அண்மையில் எம்.பிக்களுக்கு  சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப் பட்டு, பாராளுமன்றத்தில் அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. எம்.பிக்களுக்கு மூன்று மடங்கு சம்பள உயர்வா? என பொது மக்கள் மத்தியில் அதிருப்தி குரல்கள் கேட்கின்றன. பிரபலங்கள் சிலரைச் சந்தித்து எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு தேவைதானா? எனக் கேட்டபோது....

பிரசன்னா (மகளிர் வழக்கறிஞர் சங்கத் தலைவி)

பாராளுமன்ற உறுப்பினர்க ளுக்கு ஏற்கனவே எல்லாச் சலுகை களும் கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் - விமானப் பயணங்கள் என எல்லாவற்றிலும் சலுகை வழங்கப் பட்டிருக்கிறது. இந்திய அரசின் சார் பில் அவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் ஓர் பிரதிநிதியாகத்தான் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பதை முதலில் அவர்கள் உணர வேண்டும்.

மேலும் இந்தச் சம்பள உயர்வு என்பது மக்களுக்கு முன்பு ஒரு கண் துடைப்பு நாடகமே. அதே போல எம்பிக்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சம்பளம் மற்றும் சலுகைகளும் மக்களின் வரிப் பணத்திலிருந்தே செலவழிக்கப்படு கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காத்தான் இவர் கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் இவர்களின் நடவடிக்கைகள் மக்க ளின் முன்பு இவர்கள் நல்லவர்களா என்ற கேள்வியைத் தான் எழுப்புகிறது.

ரயில், விமானப் பயணங்களின் போது முதல்வகுப்பு சலுகை என்று எல்லாவற்றிலும் எம்பிக்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கும் போது, திரும்பத் திரும்ப ஏன் மக்கள் பணத்தை எடுக்கிறீர்கள்?

உலக அளவில் அனைத்துப் பொருட்களின் விலைவாசிகள் குறைக்கப்பட்டு விடும்போது, இந்தியாவினுடைய விலைவாசிகள் மட் டும் குறையவே குறையாது. ஏனெ னில், எம்பிக்கள் இது போன்ற 3 மடங்கு சம்பளத்தை ஏற்றிக் கேட் பதுதான். மக்களுக்கு பணியாற்றும் கடமை ஒவ்வொரு பிரதிநிதிக்கும் உண்டு. ஆனால் இவர்கள் பணியில் இருக்கும்போது மக்களிடம் சில பணிகளை நிறைவேற்றிக் கொடுப்ப தற்கு மறைமுகமாக பணத்தையும் கேட்கின்றனர்.

மக்கள் முன்பு எம்.பிக்கள் அனைவரும் கண்டிப்பாக சமூக பணியாள ராகத்தான் செயல்பட வேண்டும். மருத்துவம் போன்ற மற்ற துறையில் உள்ளவர்கள் பல்வேறு முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், எம்.பி.க்கள் தங்க ளுக்கு கிடைக்கப் பெறும் முக்கியத்துவத்தையும், பதவி போன்றவற்றையுமே போதுமென்று எண்ணுகின்றனர்.

இவர்களின் சம்பள உயர்வால் இந்தியாவின் அடித்தட்டில் வாழும் மக்கள் மேன்மேலும் கீழ் மட்டத்திற்குத் தான் தள்ளப்படுகின்றனர். 

எம்பிக்களின் சம்பள உயர்வு பற்றி மக்களிடம் கருத்துக் கணிப்புக் கேட்டால், இதற்கு யாரும் ஆதரவு தரமாட்டார். ஜனநாயக நாட்டில் எம்பிக்களுக்கு மூன்று மடங்கு சம்பள உயர்வு என் றால் அவர்கள் ஒத்துக் கொள்வார் களா?

அ. மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்)

ஏற்கனவே நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சலுகை களை அனுபவித்து வருகின்றனர். விமானத்தில் குடும்பத்தினருடன் சென்று வர இலவச பயண அனுமதி, போன் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என பல்வேறு சலுகைகள் இருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் இன்னும் பல மடங்கு சம்பள உயர்வை உயர்த்தக் கோருவது என்பது வேதனைக்குரிய ஒன்று.

இந்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட் டிற்கு கீழே இருக்கும் சூழலில், இந்த மக்களை பிரதிநிதிபடுத்தக் கூடிய நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர்கள், இவ்வாறு மிக ஆடம்பர மான ஓர் வாழ்க்கை வாழ்வதற்கு முயலக்கூடிய வகையில் இந்த கோரிக்கை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

பிரபாகரன் (தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்)

எம்பிக்களுடைய சம்பளத்தை உயர்த்தியதற்குக் காரணம் அதிக ரித்து வரும் தினசரி செலவுகள், மக்க ளுடைய பிரச்சினைகளை சந்திக்கக் கூடிய இடத்திற்குச் செல்வது இது போன்ற அதிகப்படியான செலவுகளை கவனத்தில் கொண்டு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இதரச் செலவுகளும், பணி நிமித்தமாக செல்லும் போது தனிச் செலவுகள் என இவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளனர்.

அதுபோல சாமானிய மக்கள் எந்த அளவிற்கு சம்பாதிக்கின்றனர். உதாரணத்திற்கு, ரயில்வே ஊழியர், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஊழி யர்கள் 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் இன்றைய நிலை மைக்கு வாழ்க்கை நடத்த முடியுமா? 15 ஆயிரம் என்று நான் சொல்வது அதிகப்படியான ஓர் தொகை.

பேசிக்காக அவர்களுக்கு எவ்வளவு சம்பாதித்யம்? பேசிக்காக ஒரு ஃபிட்டர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று பார்க்கும்போது, அவர்களுக்கும் ஏன் இந்தச் சம்பள உயர்வை உயர்த்தக் கூடாது? ஒரு கன்டக்டர், டிரைவர் இவர்க ளுக்கு ஏன் சேலரியை உயர்த்தக் கூடாது? அதேபோல் எம்.பிக்கள் வாங்கக் கூடிய சேலரியில் பாதி சேலரியாவது வாங்க வேண்டாமா? என்பது தான் எங்களின் கேள்வி.

ஒரு வாடகை வீட்டில் இருந்து ஒன்று அல்லது இரண்டு குழந்தை களுடன் இருப்பதென்பது சமுதாயத்தில் நடுத்தரவாதிகளுக்கு முடியாத நிலைமை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனைவருக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது.

நடுத்தர குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே இந்தப் பிரச்சினைகள் உண்டு. அதனால், எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு ஏற்றியது போல மற்றவர்களுக்கும் - நடுத்தர வாதிகளுக்கும் சம்பள உயர்வு வேண்டும்.

தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிழைப்பு நடத்த முடியும்.

எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு என்பது வரவேற்கத்தக்கதுதான். சம்பள உயர்வை ஏற்றியதற்கு முக்கியக் காரணம், ஒரு சில தவறுகள் குறைவதற்கும் வழிவகுக்கும் என்பதால்தான். லஞ்சம் வாங்காமல் இருப்பதற்கும், பொது மக்களிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யாமல் இருப்பதற்கும், இது ஓர் உதவியாக அமையும்.

எல்லா அஃபிஸியல் ஸ்டாஃபுக் கும் சம்பள உயர்வு கொடுக்க வேண்டும். எம்பிக்கு மட்டுமல்ல. நடுத்தர குடும்பத்தினர்  கூட சாதாரண வாழ்க்கை நார்மலான வாழ்க்கை வாழ வேண்டும்.

எம்பிக்கள் இது நீண்ட நாள் கோரிக்கை என்று சொல்கின்றனர். நீண்ட நாள் கோரிக்கை என்று பார்க்கும்போது எல்லோருக்குமே நீண்ட நாள் கோரிக்கைதான். அதில் ரயில்வே துறை, காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சம்பள உயர்வு கேட்டுத்தான் வருகின்றனர்.

எல்லாத் துறைகளுக்கும் ஓர் யூனிஃபார்மெட்டியான சேலரி கொடுக்கப்பட வேண்டும். எல்லாத் துறைகளுக்கும் சம்பள உயர்வு ஏற்றுத் தரப்பட வேண்டும். இதுதான் என்னுடைய கோரிக்கை.

சந்திப்பு: முத்துப்பேட்டை இலியாஸ்