“தொல்லியல் தரவுகள் எப்பொழுதுமே கடந்தகால வரலாறாகத்தான் இருக்கமுடியும். ஏனெனில் நமக்குக் கிடைப்பவை / நாம் தேடிக்கண்டுபிடிப்பவை கடந்தகாலத் தொகுப்புகளே. வெறும் காலவரிசைப்படுத்தப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாக தொல்லியலாய்வைக் கொள்ளாமல் வரலாற்றுச் சம்பவங்களை கறாரான நிகழ்விய எல்லைக்குட்படுத்தப்பட்டே ஆய்வை மேற்கொள்ளவேண்டும். ‘அசல் தன்மை’ என்பது எப்போதுமே காரண காரியத்தைச் தாண்டிச்செல்லும் தருணம். இன்றைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், நிகழ்கால மொத்தத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல்கூட வரலாற்றாசிரியர் இருக்கலாம். ஆனால் நேரானது, நேர் மாறானது (வித்தியாசமானது) இவற்றைப் பிரிக்கும் எல்லைக்கோடு நகரும்போது, மடை மாறும்போது மிகுந்த கவனத்துடன் கண்டுபிடிக்கவேண்டும்; இனவரைவியலாளர் சுட்டிக்காட்டும் இன்றைய “தடம்விலகிய” / “நேர் அற்ற” நிகழ்வுகளை இனங்காணத் தெரியவேண்டும். காலவெளியினூடாக இல்லை மாறாக குறிப்பிட்ட தருணத்தில், அப்பொழுதில் தன்னிலையின் நிலவரம், புற நிலவரம் இரண்டிற்குமான உறவுகள் குறித்த வரலாறே நிகழ்காலத்தின் வரலாறாகும். பூடக கடந்தகாலத்தின் வரலாற்றுக்கு இனிமேலும் தேவை இருக்காது. நிகழ்காலத்தின் வரலாறே தேவை. இனிமேல் தொல்லியல் இல்லை. ‘வரலாற்று இருப்பியல்’ என்றால் வரலாற்று மொத்ததத்துவமல்ல மாறாக நிகழ்காலத்தின் வரலாறு, நுண் வரலாறே நிற்கும்.” பூக்கோ

“தமிழ்த் தேசியம் ஒரு பன்முக சிக்கலான கருத்துருவம். அனைவரும் ஏற்றுக்கொண்ட அல்லது நிலையான வரையறை தமிழ்த் தேசியத்துக்கு இல்லை. பல்வேறு காலகட்டங்களில், சூழமைவுகளில், நிலைகளில் தமிழ்த் தேசியம் வெவ்வேறு போக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் நோக்கிச் சில பொதுப் பண்புகளை சுட்டலாம். தமிழ்த் தேசியம் தமிழர் மரபுத் தாயக நிலப்பரப்புகளான தமிழ் நாடு மற்றும் தமிழீழம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமூகஅரசியல்பொருளாதார நலன்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி, அவற்றின் ஊடாக வெளிப்பட்டு, அவற்றால் பயன்பெற்று, அவற்றைப் பேணி, பகிர்ந்து, மேம்படுத்த ஏற்ற சூழமைவை கட்டமைப்பதை நோக்காக கொண்டது. இதன் அடிப்படைக் கருத்தியல் தமிழரிடையே காணப்படும் ஆண் ஆதிக்கம், சாதிக் கொடுமைகள், வர்க்க விரிசல்களுக்கு எதிராக அமைகின்றது. மேலும், சமய புவியல் சார்புகளை மீறி, ஒரு ஒற்றுமைக் கூட்டமைப்பை ஏற்படுத்தி, இன்றைய உலகமயமாதல் சூழமைவில் தமிழரின் அடையாளத்தையும், உரிமைகளையும், நலன்களையும் உறுதிசெய்ய இது முனைகின்றது. தமிழ்த் தேசியத்துக்கு எந்தவித சட்ட வரையறையும் இதுவரை இல்லை. தேசியம் குறித்த ஆரோக்கியமான உரையாடலை, விவாதத்தளத்தை நோக்கி விரிவுபடுத்த முயன்ற போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. இந்த நிலையில் “இரட்டைத் தேசியம் அறிதலும் அவசியமும்” இரட்டைத் தேசியம் குறித்த “கருத்தாடல்கள்” புதிய வெளியை உருவாக்கியிருக்கிறது.”     

தமிழ்த் தேசியம் குறித்த கருத்து நிலைகள்

தேசம் என்ற எதார்த்தம் பற்றிய கருத்துகளின் தொகுப்பை தேசியம் என்கிறோம். தேசியம் என்கிற கருத்தியலுக்கும் தேசியம் என்கிற கருத்தாக்கத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் நவகாலனிய ஆதிக்கத்திற்கெதிராக, காலனிய எதிர்ப்பு தேசியம் முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு தேசியத்தின் வரலாற்றினுள்ளும் அதன் முதலாளிகள் தோன்றுகிறார்கள். 20ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தமிழ்த்தேசியம் முதலாளித்துவத் தன்மைகொண்டதாகப் பரிணமித்தது. திராவிடக் கட்சிகளின் கொள்கை மற்றும் நடைமுறையின் ஊடாக முதலாளி வர்க்கத் தமிழ்த் தேசிய உருவாக்கம் நிகழ்ந்தேறியது. தமிழ்த் தேசியம் எதை நோக்கி அமைகின்றது என்று சுட்டப்பட்டாலும், பல்வேறு வழிகளில் வெவ்வேறு வரையறைகள் வைக்கப்பட்டுள்ளன.:

“1946இலேயே தமிழ்த் தேசியக் கருத்தாக்கத்தைப் பேசி, விடுதலை பெற்ற திருநாளில் போர் முனையும் போர் முறையும் மாறும் நாள் என்று தமிழர் விடுதலை, மாநில சுயாட்சி, சுதந்திர சுயநிர்ணய சோஷலிசக் குடியரசுஎன்ற தம் கொள்கைகளை முன் வைத்து அதற்காக ஒரு பிடி மண்ணையும் இழக்க மாட்டோமென, விடுதலை இந்தியாவிலும் அரசுடன் போராடி, சிறை சென்று மண் மீட்ட, தமிழ்த் தேசியத்தின் தந்தை ம.பொ.சி.யை எந்த விதமான ஆதாரமுமின்றித் தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாக மதவாதி என்ற சேறு பூச முயற்சிக்கும் அதி அசுரர்கள் சற்றே விழிமலர் திறந்து பார்க்கட்டும். தமிழ்த் தேசிய வெளிச்சம் தெரியும்.”

பச்சைத் தமிழ்த் தேசியம் : இன்றைய பன்னாட்டுச் சூழலில், இந்திய? அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ்த் தேசியம் என்பதைக் குறிக்கிறது. இன்னொன்று ‘தமிழ்’ தேசியம், ‘தமிழர்’ தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து, கூடவே பசுமை உணர்வுகளை, விழுமியங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது.” “தமிழ்த் தேசியம் என்பதும் இப்பொழுதுதான் முன்னுக்குப் பின் முரணில்லாமல் சமூக அறிவியல் வரையறுப்பின்படி வடிக்கப்பட்டுள்ளது. எமது தேசிய மொழி தமிழ், எமது தேசிய இனம் தமிழர், எமது தேசம் தமிழ்த் தேசம், இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது எமது இலக்கு என்பதே தமிழ்த் தேசியம் ஆகும்”

திராவிடக் கருத்தியலும் தமிழ்த் தேசியத்தின் பின்னடைவும் :

‘திராவிடர்’ என்பதன் உள்ளடக்கத்தைப் பாருங்கள்! அகராதியில் பொருள் தேடாதீர்! திராவிடர் இனவியல் கருத்தியலைக் கருத்தால் சந்தியுங்கள். திராவிடத் தேசியத்தையும், திராவிடக் கருத்தியலையும் விமர்சிப்பதும், இக்கருத்தியலால் தமிழ்த் தேசியத்துக்கு இழப்புகளும் ஏற்பட்டன. 1. திராவிட நாட்டுக் கருத்தாக்கத்தின் விளைவாக, அடிப்படையாகவும், முதன்மையானதாகவும் தமிழர் அடையாளம், தனித்தன்மை, அது சார்ந்த நலன் புறக்கணிக்கப்பட்டது. 2. தமிழகத்தின் அரசியல் அதி காரத்தில், ஆட்சியில், பொருளியல் வகை நிறுவனங்களில் சமூகப் பண் பாட்டுத் தளங்களில் திரைத்துறை உள் ளிட்ட அனைத்திலும் தமிழர் அல்லா தோரின் ஆதிக்கம் பரவியது. 3. தமிழ்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலம் முன்னுக்கு வைக்கப்பட்டு, அதற்கு முன்னுரிமை தரப்பட்டது. 4. இதனால் தமிழன் தமிழக உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல் லாது திராவிட மயக்கத்துக்கு ஆட்பட்டு, பல்வேறு உரிமைகளையும் வளங்களையும் இழந்தது. 5. இந்திய தேசியத்துக்கு மாற்றாகத் தமிழ்த் தேசியத்தை முன்வைக்க மக்கள் அணியமாவதற்கு மாறாக, திராவிடத் தேசியக் கருத்தியல் குறுக்கே வந்து தமிழ்த் தேசியச் சிந்தனையைத் தடம் புரளச் செய்தது. ஆகிய இக்காரணங்களாலேயே இதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியம் பேசுவோர் திராவிடக் கருத்தியலை எதிர்க்கின்றனர், விமர்சிக்கின்றனர்.”

“ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான். ” “தேசியத்தை மறுப்பது என்பது சாராம்சத்தில் உலகமயமாதலை ஆதரிப்பதுதான்”

“இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் இரண்டையும் மறுக்கிறது தமிழ்த் தேசியம்”

“தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்காதவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லர் என்பது மட்டுமல்ல, அவர்கள் சனநாயகவாதிகளும் அல்லர்” என்றார் லெனின். “உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான். சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான். தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.”          

“அடையாள அரசியலை முன் நிறுத்தும்போது அதை எதிர்க்க வேற்றுமையில் ஒற்றுமை அல்லது பன்முகக் கலாச்சாரம் பன்முக வாசிப்பு பற்றிப் பேசுவர்.” ‘தேசியம், தேசிய ஒற்றுமை என்றெல்லாம் பேசியிருந்தும் தேசியம் கேள்வியாகிய அதேபோதில், தமிழ்த் தேசியத்தின் சாத்வீகமும் மு.த.வுக்கு உடன்பாடற்றதாகத் தோன்றியிருக்கிறது பின்னாளில் சர்வோதயம் சார்ந்து அவர் எவ்வளவுதான் எழுதியிருந்தாலும், சிறுகதை உருவான காலத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாகத்தான் தன்னை மு.த. உணர்ந்துள்ளார்”

“தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு: “தேசம் என்ற எதார்த்தம் பற்றிய கருத்துகளின் தொகுப்பை தேசியம் என்கிறோம். இது ஒரு கற்பனை என்று தொண்ணூறுகளில் சிலர் பரப்பினார்கள். ஆனால் இந்தக் கருத்தைப் பற்றி முதன்முதலாக நூல் எழுதியவரின் பெயர் பெனடிக்ட் ஆண்டர்ஸன். அவர் நூலில் எங்கும் இந்தக்கருத்து இல்லை; ஆங்கிலத்தில் Imagined Communities என்ற பெயரில் பெனடிக்ட் ஆண்டர்சன் எழுதிய நூலில் வரும் கருத்து தேசியம் என்பது பல நிலைப்பாடுகளால் உருவாகிறது; நமக்குத் தெரியாத மனிதர்களோடு நாம் வைக்கிற உறவு, ஒரு எல்லையால் அல்லது மொழியால், அல்லது ஒரேவகை சீதோஷ்ணநிலையால் தீர்மானிக்கப்படுகிறது; நமக்குத் தெரியாதவர்களோடு உள்ள உறவு பழைய சமூகங்களில் இரத்த உறவு சார்ந்ததாய் இருந்தது; வேறுசில சமூகங்களில் மதம் சார்ந்ததாய் இருந்தது; புதிய தேசியம் இத்தகைய பல்வேறு தன்மைகளால் உருவாகிறது என்பதுதான் இந்த நூலின் கருத்து. நாம், உறவு இருக்கிறது என்று யூகித்துக்கொள்வதன் அடிப்படையில் தேசியம் உருவானதென்று கூறுவது வேறு; கற்பிதம் என்று பொய் போல் அந்தச்சொல்லைப் பயன்படுத்துவது வேறு. தேசியம் எந்த அடிப்படையும் அற்றதல்ல.”

“தமிழ்த் தேசியம் என்பது மொழி மொழி பேசுகிற இனம் அதனுடைய நிலப்பரப்பு அதனுடைய பண்பாடு அதனுடைய உளவியல் உருவாக்கம் அதனுடைய பொருளியல் பிணைப்பு என்று எல்லா அப்படைகளிலும் தேசம் என்பதற்குரிய வரலாற்று வழிப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் உண்மையான நேர்வகையான தேசம்.. தமிழ்த் தேசம் என்கிறபோது அப்படி இருப்பது அங்கீகரிக்கப்படாமல் மறுக்கப்பட்டும் பிறிதொரு அரசமைப்புக்குட்பட்டும் இருக்கிறபோது இயல்பாகவே அது ஒரு ஒடுக்குண்ட தேசத்தின் தேசியமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசியத்தின் தேசியம் என்ற வகையில் தமிழ்த்தேசியம் இன்று பொருத்தப்பாடுடையது. அந்த வகையில்தான் எல்லா அடிப்படைகளிலும் இங்கு மாற்றத்திற்கான அரசியல் பேசுகிறோம்.”           

தமிழ்த் தேசியம் குறித்த விமர்சனங்கள் / மறுப்புரைகள்

பல்வேறு தளங்களில் இருந்து தமிழ்த் தேசியம் நோக்கி விமர்சனங்கள், மறுப்புரைகள் உண்டு.

· தமிழ்த் தேசியம் தமிழரிடையே இனத்துவ மொழித்துவ உணர்வுகளை வளர்த்து மனிதப் பொதுவுணர்வை மழுங்கடிக்கின்றது. அந்த உணர்வுகள் துவேச, ஆதிக்க, வன்முறை உணர்வாக வெளிப்படவும் உந்துகின்றது. இன்றைய பல்பண்பாட்டு, பல் இன அல்லது கலப்பின, உலகமயமாதல் சூழலில் தமிழ்த்தேசியம் குறுகிய எல்லைகளைத் தமிழருக்கு நிர்மானிக்கின்றது; தனிமைப்பட்டு நிற்கின்றது. "நீங்கள் இடதுசாரிகள் அல்ல, பச்சை இனவாதிகள்"

·     அன்றாட வாழ்வின் முதல் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாக இருக்க, தமிழ்த் தேசியம் மொழியை முன்னிறுத்தி முற்போக்கான போராட்ட சக்திகளை வீணடிக்கின்றது. மனிதரிடையே காணப்படும் ஏழ்மை, ஏற்றதாழ்வுகள், வேலையின்மை போன்ற அடிப்படை பொருளாதார சிக்கல்களுக்கு தகுந்த முக்கியத்துவம் தராமல் தமிழ்த் தேசியம் கவனத்தை சிதறடிக்கின்றது. தமிழரிடையே சமத்துவத்தை முன்வைத்து எழுந்த பொதுவுடமை, இடதுசாரி போக்குகளுக்கு தமிழ்த் தேசியம் வலுச்சேர்க்கவில்லை. மாறாக வலதுசாரிப் போக்குக்களையே தமிழ்த் தேசியம் வெளிப்படுத்தியிருக்கின்றது.

· தமிழ்த் தேசியம் தமிழ் மேற்குடி மக்களின் கருத்தியலாகவே இருக்கின்றது. நுண்கலைகள், இலக்கியத் தமிழ் சராசரித் தமிழருக்கு அப்பாலேயே இருக்கின்றன. “தமிழ்த் தேசிய அரசியல் தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்ட அரசியலையே நம்பி இருக்கிறது” தேசியவாதத்தை வெறுமனே கருத்தளவில் கொண்டு நிறுவனத் தேவைகளின் அவசியம் பற்றி முரண்பாடான கருத்துக்களால் விலகிநிற்கும் தமிழ்த் தேசிய விசுவாசிகளுக்கும் யதார்த்தம் உணர்த்தப்பட்டு அவர்களும் உள்ளீர்க்கப்பட வேண்டும்.’

· தமிழ்த் தேசியம் தனிப்பட்ட அரசியல், ஊடக, வணிக சுரண்டலுக்கான கருத்தியலாக இருக்கின்றதே தவிர, தமிழரின் அன்றாட வாழ்வியலுக்கு உதவும் ஒரு கருத்தியல் இல்லை, கற்பிதமானது. தமிழ்த் தேசிய இன மாயை. அன்று மனுதர்மவாதிகள்; இன்று தமிழ்த்தேசியவாதிகள்! "பாசிச தமிழ்த் தேசியம் : நவகாலனிய எதிர்ப்பு இந்துத்வா தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் அழைப்பு தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்தும் எதிர்பார்த்து இருப்பதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்ச் சிவில் சமூகத்துக்கும் இடையிலான சந்திப்பில் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் வெற்றுக் கோஷங்களுமல்ல; ஒரு சிலரின் குத்தகைக் கோஷங்களுமல்ல:" சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிழக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்."

"இன்றைவரைக்கும் தமிழ்த் தேசியவாதத்தால் முழுமையாக முகம்கொடுக்க இயலாத பிரச்சினையாகச் சாதியம் இருப்பதற்குக் காரணம், தமிழ்ச் சமூகத்துக்கு உள்ளே இருக்கிற ஒடுக்குமுறைகளை மழுப்பியே இதுவரை தமிழ்த் தேசியம் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. புலம்பெயர் சூழலில் சாதிக்கு அர்த்தமில்லை என்ற வாதம் தருக்கரீதியாக ஏற்கக்கூடியது. அப்படியானால் நாட்டைவிட்டு நிரந்தரமாகவே புலம் பெயர்ந்தோரிடையே தொடரும் தேசிய உணர்வும் அர்த்தமற்றதாகாதா?"

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி சேரப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். “இலங்கையில் பொருளாதரக் கொள்கை திருப்தியளிக்கிறது மிவிதி சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.49 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதாரக் கொள்கை திருப்தி அளிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் நயோக்கிசின்ஹோரா தெரிவித்துள்ளார்”

- தூத்துக்குடி இசக்கி