rubi_620

மண் விண் அனல் புனல் காற்று ஆகிய ஐம்பூதங்களாலேயே அனைத்துப் பொருட்களும் ஆக்கப்பட்டுள்ளன. உலகத்துப் பொருட்களை எல்லாம் மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்களின் துணை கொண்டு கண்டோ, கேட்டோ, உண்டோ, உயிர்த்தோ உற்றார்ந்தோ உணர்கின்றோம். இறைவனோ இப்பூதங்களுக்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்டவன்.

"பூதப்பொருட்டோ
புலன் துணையன்றிப்
போறப் பொருட்டுப்
போதும் போதும்''

 எனும் மனோண்மணித் தொடர் பூதங்களால் ஆக்கப்படாத இறைவனைப் புலன்களால் எவ்வாறு காண முடியும்? அவர் இருக்குமிடம் மனிதப் புனிதர்களின் மகத்தான நெஞ்சம். நம்பிக்கையாளர் நெஞ்சங்களே இறைவன் அமரும் "தவிசு' எனும் பொருளில் பெருமானாரன் இவர்களின் "குலுநபில் மூமினின் அர்லுல்லாஹ்' எனும் நபிமொழி உணர்த்துகிறது.

எந்த தத்துவத்துக்குள்ளேயும் ஆழ்ந்திருக்கும் அகப்பொருளை மிஸ்டிக் விசம் என்றழைக்கலாம். இஸ்லாமிய மிஸ்டிக் பாரம்பரியத்தின் முதல்வர் முகம்மது நபி. அவருக்குப் பிறகான தலீபாக்கள் எல்லாம் நபிகளை ஆதரித்தனர். நபிகள் பயன்படுத்துவது அதன் உட்பொருளை உணர்ந்து தான், மதத்தின் ஆன்மா ஆன்மீகம்தான். இறைத்தூதரின் ஹீரோ குளகத் தியானம் அதை உணர்த்துகிறது. பழங்களில் சுவை போன்று பூக்களில் மணம் போன்று கடல் நீரில் உப்பு போன்று மதத் தத்துவங்களில் நபிசம் உள்ளது. குர்ஆனின் சில சொற்கள் நபிகள் பயன்படுத்துவது அதன் உள்ளார்ந்த பொருள் புரிந்து கொண்டேன்.

எந்த இறைவேதமெடுத்தாலும் எந்த மதக் கொள்கை எடுத்துக் கொண்டாலும் அதன் உள்ளார்ந்த ஞானப்பொருள் ஒன்றாகத்தான் இருக்கும். அந்த அறிவு தான் மிஸ்டிக்குகள் பிரபஞ்ச நியதியில் நம்புவதும். ஞான நூல்கள் பல ஆயினும் அவற்றின் மூல ஊற்று ஒன்றே. விளக்குகள் பல என்றாலும் ஒளி ஒன்றுதான். ஞானத்திலிருந்து இறையன்பு பிறக்கிறது. ஞானம் என்பது அறிவல்ல பெயரிடாமல் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அஸ்ஸனம் சிலர் வேதங்களிலும் மனிதர்களுக்கிடையேயும் பகுத்தறிந்தவற்றை மிஸ்டிக்கல் அனுபவங்களாக சொல்கிறார்கள்.

இறைவனிடமிருந்து உள்ளுணர்வு ஞானத்தைப் பெறுதல் என்பது ஆத்ம விழிப்பில் காணும் ஓர் பேரின்பமாகும். உறங்கிக் கிடக்கும் மனித ஆத்மா இறை உணர்வால் விழிப்படைவதையே "உள் உணர்வு' என்கிறோம். இறைவன் தனது நல்லடியாருக்கு அருள்பாவிக்க விரும்பினால் தனக்கும் அடியாரின் ஆத்மாவிற்கும் இடையேயான திரைகளை விலக்கி விடுகிறான் என்கிறது இறைமறை.

இறைவன் "ரூஹ்' எனும் ஆன்மாவை பல சமயம் தன்னோடு சம்பந்தப்படுத்திக் கூறுகிறான். இன்னொரு சமயம் தன்னுடைய கட்டளைகளோடு தொடர்புபடுத்துகிறான். வேறு ஒரு இடத்தில் தனது மேன்மையோடு இணைத்துக் கூறுகிறான்.

மறைஞானம், புலன்களுக்கு எட்டா அறிவு, விழிப்புணர்வு என்றெல்லாம் பொருளுடையது "இல்ஹாம்' நபிகள் இல்ஹமுக்கு கொடுக்கும் இன்னொரு பொருள் "கஷ்ய்' மறை நீக்கி வெளிப்படுதல், கண்டடைதல் என்றெல்லாம் இதற்குப் பொருள். இந்த உள்ளுணர்வு என்பது கண்ணில் தூசி விழும்போது உடனே இமை அடைகிறது. ஐந்தறிவு உயிரினங்களுக்கும் இது உண்டு. இறை தூதர்களுக்கானது வஹ்ய் என்றும் இறை நேசர்களுக்கானது இல்ஹாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த இல்ஹாமுக்கான வழியை உறவுகளிடமிருந்து விடுபடல் குடும்பம், சொத்து, வாரிசு, நாடு, அறிவு, அதிகாரம், பதவி, அந்தஸ்து அனைத்து பற்றிலிருந்தும் விடுபடுதல். மனதை விலக்கல். இது கடமைகளிலிருந்து தப்பித்தல் அல்ல ஒருவகையில் விலகி நின்ற அரசியல் வரலாறு நபிசத்தின் வரலாறு. அரசுகளின் அடக்குமுறைக்கும் அரண்மனை பண்டிதர்களின் நய வஞ்சத்துக்கும் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கும் எதிரான மௌன எதிர்ப்பு தான் இந்த விலகல். ஒரு எதிர்கட்சி அரசியல் தன்மையுடனும் பல ‹பிகள் ஆன்மிகத்தை அண்டர் கிரவுஸ்ட் அரசியல் செயல்பாடாகவும் செயல்பட்டனர். அரசிலிருந்தும் அரசுகருவிகளான உயர் வர்க்கத்தினரிடமிருந்தும் வேறிட்டு நின்றனர்.

சுல்தான்களின் பணக்காரர்களின் சலுகைகளை ஏற்க மறுத்தனர். பொது இடங்களில் அரசின் விளக்குகளை வெளிச்சங்களைக் கூட பயன்படுத்த மறுத்தனர். பணக்காரர்களின் சொத்துக்களைப் பறித்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க அனுமதித்த நபிகளும் உண்டு. விவாத நபியான ஹல்லாஜ் கொலை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காகத்தான்.

பிரெஞ்ச் காலனியத்துக்கெதிராக அல்ஜுரியவில் போராடிய அமீர் அப்துல் காதர், லிபியாவில் இத்தாலிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய சனுநீஸி, நானின் மஸ்தி. இந்தியாவின் அஹ்மத் சர்ஹிந்தி ஆகியோர் நபிகள்தான். அவர்களுக்கு நபிசம் மயக்க மருந்தல்ல.

எந்த பெயரில் அழைத்தாலும் நபிசம் ஒன்று தான். ஓன்றை மட்டும் தான் அனைத்தும் கூறியது. அது சுயத்தை அறிதல். எல்லா மிஸ்டிக் கவிதைகளிலும் அன்பு ஒளிந்திருக்கிறது.

நபிகளுக்கே உரிய இரகசிய கேள்விப்புலன் பேரின்ப நிலை, ஏக்க முறுதல், கிளர்ச்சியுறல், அமைதி கொள்ளல், உறுதிப்படுத்தப்படல், அழிக்கப்படல், எளிமை, "நான்' என்பது அழிந்து விடல், வலிப்பதவி, சடநிலை, ஷெய்க் (குரு) பதவி, முரீது (சீடன்) பதவி ஆன்ம வெளிச்சம் இரு வேறு வேறு பெயர்களில் உள்ளது.

"இருத்தலின் பாலைவனத்தில் வீசப்பட்ட கல்' தான் வாழ்க்கை என்றார் அலச்சி சாரல்.
அந்நியமாதலும் அர”ம் இருக்கும் வரை மதம் அழியாது என்றார் மார்க்ஸ்.

ஆனால் உமர்கயாமோ அலைகடலில் காற்றில் ஆடும் கப்பல் வாழ்க்கை, அச்சமின்றி பயணம் செய்ய ஞானத்தின் மது அருந்த வேண்டும் என்கிறார். பாலைவனத்தின் மணல் போன்று ஆகாயத்தின் மேகங்கள் போன்று வாழ்க்கை நிரந்தரமற்றது. கண்முன்னால் காண்பதெல்லாம் தற்காலிகமானவை என்பதுதான் உமர்கயாம் தரும் ஞான மதுவின் முதல் துளி.

புத்தனின் விரக்தியும் எபிக்யூசான் ஆனந்தமும் ‹பியின் ஆன்மிக அனுபூதியும் பல விடைகளின் சாத்தியங்களை திறந்து தருகிறது. எந்தக் கரையை அடைய வேண்டும் என்று தவிக்கும் மனதுடன் அலைகிறார் உமரிகயாம்.

இமாம் கஸ்ஸாலிக்கும் இந்த பரவசம் இருந்தது. வாழ்க்கையின் மீது நிச்சயமின்மையின் முத்திரை பதிக்கும் மரணம் கயாமிய சிந்தனையின் முதன்மை குணமாக இருந்தது.

மரணம் வாழ்க்கைபின் இறுதியல்ல புதிர்களின் திறவுகோல். ஆனால் அந்தப் புனித இரகவியல்கள் நமது புலன்களுக்கு அப்பாற்பட்டது.

இருத்தலியல் சார்ந்த முன் நிச்சயத்தால் கட்டப்பட்டது மனித வாழ்க்கை. நாம் தேர்ந்தடுத்ததல்ல இந்த வாழ்க்கை நமக்கு அளிக்கப்பட்டது. இருத்தல் நம்மை அதன் சதுரங்கப் பலகையில் கொண்டு நிறுத்திவைத்துள்ளது. இந்த விளையாட்டில் பங்கேற்க ஞானமது நமக்கு உதவும். ஞானத்தின் மது அருந்தி வாழ்க்கையை எதிர் கொள்ளலாம். ஞானம் எல்லா அல்லல்களிதிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கும் என்றார்.

இறை உணர்வுடன்தான் மனிதன் பிறக்கிறான் என்றுதான் இறைவன் இருப்பதற்கான சாட்சியமாக காயாம் சுட்டுகிறார்.

வாசகனின் முன்னால் எல்லையற்ற வாழ்க்கை அன்பில் அனேகம் வாசல்களை திறந்து வைக்கிறார் கயாம்.

மதுவையும் பெண்களையும் குறித்துப்பாடும் கயாமின் முதல் சொல் விழிப்பு. நாம் தூங்குகிறோம் அதிலிருந்து விழிப்போம் அந்த உணர்வே நம்மை உண்மையை உணர வைக்கும் என்கிறார்.

மதுக்கோப்பையை உடலாகவும் மதுவை ஆன்மாவாகவும் உருவகிக்கிறார். பாரசீகத்தின் இஸ்பஹடன் பட்டணத்தில் ஒரு வானியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவுவதற்கு மாலிக்ஷõ என்ற ஆட்சியாளன் அபுல் பதாஹ் கயாம் என்ற விஞ்ஞானியை பணித்தார். அவர்தான் மகாகவி உமர்கயாம்.

நீராக வந்தவன் நான்
காற்றாக போகின்றேன் நான்
நீருக்கும் காற்றுக்கும் இடையேயான
வாழ்க்கையை விழிப்பின் பாடங்களால்
வாசிக்கிறார் போய்யத்திண்டாக.
மரணத்திற்கு சற்று முன்னால் கயாம் எழுதினார் இறைவா
என்னால் இயன்ற முறையில்
எல்லாம் உன்னை அறிய முயன்றேன்
ஆனாலும் உன்னை அறியும்
என்மொழிகள் எத்தனை சொற்பம்
என்னை மன்னித்துவிடும்.

மிஸ்டிக் கவிஞர்களால் வளமான மண் இரான். ஆப்கான் முதல் துருக்கி வரையிலான அகலமான பூமியில் ஏராளம் கவிஞர்கள் உயிர் கொண்டனர். பல்க முதல் கோனியா வரையும் சிராஸ் முதல் நிஷடபூர்வரையும் கவிஞர்களின் வரிசை நீண்டு நெடியது. அவர்களின் படைப்பு பெருமையில் பாரசீக மொழி பெருமிதம் கொண்டது.

எழுத்துக்களின் திராட்சை ரசம் பிழிந்து சாறெடுத்து மதுவாக்கி குடிக்க வைத்தார். உமர்கயாம் அந்த வீரியம் எந்த மதுவுக்குமில்லை.

ஆயிரம் ஆண்டுகள் தேய்மானம் வந்த பிறகும் அந்த கவிதைகள் இன்றும் மாற்று குறையவில்லை.

புதிர்கள் அனைத்தும் ஏதோ ஒரு காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி விஞ்ஞான அறை உட்படுத்தப்பட்ட புதிர்கள் நீங்கிவிட்டது. புதிர்களோடு தான் நாம் வாழவேண்டும் புதிர்கள் விழிப்புணர்வை கிளறுகின்றன நம்மை பரவசப்படுத்துகின்றன.

நாயனை நாயனின் ஒளியைக் கொண்டுதான் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல இறைவனையும் அவன் அருளினால் தான் புரிந்து கொள்ள முடியும் அப்படி அறிந்தவர்கள் நபிகள் சித்தர்களைப்போல குமுவுவகுறி சொற்களை பயன்படுத்துவது போலவே குழுவுக்குறி எழுத்துக்களை பயன்படுத்துகிறார்.

இறவைனை சத்சித் ஆனந்தம் என குறிப்பர், சத் என்பது உள்ளது என்றும் சித் என்பது பேரறிவு  ஆனந்தம் என்பது பேரின்பம். பேரறிவுப் பெரும் பொருளான இறைவனை உணர்த்தும் சிர் என்ற சொல்லை அடிச் சொல்லாக கொண்டு சித்து சித்தன் எனும் சொற்கள் தோன்றியிருக்கலாம்.

அனைவரும் பிறப்பால் உயர்ந்த நிலையில் தான் ஆனால் தெரியாது சிலர் தெரிந்து கொள்கின்றனர். மீனுக்கு நீர் என்றால் என்ன என்று தெரியாதது போல.

நபிசம் மதத்துக்கு எதிரானது என்றும் வேதாந்தத்துடன் தான் அதற்கு தொடர்பு எனவும் அது மதத்தை அழித்துவிடும் என்றும் கூறி நபிகள் தாக்கப்பட்டார். அது ஐரோப்பாவின் சிறேடி என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

அன்புதான் பெரிய மதம் பிரபஞ்சம் தான் மகாவேதம் என்றார் ரூமி.

இறைவன் மறைந்திருப்பவன் மறைந்திருப்பவனை மறைந்திருப்பவள் அறிகிறாள். ஏகன் அவன் அவனை ஏகனாக இருப்பவன் அறிவான். அன்பு மடமும் தான் படைக்கப்பட்டது மீதியெல்லாம் அன்பின் படைப்புகள். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்ற அகம்புறமல்ல நபிசத்தின் அகம். ஏல்லா தத்துவங்களிலும் நபிசம் உண்டு நபிசத்தில் எல்லாருக்கும் உண்டு நபிகள் அல்லா பூர் தாள் அதற்கு அதிகமாக அறிந்துள்ளார்.

33ம் வயதில் மாக்தாதின் நாசமிய்யா அகாதமியல் பேராசிரியராக இருந்த தஸ்ஸாலி ராஜனாமா செய்து பல ஆண்டுகள் பயணம் செய்தார். ஒரு கட்டத்தில் பள்ளிவாசலில் கூட்டுத்தெரு முறையில் பணி வரிசையில் அமர்ந்தார். அங்கே ஒருவர் பேசினார் நமது தஸ்ஸடலி இவ்வாறு கூறியுள்ளார். அது கேடு பள்ளிவாசலிலிருந்து வெளியேறி யாருமில்லா இடத்தில் தணித்திருந்தார். சித்தர்கள் அரண்மனை துறந்து புத்தனாகிறான். மெழுகு எலகுவது போல் உருமி வெளிசமாகி மெழுகும் வெளிச்சமும், திரியும் முடியும்போது நிற்க வேண்டிய வெளிச்சம் குறித்து அறியலாம் ருசி குறித்து எட்டால் முடியாது ஒலித்தால் பின் ருலி தெரியுமென்றால் ரூமி.

லாபேசுவிடம் உங்கள் சித்தாந்தம் என்னவென்று கேட்டபோது அது என்ன வென்று சொன்னால் அது அதுபல்லாமலர் போகுமென்றார்.

நபிசம் ஒரு இடமல்ல. அறப் பிரசாரம் செய்ய முடியாது. வெளிச்சத்தின் இன்மை பின் கிட்டு. இருட்டு என்ற ஒளியில் காக்கிற வெளிச்சத்துக்கு அப்பால் ஒரு வெளிச்சம் உண்டு அதைக் கான அகக்கற்கள் திறக்கப்படவேண்டும் அதை சொற்களில் வடிக்க முடியாது.

ரூமியைப்போல அனைத்திலும் அழகை ரசித்தவர் பீரப்பா. அழகிருக்கிறது அதனால் இறைவன் இருக்கிறான் என்றார் ரூமி.

Pin It