சக்திக் கொடு... சக்திக் கொடு எனத் தமிழ்சினிமாவில் பாடுவதைப்போல் வளரும் உலகின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற மின்சக்தி மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது இந்தியாவில் தனிநபர் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 600 கி.வாட் ஆனால் தமிழகத்தின் தனிநபர் தேவை 815 கி.வாட் ஆகும் இதில் கிராமப்புரத்தை விட நகர்புறத்திற்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. கல்விச் சாலைகளிலிருந்து தொழிற்சாலைவரை ரயில் போக்கு வரத்து, மருத்துமனைகள் என்று வாழ்வின் அனைத்திற்கு அடிப்படையாக மின்சாரம் மாறிவிட்டது.

இந்த மின்னுற்பத்திற்குதான் அரசுகள் ஆளாய் பறக்கின்றன நீர்மின்சாரம், அனல் மின்சாரம் அணு மின்சாரம் என இதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்தேறி வருகின்றன இதில் மனித குலத்தை இன்றும் பயமூட்டிவரும் அணு ஆயுதங்கள் கண்டறியப்பட்டப்பிறகுதான் அணு பிளவிலிருந்து மின்னுற்பத்தியும் செய்யமுடியும் என கண்டறித்தனர் கிரேக்க மொழியில் ஆட்டமோஸ் என்ற வார்த்தையிலிருந்து தான் ஆட்டம் (அணு) என்றால் பிளக்கமுடியுதது எனப்பொருள். கிரேக்க தத்துவஞானி டெமிகிரிட்டிஸ் துவங்கி ஜான்டால்ட்டன் வரை அணுவைப்பிளக்கமுடியாது என்றே கருதினர் ஆனால் அறிவியில் அறிஞர் ரூதர் போர்டு இத்தாலியின் என்ரிக்கேஃபெர்மி ஆகியோர் அணுவை பிளந்து அணுகுண்டினை உருவாக்கி போர்களில் பயன்படுத்தவும் முனைந்தனர்.

இரண்டாம் உலகப்போரில் இதுவே பேரழிவு ஆயுதமாகப்பயன் படுத்தப்பட்டது. ஜப்பான் மீது ஹிரோஷிமா, நாகாசாகியில் முதன் முதலாக அணுகுண்டு போடப்பட்டு பல்லாயிரக் கணக்க்ஷ்ன அப்பாவிமக்களின் படுகொலையோடு முடிந்து போனது இதிலிருந்துதான் அணுவை அழிவிற்கு பயன்படுத்திர்கூடாது என்ற அறைகூவல் உலகில் பிறந்தது அணு ஆயுதங்களுக்கு எதிரான கருத்தும் உலக அளவில் வலுபெற்றது.

அணுவை அழிவிற்கு பயன்படுத்தக்கூடாது ஆக்கத்திற்கு பயன்படுத்தலாம் என்ற முழக்கமும் இதிலிருந்து தான் பிறந்தது. அணு பிளவின் மூலம் மின்னுற்பத்தி செய்யலாம் என கண்டறியப்பட்டு இன்று உலக அளவில் அணுமின் உற்பத்தி நடைபெறுகிறது. பெரும் கதிர்விச்சு நச்சுப்பொருட்களை கொண்ட இந்தமுறை ஆபத்தானது மனிதக் குலத்தையே பாதிக்கும் என அறிவியலாலர்கள், பொதுமக்களும் போராடி வருகின்றனர். மறுபுரத்திலோம் மின்னுற்பத்திக்கு இது அத்யாவசியமானது என வாதிடும்வோரும் உண்டு இதன் மூலம் அவர்கள் அணு ஆயுத, உற்பத்திக்கு அடிகோளுவதாக ஒரு வலுவான விமர்சனமும் உண்டு. உலகில் நடைபெற்ற அணு உலை விபத்துகளால் இது போன்ற கருத்துகள் மேலும் வலுபெருகின்றன. ‘செர்னோபில்’ அணு உலை விபத்தும் தற்போது ஜப்பானில் நடைபெற்றஃபுக்குஷிமா அணு உலை விபத்தும், இயற்கை சீற்றங்கள் பேரழிவுக்காலங்களில் அதன் பாதுகாப்பு குறித்தான பலத்த சந்தேகங்களையும், அச்சத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வானிலை அறிக்கைபோல அன்றாட செய்திகளாகி போன சாலை விபத்துகள் குறித்து இன்று யாரும் அக்கரை எடுத்துக்கொள்வதில்லை… அப்படியான ஒன்றாக அணுமின் உற்பத்திக்கு ஆதரவாகப்பேசுவோர் அணுஉலை விபத்தையும் இன்று அணுகுவதாகத் தோன்றுகிறது ஆனால் அணுஉலை விபத்துகளால் வெளிப்படும் கதிர்வீச்சு சுற்றுச் சூழலை கெடுப்பதோடு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நிலைத்து நின்று நச்சுக்கதிர் வீச்சுகளை வெளியிட்டு உயிரினத் தொகுப்பையே அழித்தொழிக்கும் அழிவை சுமந்து நிற்பது ஆகும். வரலாற்றை கிரிஸ்த்து பிறப்பதற்கு முன்பு, பின்பு கி.மு., கி.பி என்பதைப்போல அணுஉலைகளை ஃபுக்கிஷிமாவிற்கு முன்பு, பின்பு என்று வரையறுத்துக் கொள்வது நல்லது. என்ற வாதம் சூழல் வாதிகளால் முன்வைக்கப்படுகிறது.

இந்திய அரசும் அணுத்துறை அறிவியல் அறிஞர்களும் மக்களின் அச்சத்தை போக்காது அணுஉலைக்கு எதிராகப் போராடுவோரை மதக்கண்ணோட்டத்தோடு அணுகுவது மட்டுமின்றி அந்நிய பண உதவியால் தான் இந்நிலை எடுத்துள்ளனர் எனப்பேசியும் வருகின்றனர். இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு, விபத்துக்காலங்களில் அதற்கான இழப்பீட்டை அந்தந்த கம்பெனிகளே வழங்கும் நடைமுறையை மாற்றி நமது நாடே அதனை வழங்கும் என கொள்கை முடிவு எடுத்தது நாட்டு மக்களின் நலனில் அக்கரை கொண்டதா? அப்போதெல்லாம் இந்த அறிஞர்கள் வாய்த்திறக்காது பேசா மடந்தையாக இருந்தனரே எதனால்? உலகில் பல நாடுகள் அணுஉலை மூடமுடிவு எடுத்துள்ள நிலையில் அதன் பழைய உதிரிபாகங்களையும் அமெரிக்காவின் பழைய அணு உலைகளையும் இந்தியாவில் பயன்படுத்தும் ஆபத்தும் எழுந்துள்ளது குறித்தும் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இந்திய இளைஞர்களின் நேசத்திற்கும், மதிப்பிற்கும் உரிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்கள், இது நூறு சதவீதம் பாதுகாப்பானது, சுத்தமான மின்சக்தி என சான்றிதழ் கொடுப்பது உண்மையில் உயிரினங்களையே உலகிலிருந்து சுத்தமாக அகற்றும் ஆற்றல் கொண்ட கொலைக்களமாகும். என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் அத்தோடு முடிவு பெற்று நின்று விடுவதில்லை அதனுடேயே பயணித்து ஆபத்தில்லாத புதிய முறைமைகளை எதிர்காலத்தில் அறிவியலால் சாதித்திட முடியும்.

அணுவை பிளப்பதில் ஆற்றல் என்றால் அணுவை பிணைப்பதிலும் ஆற்றல் உண்டு என்ற உண்மையை அணுவை எப்போது பிளந்தார்களோ அப்போதே கண்டு கொண்டனர். அணுப்பிளவில் அழிவு ஆயுதங்கள் செய்யமுடியும். பின்னதுவில் அழிவு ஆயுதங்கள் செய்யமுடியாது நச்சு கதிர்வீச்சும் இல்லை. எனவே போர்வெறி கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் இந்த ஆய்வுக்கு பெரும் முயற்சிகளை எடுக்கவில்லை சுற்றுச்சூழல், காற்று மாசுபடுதல், பருவநிலை மாற்றம் என பன்முனைத் தாக்குதலால் மாற்று சக்தி குறித்து இன்று புதிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

அணுப்பிணைவின் மூலம் உருவாகும் அளவு கடந்த ஆற்றலை கையாளும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு விட்டால் மின்சக்தி, எரிசக்தி எதுவானாலும் மிக மலிவாகக் கிடைத்துவிடும்.

உலகில் உள்ள சில நாடுகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ராஷ்யா, ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து கடந்த 2005 டிசம்பரில் இந்த முயற்சியில் கூட்டாக ஈடுபட்டு வருகிறது. ஐட்டர் (ஐபஉத) என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சர்வதேச அணுப்பிணைவு ஆய்வு ஒரு செயற்கை சூரியனையே நமது பூமிப்பந்தில் உருவாக்கும் முயற்சிகளை மிகத்தீவிரமாக எடுத்து வருகிறது.

அணுப்பிணைவால் ஏற்படும் கட்டுக்கடங்காத ஆற்றலால் இவ்வினை நடைபெறும் இடத்தையும் அதனை சுற்றியுள்ள அனைத்தையுமே உருக்கி பிளாஸ்மா நிலையை அதாவது திட, திரவ, வாயு நிலையாக எட்டிவிடும். இந்த ஆய்வு நடைபெறும், சோதனைக்கூடம் உபகரணங்கள், முதலியனயாவும் தீக்குழம்பாகிவிடும்; அந்த அளவிற்கு இரு அணுக்களை பிணைப்பதால் வெப்பம் வெளிப்படும். இதனை மட்டுப்படுத்தி மனிதனின் அன்றாட வாழ்விற்கு எவ்வாறு திருப்புவது என்பதுதான் இன்று எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி?.

பிளாஸ்மா இயற்பியல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், கிரையோஜெனிக் குளிர்வமைப்புகள் அதிநவீன ரோபோக்கள் ஆகியவற்றின் உதவிக்கொண்டு இதனை பாதுகாப்பாக அமைத்திட ஆய்வறிஞர்கள் மிகத்தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

சத்தமில்லாமல் முதலாவது அணுப்பிணைவு உலை பிரான்சு நாட்டின் ‘கடராச்சே’ என்ற இடத்தில் அமைய உள்ளது. மிகப்பெரிய இந்த சர்வதேச ஆய்வுகளுக்கு சுமார் 60,000 கோடி செலவாகலாம் இப்படி கட்டுபடுத்தப்பட்ட அணுப்பிணைவு செயலை மேற்கொள்ளும் உலைக்கு ‘‘டோகாமார்க்’’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.

கனமான அணுக்களை எளிதில் பிளக்கலாம் யுரேனியம், புளுட்டோனியம் இதனால் தான் எளிதில் பிளந்துவிட முடிகிறது. ஆனால் இலகுவான அணுக்களை தான் பிணைக்க முடியும் உலகிலேயே மிகவும் இலகுவான அணு ஹைட்ராஜன் ஆகும். இந்த ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமாகமாறி சூரியனில் இவ்வளவு வெப்பமூம், வெளிச்சமூம் ஏற்பட்டு உலக உயிரினங்களை எல்லாம் உய்வித்து வருகிறது.

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கண்டுப்பிடிப்புகளால் சுற்றுச்சூழல் மாசடையாது, அணுப்பிளவில் நச்சு கதிரியக்க கழிவுகள் உருவாகும். அது அடுத்தத் தலைமுறைக்குக் கூட பேராபத்தாய் அமையும் ஆனால் அணுப்பிணைவு முறையில் கதிரியக்கம் இல்லை விபத்து நடந்தால் கூட அணுக்கள் பிணையாமல் ஆற்றல் கிடைக்காமல் போகுமே தவிர வேறு சேதம் எதுவும் ஏற்படாது. இந்தப்பிணைப்புக்கான கச்சாப்பொருள்களில் முக்கியமானது டியூட்டிரியம் என்ற தனிமம். இதுவும் ஹைட்ரஜனின் ஒரு வடிவம்தான் என்பதால் சாதாரன தண்ணீரில் இது கிடைக்கிறது செம்பரபாக்கம் ஏரித்தண்ணீரில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான மின்சாரத்தை உலகுக்கே இதன் மூலம் வழங்கமுடியும்ஙு

மேலும் மரபுவழியில் நமது நாட்டில் தற்போது உள்ள நீர்தேக்கங்களிலிருந்து புதிய புனல்மின் உற்பத்தி விரிவாக்கங்களை செய்ய முடியும், கடலலைகள், கழிவுகள் மூலமாகவும் மின்னுற்பத்தியினை செய்யமுடியும், இந்தியாவின் ஒட்டுமொத்த மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 50% ஆகும், தொழிற்சாலை கழிவுகள் மூலம் 275 மெகா வாட்டும் தாவரக்கழிவுகள் மற்றும் குப்பைகள் மூலம் 30 மெகா வாட்டும், தாவரக்கழிவுகள் மூலம் 2408 மெகாவாட்டும் உற்பத்தியாகிறது.

நாட்டிலேயே நகரங்கள் அதிகமுள்ள நமது மாநிலத்தில் நகராட்சிகள் தோறும் கழிவுகளிலிருந்தும் குப்பைகளை நொதிக்க வைப்பதிலிருந்தும் மின்சக்தியை பெறமுடியும். இப்படி மாற்று முறைகள் குறித்து சிந்திப்பதும், புதிய ஆய்வுகளை மேற்கொள்வதும் அவசியம், இப்படி கழிவுகளிலிருந்து மின்உற்பத்தி நடந்தால் இயற்கையின் இரத்தநாளங்களான நதிகளும் சுத்தமாகும்; காற்றும் சுத்தமாகும்; உலகில் நடைபெறும் மாற்றங்களிலுருந்து நாம் மனமாற்றம் அடையவில்லையெனில் ஏமாற்றமே மிஞ்சும்.

Pin It