இந்திய நாட்டை சுரண்டலற்ற சமூக அடக்குமுறைகளற்ற தேசமாக மாற்றவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. நமது நாட்டுக்கென தனித்த அடையாளங்களும் மகத்தான மரபுகளும் பெரும் வரலாறுகளும் உள்ளது. இந்த அடையாளங்களை உள்ளடக்கிய சோசலிசம் மலர வேண்டும். கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியில் உலகம் சிக்கி தவித்ததற்கு முதலாளித்துவமே காரணமாகும்.

வேலைவாய்ப்பை, உணவை, குடியிருப்பை வழங்கவோ வறுமை மற்றும் வேலைபறிப்பை ஒழிக்கவோ முதலாளித்துவத்தால் முடியவில்லை. விரல்விட்டு எண்ணத்தக்க கோடீஸ்வரர் களையும், வறுமையில் கோடிக்கணக்கான மக்களையும், உருவாக்கி பிளவை பெரிதாக்கி உள்ளது. இதனை எதிர்த்து தன்னெழுச்சியாக உழைக்கும் மக்கள், விவசாயிகள், மத்திய வர்க்கத்தினர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் எல்லாதரப்பினரும் போராடுகின்றனர். அரசுகள் நடத்திய அடக்குமுறை போராட்டங்கள் ஓயவில்லை. மாறாக அந்த அரசுகள்தான் பலவீனப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அருகில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளில் அநீதிக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடிய மக்கள், இன்று இடதுசாரிகளை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

group_370_copyஇந்தியாவை உலகப்பொருளாதார நெருக்கடி யான சிக்கலுக்குள் மூழ்கவிடாமல் காப்பாற்றி யது பொதுத்துறை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும்தான். ஆனால் மத்தியில் ஆளும் மன்மோகன், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, அலுவாலியா கும்பல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க விரும்பு கிறது. இடதுசாரிகளும், வலிமைமிக்க சங்கங் களும் நடத்திய போராட்டங்கள்தான் அவற்றை தனியாரிடம் போகவிடாமல் காப்பாற்றின.

 நாம் வங்கிகளை மட்டும் காப்பாற்றவில்லை. இந்த நாட்டையும் காப்பாற்றியுள்ளோம். இந்திய அரசின் பொருளாதாரக்கொள்கை என்று சொல்லப்படுவது உண்மையில் அமெரிக்க ஏகாதி பத்தியத்தாலும், அதனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உலக வங்கி மற்றும் உலக வணிக அமைப்பு ஆகிவற்றின் உத்தரவினால் உருவாக்கப்பட்டுள்ளது. நமது பிரதமரே தனது ஆட்சியில் முதலாளித்துவம் வளர்வதாக கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட பெரும் ஊழல்களால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமல்ல நாடே ஆடிப்போய் கிடக்கிறது. புதிய பொருளாதாரக்கொள்ளையின் லாபவெறி கொண்ட கோரமுகம் தெளிவாக தெரிகிறது.

காங்கிரஸின் தவறுகளை பயன்படுத்தி பிஜேபி நுழையபார்க்கிறது. பிஜேபியும் காங்கிரஸைபோலவே இன்னொரு முதலாளித்துவக் கட்சிதான். அமெரிக்க கொள்கையை சுமந்து செல்கிற கட்சி. காங். பிஜேபி இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. இரண்டு கட்சிகளும் இந்தியாவில் இரட்டைக்கட்சி  ஆட்சிமுறையை கொண்டுவர முயல்கிறார்கள். ஏனென்றால் ஒன்று வீழ்ந்தால் மற்றொன்று ஆளவரும். இரண்டுக்கும் ஒரே கொள்கை என்பதால் முதலாளிகள் நலன் பாதுகாக்கப்பட்டுவிடும். பாஜக பகிரங்கமாகவே வகுப்பு வாதத்ததை வளர்க்கும் கட்சி. ஆட்சி பொறுப்பேற்க இந்தியர்களின் ரத்த சேற்றில் நடந்து செல்லவும் அது தயாராக உள்ளது.

மக்கள் போராட்டங்கள் மூலமாக மாற்று உருவாக்கப்படவேண்டும். உணவு, வேலை, ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் மக்களோடு சேர்ந்து போராடவேண்டும். இடதுசாரிகளும் மாற்று அரசியல் சக்திகளாலும் மூன்றாவது அணி உருவாக வேண்டும். மூன்றாவது அணி என்பது காங். பாஜக இல்லாத இன்னொரு அணி மட்டுமல்ல, மக்களுக்கான அணியாக இருக்கவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நாட்டை உருவாக்கவேண்டும்.

Pin It