தம்பி ரவூஃவும், மற்றவர்களும் அனைவரையும் அழைத்தார்கள். ஆகவே யார் கையிலும் அழைப்பிதழ் இல்லை. இதையே காரணம் காட்டி அவர்களை உள்ளே வரவிடாமல் தடுத்துவிட்டார்கள்,

இத்தனைக்கும் பிறகும் சிலர் உளவுத்துறையின் கண்களுக்கு அகப்படாமல் அரங்கத்திற்கு வந்துவிட்டார்கள்.

அரங்கத்தில் சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டது உளவுத்துறைக்கு ஓர் அதிர்ச்சியாகவே இருந்தது. அத்தனை கோபமும் தம்பி அப்துல் ரவூஃப் அவர்கள் மீதே பாய்ந்தது.

தங்களை உளவுத்துறையினர் எப்படி யெல்லாம் தடுத்தார்கள், என்பதை, சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் எங்களிடம் விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

அதில் முத்தாய்ப்பாக அமைந்தது மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அவர்கள் வைத்திருந்த அறிவுப்புப்பதாகை(பிளக்ஸ்) ஏறத்தாழ ஐந்து நாட்கள் அப்படியே நின்றது.

 'அபிநவ் பாரத்' என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு அதன் பின்னணியில், நமது மத்திய உளவுத்துறை இவைதான் நேர்மையான அதிகாரி கர்கரேயைக் கொலை செய்தது என்ற செய்தி பட்டி தொட்டியெங்கும் பரவின.

நிகழ்ச்சியைத் தடுக்க மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோற்றுப்போகவே, வேறு வழியின்றி தம்பி அப்துல் ரவூஃப்- ஐ குறிவைத்தார்கள் காவல்துறையினர்.

இந்துத்தீவிரவாதிகளைக் கொண்டு மொட்டைப் பெட்டிஷன்களைப் போட வைத்தார்கள். அப்துல் ரவூஃப் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்தைக் குறிவைத்தார்கள்.

நகராட்சியைக் கொண்டு அவருக்கோர் தாக்கீது அனுப்பினார்கள். கட்டிடத்தின் மாடிகள் அனுமதி இல்லாமல் கட்டப்படுவதாகவும், அதனை இடிக்கத் தயாராக இருப்பதாகவும், அறிக்கை விட்டார்கள். பட்டாங்கமாக அதனை வெளியிட்டன பத்திரிகைகள்.

பத்திரிகைகளில் வந்தனவற்றைச் சுட்டிக் காட்டி லட்சக்கணக்கில் கேட்டார்கள். ஐந்து பைசா கூட தந்திட இயலாது எனக்கூறி சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் ரவூஃபும், ஆடிட்டர் அப்துல்லாஹ்வும் வெற்றியும் பெற்றனர்.

அதனை பொறுத்துக் கொள்ள மாட்டாமல் வேறு உபாயங்களைக் கையாண்டார்கள் காவல்துறையினர் தொடர்ந்தன மொட்டைப் பெட்டிஷன்கள்.

அதுவும் வெற்றி பெறாமல் போனதால் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில்தான், ஜூலை மாத நிகழ்வுகள் இடம் பெற்றன. மன்சூர் கைலி சென்டர் அப்துல் ரவூஃப் அவருடைய நண்பர்கள் எல்லோரையும் பழிதீர்க்க களமிறங்கினர்.             

காவல்துறையினர் பின்னணியில் உளவுத்துறையினர்.

 "கூடாஒழுக்கமுள்ள" சிலர் தங்கள் கேளிக்கைக்குப் பயன்பட்ட பெண்கள் மாட்டிக் கொண்டால் தங்கள் கீர்த்தியும் கித்தாப்பும் தரையிலே விழும் என்பதால் அலறிஅடித்துக் கொண்டு களமிறங்கினர். பணத்தைத் தண்ணீராய் கொட்டினார்கள்.  

அவர்களுக்கு மானமா? மரணமா? என்பதே வினா?

தங்கள் கைகளிலிருந்த சங்கப் பரிவாரக் கும்பலை, உசுப்பிவிட்டார்கள். ஒழுக்கக் கேடான ஒரு விஷயத்தை வகுப்புவாதப் பிரச்சனைபோல் சித்தரித்தா£கள். காவல்துறையினர் போதிய அளவில் உதவி செய்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு இதுதான் நேரம். மட்டுமல்ல பணம் தாராளமாகப் புழக்கத்தில் விடப்பட்டது.

நடந்தது என்ன? என்பதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல், கர்கரே நிகழ்ச்சியை நடத்தியது நீதானா எனக் கேட்பதிலேயே குறியாக இருந்தார்கள். இதைக்கொண்டே தம்பி அப்துல் ரவூஃப் அவர்களையும் ஏனையயோரையும் சித்திரவரைச் செய்தார்கள்.

அத்தனை பேரையும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியது மட்டுமல்லாமல், மின்சாரத்தை தலையிலே பாய்ச்சி சித்திரவதை செய்தார்கள்.

இதனிடையே முஸ்லிம்கள் பெருமளவில் காவல் நிலையத்தின் முன் குழுமினார்கள். சமுதாய சேவகன் ஒருவனை எப்படி இப்படி சித்திரவதை செய்யலாம். போலிப் புகார்களைக் கொண்டு எப்படி அவர்களை இப்படி அல்லல்களுக்குள் ளாக்கலாம் என்றெல்லாம் வினாக்கள் பறந்தன. எதற்கும் பதில் சொல்லிடாத அதிகாரிகள் ஒரு சில போலிவழக்குகளைச் ஜோடித்தார்கள்.

சிறையிலடைக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.

அதன் பின்னர் அவர்கள் விட்ட புருடாக்களும், பத்திரிகைகளை அவர்கள் பயன்படுத்திய விதமும்... அடுத்த இதழில்...

Pin It