பாபரி மஸ்ஜித் - இல், எத்தனை அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டன எனபனவற்றை வைகறை வெளிச்சத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். குறிப்பாக வருடந்தோரும் டிசம்பர் மாத இதழை இதற்காகவே அர்ப்பணித்து வருகின்றோம்.

       பாபரி மஸ்ஜித் சம்மந்தமான வழக்கில், நீண்ட நாள்களாக எதிர்பார்த்த தீர்ப்பு, செப்டம்பர் 30, 2010 இல் வந்தது. வேறுசொற்களால் சொன்னால் செப்டம்பர்30,2010இல் அலஹாபாத் நீதி மன்றத்தின், பட்டவர்தனமான அநியாயம் அம்பலமான பின்னர், நாம் தொடர்ந்து பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டோம்.

       பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. செப்டம்பர் 30, 2010 அலஹாபாத் நீதிபதிகளின் இந்துத்துவப் பிதற்றல்களுக்குப் பின்னும், முன்னும், இதில் அற்புதமான பல நடவடிக்கைகளை எடுத்தவர்கள் டீஸ்டா செட்டல்வாட் போன்ற பல நல்ல நங்கைகள் அனுபவம் குப்தா மனோஜ் மித்தா போன்றவர்கள்தாம். இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான இர்பாஃன் ஹபீப் அவர்கள் இதில் காட்டி வரும் ஆர்வம் அலாதியானது. இவர் இடதுசாரி சிந்தனையாளர்களில் ஒருவர். முஸ்லிம்கள் ஒரு பெரும் தளர்ச்சிக்கும் விரக்திக்கும் ஆளாகி செய்வதறியாமல் அப்படியே இருந்து விட்டார்கள்.

       தீர்ப்பு குறித்து பல ஆய்வுகளை நடத்தியவர்களும் அவர்களே! அந்த ஆய்வுகளில் அகழ்தெடுத்த உண்மைகளை, (இவை பல அதிர்ச்சிகளைத் தந்திடும் உண்மைகள்) உலகறிய செய்து வருகின்றார்கள்.    

       அவற்றையும் இவற்றில் நாம் தொடர்ந்து தந்து வந்த உண்மைகளையும் மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.

        ஆய்வாளர்களின் கருத்துப்படி, பாபரி மஸ்ஜித் பற்றிய சிந்தனைகள், வாதங்கள், விவாதங்கள், நீதி மன்ற தீர்ப்புகள் அனைத்தும், டிசம்பர் 22, 23,1949 -ஐ மையமாகக் கொண்டே அமைந்திட வேண்டும்.

       சட்ட மேதைகள் - அனுபவம் குப்தா, போன்றவர்கள், சமூக ஆர்வலர்கள் டீஸ்டா செட்டல் வாட் பத்திரிகையாளர் மனோஜ் மித்தா போன்றவர்கள், பாபரி மஸ்ஜித் குறித்த வரலாற்றுத் திருப்பம் டிசம்பர் 22, 23, 1949 தான் ஏற்பட்டது என அழுத்தமாக கூறுகின்றார்கள்.

       இந்த டிசம்பர் 22,23, 1949 இல் தான் பாபரி மஸ்ஜித்-உள்- இரண்டு சிலைகள் வைக்கப்பட்டன.

       இன்றளவும் 1949 (22-23) இரவில் சிலை வைத்தவர்கள் திடுதிப்பென்று யாரும் அறியாமல் சிலையை வைத்து விட்டார்கள் என்றே மக்களிடம் கூறி வந்தார்கள். பல ஆய்வாளர்களும் இதையே கூறிவந்தார்கள். நீதி மன்றங்களிலும் இதுவே கூறப்பட்டு வந்தது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோர் இப்படியே நம்பியும் எழுதியும் வந்தார்கள்.   ஆனால் அன்று நிகழ்ந்தவை திடு திப்பென நடந்தவை அல்ல. மாறாக, அவை, திட்ட மிட்ட சதியே, இதனை நாம் வைகறை வெளிச்சத்தில், தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.

       எனினும் இப்போது பல அந்தரங்கமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன, அவற்றையும் இங்கே தருகின்றோம் ஆனால் இந்துத்துவா வாதிகள் இன்றளவும் அந்த சிலைகள் தானாகத் தோன்றியவை எனக்கூறி வருகின்றார்கள். 1949 டிசம்பர் 22, 23க்கு முன்பே சிலைகளை பாபரி மஸ்ஜித்- இன் உள் சிலைகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற உளவுத் தகவலும் அரசுக்குத்தரப்பட்டன. அரசு தான் அவற்றை உதாசீனப்படுத்தியது வேண்டுமென்றே சிலைகளை வைப்பதற்கு உதவி செய்தது. அந்த உதவியை நடவடிக்கைகள் எடுக்காமலிருந்ததன் மூலம் செய்யப் பட்ட உதவி எனலாம்.

       ஆமாம் ஓர் அநியாயம் நடக்கப் போகின்றது என்பது தெரிந்த பின்பும் அதைத் தடுக்காத இந்திய அரசு அன்றே ஒரு பெரும் துரோகத்தைச் செய்து விட்டது.

       இங்கே ஆய்வாளர்கள் அனைவரும் மூத்த வழக்கறிஞர்களும் ஒரு விவகாரத்தில் மிகவும் மனமொடிந்து போய் நிற்கின்றார்கள். அந்த விவகாரம், அலஹாபாத் நீதிமன்ற விவகாரந்தான். அஹர்வால் என்ற நீதிபதியின் 5019 பக்கங்களும், நீதிபதி வர்மாவின் 1130 பக்கங்களும். வரலாற்றைப் புரட்டிப்போடும் 1949 நிகழ்வைப் பற்றி நான்கு வார்த்தைகளைத் தாம் சொல்லுகின்றனர்.

       நீதிபதி எஸ்.யூ கானின் தீர்ப்பு மட்டுந்தான், 1949 டிசம்பர் 22-23 இல் மஸ்ஜித் - இன் உள் சிலை வைக்கப்பட்ட விவகாரம் பற்றி சற்று விரிவாகப் பேசுகின்றது.

       இதனால் அனுபம் குப்தா அவர்கள் நீதிபதி அஹர்வால் நீதிபதி வர்மா ஆகியோரின் தீர்ப்புகளை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டெறிவதற்கு இது ஒன்றே போதும் என்கின்றார்கள்.அத்வானியிடம் கேட்ட கேள்வி:

       அடுத்து - 1949 - இல் சிலைவைக்கப்பட்ட நிகழ்வு, யாருடைய ஏற்பாடுமல்ல, அந்தச் சிலைகள் தாமாக பாபரி பள்ளிவாசலுக்குள் தோன்றியவை என உலகப் புகழ் பொய்யர் அத்வானி பிதற்றி வந்தார்.

       அவர்- அத்வானி- லிபர்கான் கமிஷன் முன் தோன்றினார். விசாரணைக்காக,

       அந்த விசாரணையின் போது லிபர்கான் கமிஷனின் அதிகாரப் பூர்வமான வழக்கறிஞர் அனுபம் குப்தா அவர்கள் அத்வானியிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.

       "அறிவும், விஞ்ஞானமும் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், இப்படியொரு நிகழ்வு, அதாவது சிலைகள் தாமாக மஸ்ஜித்துக்குள் வந்த நிகழ்வு நடந்திருக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா? உங்களுடைய பகுத்தறிவு அதை எற்றுக் கொள்கின்றதா?

       இந்தக் கேள்விக்கு அத்வானி எந்தப் பதிலையும் சொல்லவில்லை எனவே மீண்டும் ஒரு முறை இதே கேள்வியைக் கேட்டார் அனுபவம் குப்தா.

       ஆனால் நீதிபதி லிபர்கான் புகுந்து அத்வானியை இப்படி இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஆளாக்காதீர்கள் எனக் கூறி விட்டார்கள்.

       இப்படி அத்வானியைக் காப்பாற்றினார் நடுநிலையோடு நடந்திட வேண்டிய நீதிபதி லிபர்கான்.

       அனுபம் குப்தா - அத்வானியே இதை நம்பிடவில்லை - அதாவது சிலைகள் தாமாகத் தோன்றின என்பதை நம்பவில்லை - என்று நீதிபதி பதிவுப் புத்தகங்களில் லிபர்கான் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதையும் செய்ய லிபர்கான் மறுத்து விட்டார்.

       ஆக இந்துத்துவ வாதிகளே நம்பாதவை இந்தியாவில் நாட்டு நடப்பாக ஆகிவருகின்றது.

விசாரணையைச் சந்திக்காத எப். . ஆர் என்ற முதல் தகவல் அறிக்கை.

       இந்த உலகில் ஒரு முதல் தகவல் அறிக்கை, 60 ஆண்டுகளாக எந்த விசாரணையையும் சந்திக்க வில்லை. அந்த முதல் தகவல் அறிக்கை 1949 இல் பாபரி மஸ்ஜித் இல் அத்து மீறி சிலைவைக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கைதான்.

       உண்மையிலே இந்த முதல் தகவல் அறிக்கை விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்குமேயானால் அந்த அறிக்கையின் மீது உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமேயானால், நிச்சயமாகப் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்காது. 60 ஆண்டுகளாக அதனை பிரச்சனையாக்கியவர்களால் எதையும் சாதிக்க முடிந்திருக்காது.

       தலைமுறை, தலைமுறையாக பாபரி மஸ்ஜித்-ஐ கோயிலாக மாற்றிடலாம் என்ற எண்ணம் இந்து இளைஞர்களிடையே வளர்வதற்கும் வாழ்வதற்கும் தளம் அமைத்துத் தந்ததும் சிலைகள் அங்கே நிரந்தரமாக இருந்ததுதான். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமேயானால் பாபரி மஸ்ஜித் பிரச்சினை அன்றே முடிந்திருக்கும்.

       அன்று பதிவான முதல் தகவல் அறிக்கை முறையாக புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாதது தான்.

அன்றைக்கிருந்த அரசின் நடவடிக்கைகள்..?

       அன்று 1949 - இல் இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள். சிலைகளை அகற்றிட வேண்டும். என்றொரு கடிதத்தை உத்திரபிரதேச முதல்வருக்கும் தலைமை செயலாளருக்கும் எழுதினார் என்பதை இதுவரை எழுதிவந்தோம்.

       பன்டித நேரு அவர்களின் கடிதம் அப்போதைய கவர்னர் ஜெனரல் இராஜகோபால ஆச்சாரிய்யா அவர்களுக்கும், மத்திய பிரதேச முதலமைச்சர் ஜி.பி. பந்த் (கோவிந்த் பாலாஹ் பந்த்), அவர்களுக்கும் அனுப்பப்பட்டது. இவர்களின் செயலாளர்கள் சிலைகளை அகற்றிடும்படி பைஜாபாத் மாஜிஸ்ரேட் கே.கே.கே. நய்யார் என்பவருக்கு ஆணை இட்டார்கள். நய்யார் சிலைகளை அகற்றிடவில்லை என்பது மட்டுமல்ல, அவற்றிற்கு பாதுகாப்பு வழங்கினார்.

       மீண்டும் சிலைகளை அகற்றிடும் படி ஆணை இட்ட போது, அவர் சொன்ன பதில் வரலாற்றில் மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது. அவர் சொன்ன பதில். "சிலைகளை மஸ்ஜித் உள்ளிருந்து அகற்றிட முடியாது, என்னை வேண்டுமானால் அகற்றுங்கள்".

       பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், தன்னுடைய கடிதம் முழுவதும் சிலைகள் வைக்கப்பட்டதை ஒரு குற்றம் என்றே குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் சிலைகளை அகற்றிட தவறியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

       கிரிமினல் குற்றம் ஒன்றுக்கு துணை போனவர், பிரதமரின் ஆணையைப் புறந்தள்ளியவர், என்னை வேண்டுமானல் அகற்றிக் கொள்ளுங்கள் என ஆணவமாகப் பேசியவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரை பணி நீக்கம் செய்து, கைது செய்திருக்க வேண்டும். அத்தோடு அவருடைய இடத்தில் பிரிதொரு மாஜிஸ்ரேட்டை நியமித்து, சிலைகளை அகற்றி இருக்க வேண்டும். எதையும் செய்திட வில்லை.

       கே.கே.கே. நய்யாரைப் பொறுத்தவரை அவரை ஜனசங்கம்(இன்றைய இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சியின் அப்போதைய வடிவம்) அரவணைத்துக் கொண்டது.

அனைவரின் கவனத்தையும் ஏய்த்த ஒரு நிகழ்வு:

       வரலாற்றில் இன்னொரு உண்மை அனைவரின் கவனத்தையும் ஏய்த்து விட்டது. அந்த உண்மை.

       டிசம்பர் 6,1992 இன்போது பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது அதனுள்ளிருந்த சிலைகளைப் பற்றியது.

       பாபரி மஸ்ஜித் - ஐ இடித்தவர்கள் அத்துமீறித் தான் அந்த ஈனச் செயலில் ஈடுபட்டார்கள், என்பதே இன்றுவரை பிரச்சாரம் செய்யப்படும் செய்தி.

என்றெல்லாம் செய்திகளைச் சொன்னார்கள். ஆனால் ஒரு உண்மையை அப்படியே மறைத்து விட்டார்கள். அது, பாபரி பள்ளி வாசலுக்குள் 1949 இல் வைக்கப்பட்ட சிலைகள் பள்ளிவாசல் இடிக்கப்படும் போது என்னவாயிற்று எங்கே இருந்தன? அவை சேதப்படவில்லையா?

       இந்தக் கேள்வியை லிபர்ஹான் விசாரணையின்போது அனுபம் குப்தா (லிபர்ஹான் கமிஷனின் அதிகாரப் பூர்வமான வழக்கறிஞர்) அத்வானி, நரசிம்மராவ், சுஷ்மா சுவராஜ் - சாத்வி ரீதாம்பரா ஆகியோரிடம் கேட்டார். அவர்கள் யாரும் முறையாகப் பதில் சொல்லிட வில்லை.

       நரசிம்மராவ் வாயையே திறக்கவில்லை. என்னிடம் என்ன நீ கேள்வி கேட்பது? என்பது போலவே அவர் அனுபம் குப்தாவை பார்த்திருக்கின்றார்.

       அத்வானி கேள்விக்கான பதிலை விட்டு விட்டு கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றார் ஆனால் ராம்லீலா விவகாரத்தில் - அதாவது பள்ளிவாசல் இடிப்பின் போது சிலைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான தெளிவான பதிலை அனுபம் குப்தா பதிவு செய்கின்றார், இப்படி !

       "பாபரி பள்ளிவாசல், இடிப்பு என்பது திட்டமிட்ட ஒரு செயல். இதில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு முழுமையாக ஒத்துழைத்தது. பள்ளிவாசலை இடிப்பதற்கு வெகு நேரத்திற்கு முன்பே உள்ளிருந்த சிலைகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். பள்ளிவாசல் இடிப்பு முடிந்தபின் சிலைகள் மீண்டும் கொண்டுவந்து வைக்கப்பட்டன. இத்தனையும் அரசின் உதவியோடு நடந்தன”

       வாசகர்கள் இங்கே ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும்.

       பாபரி பள்ளிவாசல் இடிப்பில் கலந்து கொள்ள அங்கே குழுமிய கரசேவகர்கள். எல்லாம் மதியம் 4 மணிக்கு அவ்விடம் விட்டு அகன்று விட்டார்கள், ஏனெனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது பாபாரி பள்ளி வாசலின் மூன்று அறைகள் தான் சேதப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அதற்குப் பின்னர் பள்ளி வாசலை இடித்துத் தரைமட்ட மாக்கியது அரசின் புல்டோசர்கள் தாம். இந்த உண்மைகளை நாம் ஏற்கனவே வைகறை வெளிச்சத்தில் வெளியிட்டிருக்கின்றோம்.

       இப்படி அரசும் நீதித்துறையும் கைகோர்த்து நிற்கும் போது முஸ்லிம்களை வழிநடத்தும் தலைவர்கள், பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில், இந்திய ஜனநாயகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகின்றார்கள். என்னே பரிதாபம் !

       இந்த உண்மைகளையெல்லாம், பதிவு செய்திட வேண்டும் என அனுபம் குப்தா அவர்கள். நீதிபதி லிபர்ஹானிடம் சொன்னபோது அவர் மறுத்து விட்டார்.

       நரசிம்மராவிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது முன்னாள் பிரதமரிடம், நெருடலான கேள்விகளைக் கேட்காதீர்கள், எனக் கூறி தடுத்தார்.

       அத்வானியிடமும், நரசிம்மராவிடமும் கேட்ட பல கேள்விகளின் போது, நீதிபதி லிபர்ஹான் அவர்களே, இவையெல்லாம் லிபர்ஹான் கமிஷனின் கேள்வி அல்ல. மாறாக இவையெல்லாம், அனுபம் குப்தாவின் சொந்த கேள்விகள் எனக் கூறி விட்டார்கள். இதே காரணத்தைச் சொல்லி அவற்றை பதிக்கவும் மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியின் நேரடி உதவி உச்ச நீதி மன்ற அநீதி :

அயேத்தியா வின் மத்திய பகுதியைக் கையகப் படுத்திடும் சட்டம் 1993.

       முஸ்லிம்களின் மார்பில் ஈட்டியைப் பாய்ச்சிடும் இந்தச் சட்டமும், அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 143 கீழ் ஒரு ஆலோசனை பெறும் மனுவும் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

       உச்ச நீதி மன்றம் பிரிவு 143- இன் கீழ் ஆலோசனை பெறும் அளவில் கொண்டு செல்லப்பட்ட மனுவையும் அயோத்திய சட்டம் 1993-ஐயும் ஒன்று போல் திரும்ப அனுப்பியது, ஆனால் அத்துமீறி வைக்கப்பட்ட சிலைகளை அப்படியே இருக்க அனுமதித்தது.

       இது உச்ச நீதி மன்றம் அன்றே இழைத்த அநீதி. ஆனால் நாட்டு மக்களின் பார்வையிருந்து ஒட்டு மொத்தமாக மறைக்கப்பட்ட செய்தி.

1949 - இல் சிலைகள் வைக்கப்படுவதற்கு முந்தைய உளவுகள்- தகவல்கள்.

       2010 இல் அலஹாபாத் நீதி மன்றத்தில் பாபரி மஸ்ஜித் பற்றி வழங்கப்பட்ட தீர்ப்பில் 1949 டிசம்பர் 22-23 ல் வைக்கப்பட்ட சிலைகள் பற்றி நீதிபதி அஹர்வால், நீதிபதி வர்மா ஆகியோர் ஒரேஒரு வரியை மட்டுந்தான் எழுதி இருந்தாலும், நீதிபதி சிபத்துல்லாஹ்கான் பல உண்மைகளைப் சற்று விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன் என்கின்றார், வழக்கறிஞர் அனுபம் குப்தா.

       நீதிபதி சிபத்துல்லாஹ்கான் தான் எழுதிய தீர்ப்பில், "1949 இல் பள்ளிவாசலுக்குள் சிலைவைக்கப் பட்டது தொடர்பான எல்லா கோப்புக்களையும் இந்நீதி மன்றம் (அலஹாபாத் நீதிமன்றம்) தருவித்தது. அந்தக் கோப்புகளில் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய கடிதமும் இருந்தது". (இது இதுவரைக்கும் யாரும் அறியாதது என அனுபம் குப்தா தான் நடத்திய அலஹாபாத் தீர்ப்பு பற்றிய ஆய்வில் குறிப்பிடுகின்றார்)

        "இந்த கோப்புகளிலிருந்த இன்னும் இரண்டு கடிதங்கள் - குறிப்பிடத்தக்கவை அவற்றை எழுதியவர் கே.கே.கே. நய்யார் தான். இரண்டுமே சிலைகளை நான் மாற்றிட மாட்டேன் என மறுத்து எழுதிய கடிதங்கள் தாம். அவை இரண்டுமே பகவான் ஷஹாயஜி, என்ற உத்திரப் பிரதேச அரசின் அன்றைய முதன்மை செயலருக்கு அனுப்பப்பட்டவை. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை அப்போது (1949) கிர்பால் சிங்க் என்பவர் தான் பைஜாபாத் தலைமை காவலராக இருந்தார்.(ஷிறி) அவர் பல நாள்களுக்கு முன்னரே மாவட்ட நீதிபதி கே.கே.கே. நய்யாருக்கும் தலைமை செயலருக்கும் விரிவான கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்களில் நீதிபதி லிபர்ஹான்

       இவர் தமிழகத்திலும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். ஜனநாயகத்தில் மக்களை திசை திருப்புவும் ஏமாற்றவும் இருக்கும் சுலபமான வழி, விசாரணை கமிஷன்.

       இந்த வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோதும் அதில் ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது. இந்த விசாரணை, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்குப் பின்னணியில் ஒரு சதி இருந்ததா? இல்லையா? என்பதை விசாரிப்பதற்காகவே நியமிக்கப்பட்டன. அதன் நீதிபதியாக லிபர்ஹான் நியமிக்கப்பட்டார். இந்தக் கமிஷன் 17 வருடமாக, ஒரு தலைமுறையாக விசாரணை நடத்தியது.

சிலைகளைப் பள்ளி வாசலுக்குள் வைத்திட திட்டங்கள் தீட்டப்பட்டு, அவை மும்முரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தார்.

       "தொடர்ந்து நவம்பர் 29, 1949. இல் மாவட்டத் தலைமை காவலர் கிர்பால் சிங் இன்னும் அழுத்தமான ஓர் கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில், சிலைகளை, பள்ளி வாசலுக்குள் வைத்திடும் திட்டங்கள். கூர்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் புரன்மாஷி அன்று அதாவது பூரண பௌர்ணமி அன்று சிலைகள் பள்ளி வாசலுக்குள் வைக்கப்பட அனுபம் குப்தா:

       இவர், இந்தியாவில் மிகவும் பிரபல்யமாகி விட்ட ஓர் சிறந்த மூத்த வழக்கறிஞர். லிபர்ஹான் விசாரணை கமிஷனின் அதிகார பூர்வமான வழக்கறிஞராக, 1999 முதல் 2008 வரை இருந்தவர் நீதிபதி லிபர்ஹானின் போக்குப் பிடிக்காமல் அந்த விசாரணை கமிஷனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர்:

       இப்போது பஞ்சாப், ஹரியானா நீதிமன்றங்களின் மூத்த வழக்கறிஞராக இருந்து வருகின்றார்.

       செப்டம்பர் 30, 2010, இல் பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை, விசாரணை ஆய்வுக்கு உள்படுத்தி - கட்டுரைகளை எழுதிவருகின்றார். ஆய்வரங்கங்களிலும் கலந்து கொள்கின்றார்.

உள்ளன. அத்தோடு அன்று முதல் அதைக் கோயிலாக மாற்றிடவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்."

       அதே கடிதத்தில் மேலும் அவர் இப்படிக் குறிப்பிட்டார். பள்ளிவாசலை சுற்றி பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கட்டுமானப் பொருள்களான செங்கல்கள், சுண்ணாம்பு சாந்துகள் இவையும் பள்ளிவாசலுக்குப் பக்கதில் வைக்கப் பட்டுள்ளன".

        இந்தக் கடிதங்கள், இன்றளவும் மறைக்கப் பட்டே வந்தன. ஆனால் சிபத்துல்லாஹ்கான் தான் இவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். மட்டுமல்ல தனது தீர்ப்பிலும் அழுத்தமாக இடம் பெறச் செய்து விட்டார்.

       சென்ற வைகறை வெளிச்சம் இதழ்களில் நாம், ஓர் உண்மையை வாசகர்களுக்குத் தந்தோம். அஃது நீதிபதி சிபத்துல்லாஹ்கான் நமது மத்திய உளவுத்துறையால் -(தீர்ப்பை எழுதுவதற்கு முன்) மிரட்டப்பட்டார் என்பதே அந்த உண்மை. அவருக்கும் சவூதி அரேபியாவுக்கும் நிரம்ப தொடர்புகள் இருக்கின்றன என்றொரு பெரிய அறிக்கையை நமது மத்திய உளவுத்துறை தயாரித்து வைத்து அவரை மிரட்டியது.  

       தனக்குப் பயங்கர அச்சுறுத்தல் இருந்தாலும் அவர் 1949 - இல் நடந்த பல உண்மைகளைத் தனது தீர்ப்பில் இடம் பெறச் செய்துள்ளார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று, என்கின்றார் அனுபவம் குப்தா, அதேபோல் அவரைப் பாராட்டி இருக்கின்றார் டீஸ்டா செட்டல்வாட். இந்தப் பின்னணியில் பார்க்கும் போது மத்திய உளவுத்துறை அவரை மிரட்டாமலிருந்திருந்தால், அவர் உண்மையை தீர்ப்பாக தந்திருப்பார்.

       எதுவரினும் அவர் உண்மையை மட்டுமே தீர்ப்பாக சொல்லி இருக்க வேண்டும், இதையே நாட்டு மக்களும், இஸ்லாமும் நீதிபதிகளிடம் எதிர்ப்பார்க்கின்றது.

1949 இல் சிலைகளை வைத்தவர்களின் வாக்குமூலங்கள் :

       1949 இல் டிசம்பர் 22-23 இல் பாபரி பள்ளிவாசலுக்குள் சிலைகளை வைத்தவர்களின், செயல்கள் கிரிமினல் குற்றம் எனக் கூறாதவர்களில்லை. ஆனால் அதில் நடவடிக்கைக் குள்ளானவர்கள் யாருமில்லை.

       அவ்வாறு கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள் இராமச் சந்திர பரம்மஹம்ஸ் மற்றொருவர், அபைய் இராம்தாஸ். இவர்கள் இருவருந்தான் சிலைகளை வைத்தார்கள் என்பதை, நீதிபதி டியோக்கி நந்தன் அஹர்வால்(இவர்முன்னாள் நீதிபதி. இப்போது அலஹாபாத் நீதி மன்றத்தில் அமர்ந்திருந்த நீதிபதி அல்ல அவரது பெயர் சுதிர் அஹர்வால்). உறுதி செய்து, லிபர்கான் விசாரனை கமிஷன்முன் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். அதேபோல் மஹந்த் இராம சந்திர பரமஹம்ஸ், அதனை தானாகவே முன்வந்து ஒத்துக் கொண்டார் அபெய் ராம் தாஸ்இன் சீடர் ஒருவர் அபெய் ராம் தாஸ் தான் சிலைகளை வைத்தார் என்பதை ஒத்துக் கொண்டார்.

       இந்த உண்மையும் இப்போது வெளிவந்துள்ளது.

       ஒரு காலத்தில் அலஹாபாத் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த டியோக்கி நந்தன் அஹர்வால். ஓய்வு பெற்றபின் விஷ்வ ஹிந்த் பரீஷத் என்ற இந்துத்துவ அமைப்பில் இணைந்து, பாபரி மஸ்ஜித் - ஐ கோயிலாக்கும் முயற்சிகளில் வேகமாக ஈடுபட்டார்.

       பின்னர் குழந்தை இராமருக்கு வேண்டியவர் எனத் தன்னைக் காட்டிக் கொண்டு, உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செயத்தார்.

1986 -இல் குரங்குகளால் வழிகாட்டப்பட்ட நீதிபதி:

       1986 ஆம் ஆண்டில் தான், பாபரி பள்ளிவாசலின் பூட்டுக்கள் திறக்கப்பட்டு,பூஜைகள் சட்டப் பூர்வமாக அனுமதிக்கப்பட்டன.

       பூட்டுக்களைத் திறக்கும் தீர்ப்பை வழங்கிய நீதிபதி தான் பாண்டே என்பவர். இவர்தான் ஓய்வு பெற்றபின் ஒரு நூலை எழுதினார். அந்த நூலின் பெயர். "மனசாட்சியின் குரல்" அதில் பூட்டை திறக்கும் உணர்வை ஊட்டியவை குரங்குகள் எனக் குறிப்பிடுகின்றார்.

       நான் பாபரி மஸ்ஜித் இன் பூட்டுக்களைத் திறக்கவைக்க செய்யும் ஆணையை எழுதிய போது ஒரு தெய்வீகக் குரங்கு என் அலுவலக ஜன்னல் வழி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் பூட்டுக்களைத் திறக்கும் ஆணையை பிறப்பித்து விட்டு வெளியே வந்தபோது அந்தக் குரங்கு. அதே நீதிமன்ற கூரையின் மேல் இருந்தது. நான் வீட்டுக்கு வந்தபோது என்வீட்டு கூரையிலிருந்தது. இப்படி இந்தத் தெய்வீகக் குரங்கு எனக்கு வழிகாட்டிற்று.

       இந்தியாவில் ஒரு அரசியல் நிர்ணயச் சட்டம். அதன் பின்னனியில் கிரிமினல் சட்டங்கள் அதேபோல் கிரிமினல் புரசீசர் கோட் சாட்சி சட்டம் இப்படி எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன நீதி வழங்கிட.

       அவற்றையெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டுவிட்டு குரங்குகளால் வழி காட்டப்பட்ட நீதிபதிகள் இங்கே உண்டு அவர்களின் "குரங்கு தீர்ப்புகள்" இங்கே நடைமுறைப் படுத்துகின்றன.

       இங்கே சிலர், இந்தியாவின் ஜனநாயகத்தில் எல்லாம் இருக்கின்றது எனச் சொல்லும் போது நாம் அவர்களின் அறியாமையைக் கண்டு அதிசயப் பட்டிருக்கின்றோம் அவர்களும் குரங்குகளால் வழிகாட்டப் படுவர்கள்தாம்.

       அவர்களுக்குச் சொல்லுகின்றோம் இந்தியா செயல்முறை ஜனநாயகத்தில - குரங்குகளுக்கும் பங்குண்டு. சில தீர்ப்புகளை அவைகளும் வழங்குகின்றன.

பாபரி மஸ்ஜித் இடிப்பும் உளவுத்துறையும்:

       லிபர்கான் கமிஷன் ஒரு பெரும் பொய்யை ஊருக்கு அறிவித்தது. அதனை பச்சைப்பொய் என்கின்றார்கள்.

       அது, பாபரி மஸ்ஜித் இடிப்புப்பற்றி உளவுத் துறை எந்தத் தகவலையும் தந்திடவில்லை அதனால் தான் பாபரி மஸ்ஜித் இடிப்பதைத் தடுக்க இயலவில்லை என்பதே அது.

       ஆனால் பாபரி மஸ்ஜித் இடிக்கத் தான் கரசேவகர்கள் புறப்படுகின்றார்கள் என்பதிலிருந்து நாள் தவறாமல் உளவுத் துறை தகவல்களைத் தந்து கொண்டிருந்தது. 1992 நவம்பர் 24 ஆம் நாள் முதல் தினமும் இது குறித்த தகவல்களை மத்திய உளவுத்துறை அரசுக்குத் தந்து கொண்டே இருந்தது. என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

பாபரி மஸ்ஜித்: வழக்கின் தற்போதைய நிலை!

பாபரி மஸ்ஜித்: உச்சநீதி மன்றத்தில் இன்னொரு வழக்கு முஸ்லிம்கள் தொடுத்தார்கள்.

       பாபரி மஸ்ஜித் 1949 டிசம்பர் 22,23 ஆம் நாள் இஷா தொழுகையைத் தொழுதவர்களில் ஒருவர், பாரூக் அஹ்மத் என்பவர். இவர் அயோத்தியாவைச் சார்ந்தவர். அப்போது அவருக்கு வயது 20 (இருபது) இப்போது அவருடைய வயது 82 ( என்பத்தி இரண்டு).

       இவர் 1949 இல் சிலைகள் வைக்கப்பட்ட சூழல் பற்றிய சாட்சியாகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

       இதற்கு முன்பும், கீழ் நீதி மன்றம் முதல், உச்ச நீதி மன்றம் வரை பாபரி மஸ்ஜித் சம்மந்தப்பட்ட வழக்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். முழு மூச்சாக பாபரி மஸ்ஜித் மீட்பில் தன்னை ஈடுபடுத்திவருகின்றார்.

       இவர் தன்னுடைய மனுவை ஆகஸ்ட் 8, 2011 இல் தாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

       இது பாபரி மஸ்ஜித் சம்மந்தமாக முஸ்லிம்கள் தொடுத்துள்ள பத்தாவது மேல் முறையீடு.

       இப்படி மீண்டும் மீண்டும் வழக்குத் தொடர வேண்டியதன் அவசியம், என்னவெனில், எதிர்தரப்பார் நித்தம் ஒரு மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

 பாபரி தீர்ப்பு நீதிபதிகள் ஒரு பார்வை

       நமது சட்டங்களில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவற்றில் அடிப்படையில் வழக்குகளையும், விவகாரங்களையும் தீர்த்து வைத்திட வேண்டியது தான் நமது நீதிபதிகளின் பணி.

       இதைச் செய்வதைத் தவிர்த்து தங்களது சொந்த மத நம்பிக்கைகளை, தீர்ப்பாக தந்திடக் கூடாது. ஆனால் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இதற்கு நேர் எதிரானவையே செயல்படுத்தப் படுகின்றது.

       இதை மனோஞ் மித்தா என்ற பிரபல்யமான பத்திரிகையாளர் மெத்த வருத்தத்தோடு குறிப்பிடுகின்றார். இவர், பத்திரிகை துறையில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் வெற்றி கொடி நாட்டிவரும், பத்திரிகையாகிய டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிகையின் செயல் ஆசிரியர்.

       அவர் குறிப்பிடுகின்றார் பாபரி மஸ்ஜித் சம்மந்தமான தீர்ப்புகளைப்படிக்கின்றபோது, இந்து நீதிபதிகள், ஒரு வகையாகவும் இதர நீதிபதிகள் இன்னொரு வகையாகவும், நடப்பதையே நாம் பார்க்கின்றோம்.

       இஃது அடாத செயல். இப்டி ஒரு பார்வையை நீதிபதிகள் மீதோ, நீதிமன்றங்களின் மீதோ செலுத்திடுவது ஏற்புடையதல்ல. ஆனால் அதுதான் யதார்த்தம் என்றாகின்றபோது அதை நாம். மறைக்கவும் முடியவில்லை. இப்படியொரு பார்வைபாய்ச்சுவது தவறு என்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கின்றேன். எங்கேயும் நான் தெரியாமல் சொல்லி விட்டேன், அறியாமல் எழுதி விட்டேன் என ஒப்பாரி வைக்க மாட்டேன்.

 தனது வாதங்களின் தவிர்க்க வியலாத முடிவாக எடுத்துக்காட்டாக இரண்டு தீர்ப்புகளைக் குறிப்பிடுகின்றார் மனோஜ் மித்தா,

       1. 1994 இல் ஜீலையில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு பள்ளிவாசலுக்கு ஆபத்து இருக்கின்றது, எனத் தெரிந்து கொண்டே கரசேவகர்க்கு அனுமதி வழங்கியது.

       2. 1986 குரங்குகளால் வழிகாட்டப்ட்டு பாபரி மஸ்ஜித் - இல் பூஜைகளை அனுமதிக்க, வகை செய்த தீர்ப்பு

       3. 1993 இல் நரசிம்மராவ் - தீராத துரோகத்தைச் செய்து, அயோத்தியா சட்டத்தை ஏற்றினார். அதில் அவர் உச்ச நீதி மன்றத்தின் கருத்தைக் கேட்டார் நாங்கள் எங்களுடைய கருத்தைச் சொல்ல மாட்டோம் எனச் சொல்லி அந்த மனுவை ஐந்து பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் திருப்பி அனுப்பியது. அனால் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்னால் வைக்கப்பட்ட சிலைகள் அங்கேயே இருக்கவும் பூஜைகள் நடக்கவும் அனுமதி வழங்கியது பெரும்பான்மை தீர்ப்பு ஐவரில் மூவர் வழங்கப்பட்டது. இந்த மூன்று பேருமே இந்து நீதிபதிகள். இதிலிருந்து மாறுபட்டத் தீர்ப்பை வழங்கிய ஏனைய இரண்டு நீதி பதிகளும், இந்துக்கள் அல்லாத நீதிபதிகள். ஒருவர் பார்சி, இன்னொருவர் முஸ்லிம்.

       4. அதேபோல், செப்டம்பர் 30, 2010 இல் வழங்கப்பட்ட அலஹபாத், நீதி மன்ற தீர்ப்பில், 1949, இல் சிலைவைக்கப்பட்ட முக்கியமான வரலாற்று நிகழ்வை ஒருவரிக்குச் சுருக்கி விட்டவர்கள் இருவரும் இந்துக்கள். அதை சற்றாவது விரிவாகப் பதித்தவர், ஒருவர். அவர் இந்துவல்ல முஸ்லிம்.

1949 இல் சிலை வைக்கப்பட்டபோது நடந்த வஞ்சகம்

       1949 டிசம்பர் 22,23 ஆம் நாள் காலை 4 மணிக்கே சிலைகளை வைத்தார்கள். இதற்கு அன்றைய மாநில அரசுகள் உறுதுணையாக இருந்தன.

       1949 டிசம்பர் 22ஆம் நாள் இரவு இஷா தொழுகையை முடித்து விட்டு, முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் - திலிருந்து வெளியே வந்த சற்று நேரத்திற்கெல்லாம். காவல் துறையினர் பாபரி பள்ளிவாசலின் கதவுகளைத் தாங்கள் கொண்டு வந்த பூட்டுகளைப் போட்டுப் பூட்டினார்கள்.

       தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் வரும்போதும், போகும் போதும், கற்களைக் கொண்டு தாக்கிய சங்கப் பரிவாரத்தினரை காவல்துறையினர் தடுக்கவில்லை. மாறாக சங்கப்பரிவாரத்தினரின் வன்முறையையே காரணங்காட்டி, பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகக் கூறி, பாபரி மஸ்ஜித் - ஐ பூட்டிவிட்டார்கள்.

       ஆனால் காலையில் பஜர் தொழுகைக்குப் போனவர்கள் பூட்டுத் தொங்குவதைப் பார்த்து மலைத்து நின்றார்கள். நீதி மன்றங்களை அணுகினார்கள். இன்றளவும் நீதி கிடைக்கவில்லை.