கோவை கமிஷனர் சைலேந்திர பாபு கல்விப் பணிகளிலும், மாணவர்களின் படிப்பிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்.

அண்மையில் அவரைச் சந்தித்த அரவிந்தன் என்கிற பத்தாம் வகுப்பு மாணவர், தனக்கு மேற் கொண்டு படிக்க ஆசையாக இருப்பதாகவும் அதற்கு தனது சூழ்நிலை இடம் தரவில்லை என் றும் கூறி உதவி கேட்டி ருக்கிறார்.

தனது அண்டை வீட்டுக்காரரான ராஜ்குமார் என்பவரை அழைத்துக் கொண்டு கமிஷனர் சைலேந்திர பாபுவை சந்தித்த அரவிந்தன், "நான் பிறந் ததிலிருந்தே மாமா வீட்டில் தங்கிப் படித்து வந்தேன். 10ம் வகுப்பை முடிக்கும் வரையில் அங்கேயே இருந்தேன். கடந்த வருடம் எனது மாமா விபத்துக்குள்ளா னதால், கோவையில் இருக்கும் எனது பெற்றோர் வீட்டுக்கே வந்து விட்டேன். நான் தொடர் ந்து படிக்க வேண்டும் என்று சொல்லும்போதெல்லாம் என் தந்தை, "படிக்க வேண்டாம் வேலைக்குப் போ'' என்று கட் டாயப்படுத்துகிறார். நீங்கள்தான் என் படிப்பிற்கு உதவ வேண்டும்...'' என்று கலங்கியபடியே சொல்ல... உடனே அதற்கான ஏற் பாடுகளில் இறங்கினார் சைலேந்திர பாபு.

சைல்ட் வெல்ஃபேர் கமிட்டியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னவுடன், டான் பாஸ்கோ அன்பு இல்லம் என்கிற விடுதியில் அரவிந்தன் தங்குவதற்கான ஏற்பாடுகளை கமிட்டி செய்து கொடுத்தது.

அரவிந்தனின் படிப்புச் செலவிற்காக தன்னுடைய அமெரிக்க நண்பர்களிடம் நிதியை திரட்டியிருக்கிறார் சைலேந்திர பாபு. இந்தக் காக்கியின் மனித நேய கல்வி உதவிகள் தொடர நாம் வாழ்த்துவோம்.

- ஃபைஸ்