ஆந்திரத்தில் ஒப்படைத்தால் 1 இலட்ச ரூபாய் அபராதம்

சிங்கள மீனவர்கள் சென்னைக்கு அருகேயும், ஆந்திரப் பிரதேச எல்லைக்குள்ளும் மீன்பிடித்து அடிக்கடி கைதாகிறார்கள். அவ்வாறு அவர்கள் கைதாகும் போது சொல்லும் காரணம், திசை காட்டும் கருவி(GPS) பழுதாகிவிட்டது என்பதாகும். ஆனால், அக்கருவியை தமிழக அதிகாரிகள் சோதித்துப் பார்க்கும் போது அது நல்ல நிலையில் இருப்பது ஒவ்வொரு முறையும் தெரிய வந்துள்ளது.

ட்யு+னா என்ற மிக உயர்ந்த மீன் வகை சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசக் கடற்பகுதியில் அதிகமாகக் கிடைப்பதே சிங்கள மீனவர்கள் இப்பகுதிக்கு அடிக்கடி வருவதற்குக் காரணம். அது மட்டுமின்றி இங்கு அவர்கள் கைது செய்யப்பட்டால் மாப்பிள்ளை விருந்தும் உபசரிப்பும் நடக்கிறது.

ஆந்திரப்பிரதேச எல்லைக்குட்பட்ட கிரு‘;ணாம்பட்டினம் போன்ற பகுதிகளில் சிங்கள மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை கைது செய்தாலும் அவர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தான் அழைத்து வருகிறது. இங்கு அம்மீனவர்கள் கொண்டு வரப்பட்டவுடன், தமிழகத் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்துறை அலுவலகத்திலிருந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலையிடுவார்கள். சிங்கள மீனவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் விரைவில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துவார்கள்.

அதன்படி, சிங்கள மீனவர்களுக்கு மரியாதையும் விருந்தும் விரைவான விடுதலையும் கிடைக்கும். இதே மீனவர்கள் ஆந்திரப்பிரதேச எல்லைக்குள் பிடிபட்டு சிலசமயம், அம்மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அங்கு அம்மீனவர்களுக்கு தலைக்கு 1 இலட்ச ரூபாய் தண்டத் தொகை வசூலித்துக் கொண்டு தான் விடுதலை செய்திருக்கிறார்கள். சென்னையை போல் மாப்பிள்ளை விருந்தும், மரியாதையும் அங்கு கிடைப்பதில்லை.
 
இதனால் மனம் நொந்து போன இந்தியக் கடலோரக் காவல் படையினர் ஆந்திரப் பிரதேச எல்லைக்குள் சிங்கள மீனவர்களைக் கைது செய்தாலும் அவர்களை சென்னைக்கே கொண்டு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தின் தனு‘;கோடி அருகே மீன்பிடித்தாலும், பன்னாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடித்தாலும் அதுபற்றி இந்திய கடலோரக் காவல்படை, சிங்களக் கப்பற்படைக்குத் துப்புச் சொல்லி விட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது.
 
சிங்களக் கடற்படையினர் மழை பொழிவது போல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே நம் மீனவர்களின் படகுகளை நெருங்குவார்கள். அஞ்சிக் கொலை நடுங்கிப் போகும் தமிழர்களை ஆடைகளைக் களையச் சொல்லி, அம்மணமாக்கி, துப்பாக்கிக் கட்டையால் அடித்து, பிடித்துள்ள மீன்களையும், வலைகளையும, அவர்களது ஆடைகளையும் கடலில் வீசிவிடுவார்கள். ஒரு மீனவரின் ஆண்குறியை இன்னொரு மீனவரை பிடிக்கச் சொல்லி அடிப்பார்கள். அம்மணமாகவே அவர்களைத் தமிழகக் கரைக்கு விரட்டுவார்கள். 

சிங்கள மீனவர்களுக்கு சென்னையில் மரியாதை கிடைக்கிறது. தமிழக மீனவர்கள் வெளியே சொல்ல முடியாத வகையில் மானக்கேடு அடைகிறார்கள். உயிரிழப்பிற்கும் பொருளிழப்பிற்கும் உள்ளாகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், இந்திய ஏகாதிபத்திய அரசின் தமிழினப் பகைக் கொள்கையும், தமிழகக் கங்காணி அரசின் இனத்துரோகமுமே ஆகும். இந்த அட்டூழியங்களை தடுக்க மீனவர்கள் மட்டும் போராடினால் போதாது. ஒட்டுமொத்த தமிழகமே போர்க்கோலம் பு+ண வேண்டும்.

Pin It