எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாவும் இல்லாத நிலை வேண்டும் என்று லட்சிய நோக்கத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இந்தியாவில் இன்று பொருளாதர நெருக்கடி, அரசியல் நெருக்கடி ஆகிவற்றோடு பண்பாட்டு நெருக்கடியும் நிலவுகிறது.

அனைத்து அரசியல் கட்சியினர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாத, அறநெறி வழிப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

oorvalam_370தமிழகம் நீண்ட கடற்கரையைக் கொண்ட கரையோர மாநிலமாக விளங்குகிறது. நமது மீனவர்கள் பாக். நீரிளையிலும், வங்க கடலி லும், இந்து மாகடலிலும் மீன்பிடித்து வருகின்ற னர். தென் மாவட்டங்களைச் சார்ந்த நமது மீனவர்கள் கடலுக்குள்செல்லும்போது சிங்கள கடற்படையினரால், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. வலைகள் அறுக்கப் படுகின்றன. அவர்கள் பிடித்த மீன்கள் கொள்ளையிடப்படுகின்றன. பலமுறை இலங் கைக் கடற்படையினர் துப்பாக்கி சூட்டின் காரணமாக இந்திய மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

கடல்பரப்பில் யாருடைய உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடாது என்பது சர்வதேச ஒப்பந்தம் ஆனால் இந்த சர்வதேச நெறிமுறையை மீறித்தான் ராஜபக்சே அரசு இந்திய மீனவர்களைக் கொல்கிறது. இந்தக் கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராடும் ஒரே தேசியக் கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

இது தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல இது இந்தியாவின் பிரச்சினை இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். 1976ம் ஆண்டில் இந்தியாவிற்கு, இலங்கைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் இந்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வளர்த்தது. நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பறிகாட்ட நிலையில் உள்ளன.

கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் ஒய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும், அங்குள்ள அந்தோணியார் கோவிலில் வழிபடவும் உரிமை உண்டாம் ஆனால் கச்சத்தீவு அருகில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடதாம் எனவேதான் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் போராடுகிறது.

இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய முடியாது என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகிறார். ஆனால், இந்தியா, நேபாளத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தமும், பூடான் நாட்டோடு போட்ட ஒப்பந்தமும் எப்படி மறு ஆய்வு செய்யப்பட்டது? இந்தப் பிரச்சினையில் மத்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.க.வின் நிலை என்ன?

கச்சத் தீவை மீட்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. இந்த ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு எவ்வாறு மக்களை காக்கப் போகிறது?

இத்தகைய நிலை கூட்டாட்சி நெறிமுறையைக் காப்பாற்றுமா? மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய தி.மு.க இப்போது என்ன சொல்லப் போகிறது? பதவி சுகதிற்காக தி.மு.க. இந்த நிலை கைவிட்டுவிட்டதா?

மத்திய, மாநில உறவுகள் பற்றி காங்கிரஸ் கட்சி என்ன சொல்கிறது? கச்சத்தீவை மீட்கக் கோரி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடும் கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும். என வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் இத்தாலியக் கப்பல் ஒன்றில் வந்தவர்கள் இந்தியக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தச் துணிச்சல்  அவர்களுக்கு எப்படி வந்தது? இலங்கை ராணுவம் சுட்டபோது இந்திய அரசு கைகட்டி நின்றதால்தான் இத்தாலிக்காரனுக்கு இந்த துணிச்சல் வந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், இந்திய மீனவர்கள் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படும் போதும் காங்கிரஸ்  திமுக கூட்டணி அரசு எந்த நடவடக்கையும் எடுக்காததை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Pin It