என்னைக் கொலை செய்திருந்தால் கூட
ஒரே நாளில் இறந்திருப்பேன்
என் பௌத்தமே
எனை ஏன்
வதை செய்கிறாய்

உன்னை
நினைக்கும் போதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைகிறதே எனது உயிர்
எப்பொழுது கற்றுக்கொண்டாய்
எனை உடைப்பதற்கு

பிறந்ததிலிருந்து நீ விரதமா
இல்லை
பார்த்ததிலிருந்து விரோதமா?
உயிரைத் தின்கிறாய்

கனவுகளின்
திரைச்சீலை மறைவில்
எனைத்தாக்க
எங்கே
கற்றுக்கொடுத்தாய்
உன் கண்களுக்கு

கனவில் மட்டும்
எனை நனைக்கிறதே
உன் இதழ்கள்
எதற்காக?
எனைப் பித்தனாக்கும்
ஏதும் உண்டோ?

காந்தியே
உனக்கு ஒரு சவால்
அகிம்சையின் இம்சையில்
உன்னால் வாழமுடியுமா?

ஹிட்லரே
உனக்கும் ஒரு சவால்
உயிரோடு உன்னை
உண்ணக் கொடுக்கமுடியுமா?

அர்ஜுனா
உனக்கும் ஒரு சவால்
அவள் விழிகளின் தாக்குதலை
உன்னால் தாங்க முடியுமா?

பூங்காவே
உனக்கும் ஒரு சவால்
ஒரே ஒரு நாள்
மயானமாக உன்னை
மாற்றிக்கொள்ளமுடியுமா?

இத்தனைக்கும் நான்
உயிர் வாழ்கிறேன்

ஏனென்றால்
எனைக் கொலை செய்தது
பௌத்தம் என்பதால்

காற்றைக் குடித்துதான்
மனிதன் உயிர் வாழ்கிறான்
ஆனால்
மனிதமே காற்றைக் குடித்து
உன்னால் உயிர் வாழ முடியுமா
எனக் கேட்பது விந்தையாக
இருக்கிறது.

Pin It