வருடம் தவறாமல் வரும் பருவகாலம் போல் இயற்கையில் ஒன்றாகிவிட்டது சென்னை புத்தககண்காட்சி. இது பல லட்சம் வாசகர்களை ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்கிறது வாஸ்து சாஸ்திரங்கள் தொடங்கி தீவிர இலக்கியம், குழந்தை இலக்கியம் என்று எல்லா வகையான புத்தகங்கள் எல்லா தரத்திலும் கிடைக்கிறது ஆண்டுக்காண்டு இதன் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது தரமான இலக்கியங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு வழங்கி கவுரப்படுத்தியும் பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி ஒரு திருவிழா போன்று செயல்படுத்தும் இந்த புத்தககண்காட்சியை நடத்திவரும் பாப்பாசியின் தலைவர் திரு. ஆர்.எஸ்.சண்முகம் அவரின் முழுப்பெயர் ரவணசமுத்திரம் ஆகிய நாராயணன் சண்முகம் 64 வயதாகும் அவர் பிறந்தது நெல்லை மாவட்டம் ரவணசமுத்திரம் கிராமம், படித்தது கடையம் சத்திரம் உயர்நிலைப்பள்ளி (தற்போது பாரதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.) (SSLC, MA) சமுகவியல்.

NCBH நிறுவனத்தின் மூலம் தொடங்கி செண்பகா பதிப்பகம் என்ற சொந்த நிறுவனத்தை இன்று வரை சமூகத்தின் மீது அக்கறை உள்ள 1000மேல் தமிழ்புத்தகங்கள் தயாரித்து வருகிறது. தொழில் மட்டுமின்றி பொது வாழ்க்கையில் 1966 ஆல் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இந்தியன் பிப்பின்ஸ் தியேட்டர் அசோசியேசன் மதுரைக் கிளை, தேனின்னள் பில்ம் சொசைட்டி இந்திய சோவியத் நட்புறவு கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் தேசிய சம்மேளனம் அமைப்புகள் தொடங்கி தமிழ்நூல் வெளியீட்டாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பாபாசியின் தலைவராகவும் பொதுவாழ்க்கை பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. (1966இல் இருந்து இன்று வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈடுபாடு. சென்னை புத்தககாட்சி தொடங்கிய பரபரப்பில் இருந்தாலும் தாமரைக்காக நேரம் ஒதுக்கி தனது பேட்டியை தொடங்கினார்.

புத்தகங்கள் மனிதனின் அகம். முகம் அனைத்தும்தான். அதனுடன் மனிதன் கொண்டுள்ள ஆத்மார்த்தம் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன?

புத்தகங்கள் என்பது காகிதங்களால் கட்டமைப்புச் செய்யப்பட்ட மனிதர்கள் என்பது அன்டன் மெக்கரங்கோ என்பவரின் கூற்று. ஒரு புத்தகம் என்பது. தனிமனிதனின் அகம் மற்றும் முகம் மட்டும் அல்ல. அதை எழுதியவரின் காலம் சமூக நெறி. ஒழுக்கம் பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணமும் கூட 18,19ம் நூன்றாண்டுகளோடு ஒப்பிடும்போது 20ம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டிலும் புத்தகங்களின் பயன்பாடு. மக்கள் மயமாக்கப்பட்டுள்ளது. அறிவைத் தேடுவது மட்டுமல்லாது. அந்தத்தேடலை மிகச்சுலபமாக இனிய அனுபவமாக பெரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் புத்தகங்கள் மீது கொண்டுள்ள காதல் பிரிக்க இயலாத நேசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது மிகவும் மகிழ்ச்சியான விசயமாகும் புத்தகங்கள் இன்றி மனித வாழ்க்கை இல்லை என்றே கூறவேண்டும். புத்தகத்தின் வடிவம் வேண்டுமானால் காலந்தோரும் மாற்றமடையலாமே ஒழிய மனிதகுலத்தால் நிராகரிக்கப்படமுடியாத ஒன்று புத்தகங்களின் உள்ளடக்கம். வேண்டுமானால் வளர்ச்சிப் போக்கில் பழையன கழிந்து புதியன பிறந்து கொண்டே இருக்கும்.

பப்பாசியின் தேவை? தோற்றம், இன்றைய செயல்பாடு, இது உருவாக்கப்பட்ட பின், வாசகப் பரப்பில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்? இது பற்றிய தங்களின் விமர்சன பூர்வமானக் கருத்துக்கள்?

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பப்பாஸி என்ற அமைப்பு 35 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலப் புத்தக விற்பனையாளர், சிலர் சேர்ந்து துவக்கிய நிறுவனம் 22 உறுப்பினர்களாக 1985களில் இருந்த இந்த நிறுவனம் இன்று 486 பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர்களை இன்று 486 உறுப்பினர்களாக்கி கொண்டுள்ளது.

பப்பாஸியின் தேவை என்பது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு ஒரு சேர ஒரே இடத்தில் நூல்களை வைத்து. வாசகர்களின் நூல்தேடலுக்கு உதவி செய்வதும் ஆகும். பாபாஸியின் மிக முக்கியான செயல்பாடாக தமிகத்தின் முக்கிய நகரங்களில் புத்தகக்காட்சி நடத்துவது NBT போன்ற அரச பண்பாட்டு நிறுவனங்களோடு இணைந்து பதிப்புத் தொழில் குறித்த, கருத்தரங்கள் நடத்துவது பதிப்பாளர்களுக்கு நூல் உற்பத்திசேர்ந்த பயிற்சி அளிப்பது போன்றவையாகும்.

பாபாஸியின் செயல்பாடுகளின் காரணமாக ஒரு மிகப்பெரிய வாசகப் பரப்பு தமிழகம் முழுவதும் உருவாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி அதன் வெளிப்பாடாகவே ஆங்காங்கே தமிழகத்தின் தாலுகா நகரங்களில் கூட புத்தகக்காட்சிகள். நடைபெற்றுவருவதைக் காணலாம். இந்த வாசகர் பரப்பை அதன் திசை மாறாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அதற்கான முயற்சிகளை பப்பாஸி மேற்கொண்டு வாசிக்கத்தெரிந்த அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் ஒரு இயக்கமாக ஆண்டு முழுவதும் செயல்படுத்த வேண்டும். நல்லவாசகர்களைக் கொண்ட ஒரு சமூகம் குற்றம் குறைந்த சமூகமாக மாறும் மாற வேண்டும் அதற்கான செயல்திட்டத்தோடு பப்பாஸி செயல்பட்டால் பப்பாஸி சமூகத்திற்கு தனது சிறந்த பங்களிப்பைச் செய்ததாக அமையும்.

பப்பாசிக்கான எதிர்காலத் திட்டங்கள்?

பப்பாஸி புத்தகக்காட்சிகள் நடத்துவது மட்டுமல்லாமல் பதிப்புத்துரை, புத்தகத்தை சந்தைப்படுத்துதல் புத்தகத்தயாரிப்பு குறித்த பயிற்சிகளை தனது உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் மேலும் இந்தப்பதிப்புத் தொழிலின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் காலத்திற்கு தக்கவாறு மேற்கொள்ளும்.

புத்தகங்களை சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்? ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு கண்காட்சிகள் அமைப்பதால், நிரந்தரமான பயன்கள் உண்டா?

புத்தகங்களைச் சந்தைப்படுத்துவது என்பது இன்று தமிழ் பதிப்பாளர்களாக இருப்பவர்களுக்கு மிகப்பெரியசவால்தான் புத்தகங்களை வாங்கும் திறன் அதிகரித்துள்ள போதிலும் வாசகனுக்கு நம்மிடம் உள்ள நூல்களைப்பற்றி தெரிவிப்பதற்கு அல்லது அவர்கள் அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள் மிகக்குறைவாகவே உள்ளது.

ஒருசில தினசரிகள் புத்தக விமர்சனப்பகுதிகளை வெளியிடுகிறது புத்தகங்களுக்கான இரண்டு மாதப் பத்திரிகைகளும் வருகின்றன. ஆயினும் 8000க்கு மேல் ஆண்டு, தோறும் தமிழ் நூல்கள் வெளிவரும் நிலையில் இது குறித்து தகவலை வாசகர்களுக்கு தருவதற்கான போதுமான வாய்ப்புகள் இல்லை.

பதிப்பாளர்தாமே தின பத்திரிகை அல்லது பிற ஊடகங்களும் விளம்பரப்படுத்தலாம் என்றால் விளம்பரக்கட்டணம் புத்தக உற்பத்திச் செலவை விட பல மடங்கு அதிகமாக உள்ள நிலைதான் இருக்கின்றது எனவே புத்தகங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்வதுதான் தீர்வாக அமையும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தலை நகரங்களிலும் அரசின் முழு உதவியோடு புத்தகக்காட்சிகள் நடத்தலாம். அல்லது அரசே முன்வந்து மாவட்ட அளவில் பப்பாஸியின் துணையோடு நிரந்தரப்புத்தகச் சந்தையை ஏற்படுத்தலாம் முன்னுதாரணமாக சென்றமுறை. அ.திமு.க ஆட்சியில் இருந்த போது முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் நிரந்தரப்புத்தகக்காட்சி ஏற்படுத்தப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அரசே புதிதாக வெளிவரும் நூல்களைப் பதிப்பாளர்களிடம் பெற்று தமிழரசுப் பத்திரிகை போன்று ஒரு பத்திரிகை மூலம் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அனுப்பலாம் இதற்காக பப்பாஸி உதவி செய்யலாம்.

புத்தகங்களை நூலகத்தின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது? இதில் அரசின் அணுகுமுறை என்ன?

தமிழகததைப் பொருத்தமட்டில் குறிப்பாக தமிழ்ப்பதிப்பாளர் பதிப்பிக்கின்றன. ஒரு சில பதிப்பகங்கள் விதிவிலக்கு பதிப்புத் தொழில் ஒரு புனிதமான கௌரவமான தொழில் என்பதாலேயே பலர் இந்தத் தொழிலில் தொடர்கின்றனர். அரசின் கீழ் ”மார் 3500 நூலகங்கள் இருந்த போதிலும் 300,600,800/1000 என நூல்கள் வகை பிரித்து வாங்கப்படுகிறது. அதுவும் பதிப்பாளர் சமர்ப்பிக்கும் அனைத்து நூல்களும் வாங்கப்படுவதில்லை நூல்களை (உள்ளடக்கம் உருவம்) தேர்வு செய்வதுடன் நூல்வெளியிடப்படும் அந்த ஆண்டிலேயே வாங்கி வாசகர்களின் பயன்பாட்டுக்குத் தரவேண்டும் அரசு வசூலிக்கும் நூலக வரியை நூலகத்திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் வாசகர் விரும்பும் தரமான நூல்களை அனைத்து நூலகங்களுக்கும் வாங்க வேண்டும்.

பதிப்பகங்கள் அரசிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறது?

புத்தகங்கள் காலத்தின் கண்ணாடி பதிப்புத்தொழில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டது அல்ல பண்பாடு மிக்க ஒரு சிறந்த மூலம் உருவாக பயன்படும் கருவியினை தயாரிப்பவர்கள் பதிப்பாளர்கள். எனவே பதிப்புத் தொழில் சிறந்து விளங்க அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் அனைத்துப் பதிப்பகங்களும் ஒரே இடத்தில் அமையும் வகையில் அறிவுசார் பூங்கா அமைப்பதுபோல் புத்தகப்பதிப்பாளர் பூங்கா அமைத்திட வேண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நூலகப்புத்தகம் வாங்குவதற்கான விலையை ஆய்ந்து நிர்ணயம் செய்ய வேண்டும் ஆண்டுதோறும் சிறந்த பதிப்பாளர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்க வேண்டும்.

கட்சிகள் ஊடகங்களுக்கும், வாசிப்புக்கும் இடையிலுள்ள வேறுபாடுகள் தங்களின் கருத்து என்ன?

இன்றைய காட்சி ஊடகங்கள் ஒரு பொழுது போக்குக்கான வாய்ப்பாக அமைகிறது ஆனால் வாசிப்பு அவ்வாறு அல்ல. வாசகனின் சிந்தனையை தூண்டுவதுடன் செயலூக்க மிக்கவனாக மாற்றும்.

காட்சி ஊடகங்களுக்கும், பரப்பில் வாசிப்பு உலகம் அதிர்ந்து, எதிர்காலத்தில் மறைந்து விடுமா?

வாசிப்பு என்பதற்கு மாற்றாக காட்சி ஊடகம் ஒருபோதும் மாற இயலாது எனவே வாசிப்பு உலகம் மறைவதற்கான அல்லது சிதருண்டு போய்விடும் என்ற பயம் தேவையில்லை வாசிப்புக்கு மாற்று மீண்டும் மீண்டும் வாசிப்பதுதான்.

மின் நூல்களைப் பற்றி தங்கள் கருத்துகள்?

மின்னூல்கள் இப்போதுதான் வரத்தொடங்கியுள்ளது. குறிப்பாக அகராதிகள் கலைக்களஞ்சியங்கள் போன்று பார்வை நூல்களாக மின்நூல்களின் பயன்பாடு அதிகரிக்கும் ஆழ்ந்து தோய்ந்து வாசிக்கக் கூடிய மின் நூல்களுக்கு பெரிய வரவேற்பு வாய்ப்பு மிகக்குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன்.

தாமரை வாசகர்களுடன் தாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புவது?

தாமரை இதழழோடு எனக்கு 1965 முதல் பரிச்சயம் உண்டு ஒரு சிலகாலம் தாமரை இதழை மக்களிடையே கொண்டு செல்லும் பணியையும் செய்திருக்கிறேன் தாமரையின் வாசகர் அனைவருமே மிகச்சிறந்த வாசிப்பாளர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் தாமரை போன்ற வாசகர் வட்டம் மேலும் பெருகவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும்.

சந்திப்பு: செந்தில்

Pin It