இந்தப் பகுதியிலும், அருகாமையில் உள்ள கோவில்பட்டி பகுதியிலும் பருத்தி அதிகம் விளைகிறது. சங்கரன்கோவில் பகுதியில் மிளகாய் விளைகிறது. சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளது. இத்தனையிருந்தும் தண்ணீருக்கு இப்பகுதி மக்கள் திண்டாடும் நிலை நீடிக்கிறது. இப்பகுதியில் தோட்டங்கள் உண்டு ஆனால் நிலத்தடிநீர் வேகமாகக் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.

தண்ணீர் தட்டுப்பாடு ஒருபுறம், அதே வேளையில் மின்சாரத் தட்டுப்பாடும் மக்களை வாட்டுகிறது. பல மணி நேர மின்வெட்டால் மக்கள் அன்றாடப் பணியும் பாதிக்கிறது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது தண்ணீரும், மின்சாரமும் இல்லாமல் தவிக்கும் சிறு விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு வெளியேறுகிறார்கள். அதே வேளையில் தமிழகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டுக்காரர்கள் தொழிற்சாலைக்கு இலவச மாகத் தமிழகஅரசு மின்சாரம் வழங்குகிறது.

தண்ணீர் எடுத்துவர முன்பு பெண்கள் செப்புக் குடம் எடுத்து வந்தார்கள் பின்னர் அது பிளாஸ்டிக் குடமாக மாறியது இப்போது செப்புக்குடமும் போயிற்று, பிளாஸ்டிக் குடமும் இல்லை "கேன்'களில் தண்ணீர் வாங்கும் நிலை வந்து விட்டது.

girl_370சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் நிலம் எடுக்கப்படுகிறது. நீலகிரியில் விளைவுயும் முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு உற்பத்தி குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 59 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை தற்போது 7கோடியே 25 லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஆனால் இம்மக்களுகுத் தேவையான உணவு தானியங்களை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தாமிரபரணி நீர்தான் ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை பகுதிகளுக்கு வரவேண்டும் ஆனால், தாமிரபரணி ஆற்றில் கங்கை கொண்டாணிலிருந்து நாள்தோறும் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் கோகோகோலா தயாரிப்பதற்காக வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று 15 லட்சம் ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. விவசாயிகளின் விளைபொருளுக்குக் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை இதனால், விளைந்த கரும்பை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்து கிறார்கள்.

இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகத்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் 67 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். தீர்மானம் போட்டதோடு நாங்கள் நிற்க மாட்டோம் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இயக்கங்களையும் போராட்டங் களையும் நடத்தவுள்ளோம்.

விலைவாசி உயர்வை கட்டுபடுத்தக் கோரியும், பொதுத்துறையைப் பாதுகாக்கவும், அமைப்புசாரா தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக பிப்ரவரி 28ம் தேதி, இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்தப் போகிறார்கள். இப்போராட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டும்.

மின்சாரத்தட்டுப்பாட்டைப் போக்கவும், மக்களுக்குத் தேவையான அளவு குடி தண்ணீர் கிடைக்கவும், விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் கட்சியின் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் அதரவு தரவேண்டும். இவ்வாறு ஆர்.நல்லகண்ணு உரையாற்றினார்.

Pin It