கருக்கலில் கண் விழித்து
கரிக்கொட்டையில் பல் துலக்கி
குடிசை சுத்தம் செய்து
இருக்கும் கஞ்சிக் குடித்து
கொளச்ச பொழுதை கழிக்க
பின்னி பானையில் நீர் மெத்தி
பாதி நீரை பாதுகாத்து
மீதி நீரில் சோறாக்கி
வெறும் சோறு வேணாம்னு
வெண்டிக்க வெஞ்சனம் செய்தேன்
அத்தனையும் முடித்த பின்னே
அந்தி மசங்கும் முன்னே
அவசரமா குளித்துவிட்டு
அழகான துணி உடுத்தி
அஞ்சு ரூபாய்க்கு மல்லிகை பூ வாங்கி
ரவுண்டான கொண்டைபோட்டு
அதை சுத்தி பூ வச்சு
ஆசையோடு காத்திருந்தேன்
ஊரும் இருட்டாச்சு
உணவு உண்ணும் நேரமாச்சு
கொஞ்சி பாட்டு பாடி
 குத்து விளக்கணைத்து
என் நெஞ்சை கவர்ந்த உன்னை
கண்கள் தேடுதய்யா
என் கர்ப்பத்தில் உன் மகன்
எத்தி உதைக்கயிலே..
Pin It