அஜாஸ் அஹ்மது... 25 வயது நிரம்பிய இளம் விஞ்ஞானி. DRDO (Defence Research and Development Organisation) என்கிற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவ னத்தில் பணியாற்றி வந்தவர்.

மத்தியுர் ரஹ்மான் சித்தீகி... 26 வயது இளைஞர். பெங்களூரில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்தவர். இந்த இருவருடன், பெங்களூரில் பல இடங்கள் மற்றும் ஹுப்ளி, ஹைதராபாத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பதின்மூன்று பேரை பெங்களூர் போலீஸ் கடந்த வருடம் கைது செய்தது.

கைதுக்கு காரணம், இவர்கள் அத்தனை பேரும் லஷ்கரே தய்யிபா, ஹுஜி தீவிரவாத அமைப்புகளில் தொடர்புள்ளவர்கள்; இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்கள் என்பதுதான்! தவிர, நாடு முழுவதிலும் சில முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டங்கள் தீட்டியதா கவும் கூறியது போலீஸ்.

ஏற்கெனவே, 2008 பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்று கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி மீது குற்றம்சாட்டி அவரை கைது செய்தது பெங்களூரு போலீஸ்.

இன்றுவரை அவர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஒரு ஆதாரத்தையும் மதானிக்கு எதிராக சமர்ப்பிக்க முடியாத பெங்களூரு போலீஸ்தான் மேற்கண்ட 13 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது.

இதில் இளம் விஞ்ஞானி அஜாஸ் மற்றும் மத்தியுர் ரஹ்மான் இருவரின் நடவடிக்கைகளை 3 மாதங்களாக கண்காணித்த பிறகுதான் கைது செய்தோம் என்றது பெங்களூரு போலீஸ்.

இந்த இருவரும் சர்வதேச தீவிரவாதிகளின் கையாட்கள் என்றும், சவூதி அரேபியாவிலிருந்து இவர்களுக்கு உத்தரவு வருகிறது என்றும் கூடுதல் பில்டப் கொடுத்தது பெங்களூரு போலீஸ்.

சவூதி அரேபியாவில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லை என்கிற அறிவு கூட பெங்களூரு போலீஸுக்கு இல்லை.

பெங்களூரு சிட்டி போலீஸ் கமிஷ்னரான பி.ஜி. ஜோஷி பிரகாஷ் மிர்ஜி, “கைது செய்யப்பட்டவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததை பல்வேறு வகையில் அறிந்து கொண்டு, தாக் குதல் திட்டத்தை நிறைவேற்றுவ தற்கு முன் அவர்களை கைது செய்து விட்டோம்...'' என மீடியாக்களிடம் பீற்றிக் கொண்டார். உண்மையில், கைது செய்யப்பட்ட 13 பேரும், பெங்களூரு ஆர்.டி.நகரிலுள்ள முனிரெட்டி பாளையாவில் வாடகை வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தவர்கள்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், கர்நாடகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக தங்கியிருந்தனர். இவர்களைப் பிடித்துதான் சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள வர்களாக போலீஸ் கூறியது. இதற்கு போலீஸ் ஜோடித்த கதை அலாதியானது.

கைது செய்யப்பட்டவர்களில் கொஹைப் என்கிற சோட்டு என் பவர். லஷ்கரே தய்யிபா அமைப்பால் பாகிஸ்தானில் பயிற்சி பெற் றவர் என்றும், பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி அன்று குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்தார் என்றும் இவருடன் சேர்த்து மற்றவர்களும் தாக்குதல் இலக்குகளை வேவு பார்க்கவும், கண்காணிக்கவும் ஏற்கெனவே பைக்குகளை சிலவற்றை திருடியும், புதிதாக பைக்குகள் மற்றும் கார்களை வாங்கியிருந்தனர் என்றும் ஜோடித்தது கர்நாடக போலீஸ்.

ஆனால், இதில் எந்த ஒன்றையும் இதுவரை நிரூபிக்கவில்லை போலீஸ்.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வுத்துறை, அஜாஸ் மிர்ஸா, மத்தியுர் ரஹ்மான் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என விரைவு நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தெரிவித்தது.

முன்னதாக, விஞ்ஞானி அஜாஸ் கைது செய்யப்பட்டு 180 நாட்கள் கடந்த பின்பும் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்று அஜாஸ் தரப்பு வழக்கறிஞரான அக்மல் ரஸ்வி மற்றும் அவரது குழுவினர் பிணை கேட்டு சிறப்பு நீதிமன் றத்தை அணுகினர். இந்த பிணை மனுவை எதிர்த்து மனு தாக்கல் செய்த தேசிய புலனாய்வு நிறுவனம், அஜாஸை விசாரிக்க இன்னும் கால அவகாசம் தேவை என்று கோரியது.

ஆனால் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோம்நாத் சிந்தாகி (180 நாட்கள் கடந்த பின்பும் அஜாசுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால்) அஜாசுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

25 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகைகட்டி, பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நீதிமன்ற நிபந்தனையோடு பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் அஜாஸ்.

அஜாஸ் விடுதலை செய்யப்பட்டாலும், அவரது வாழ்க்கை முன்புபோல பிரகாசமாக இல்லாமல் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இவர் பணியாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. இவரை வேலையிலிருந்து நிறுத்தியுள்ளது. தனது இழந்து மதிப்பை பெற அஜாஸ் போராட வேண்டியுள்ளது.

“ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால், பிறகு இதுபோன்ற அசம்பாவிதம் நடந்து விட்டது. இப்போது எனது வாழ்க்கை முழுவதையும் மீண்டும் நான் மறு நிர்மானம் செய்ய வேண்டியிருக்கிறது. சிறைப்பட்டிருந்த ஆறுமாத காலமும் எனது பெற்றோர், எனது சகோதரர்கள், நண்பர்கள் எனக்கு கனவாகவே இருந்தனர். நான் அவர்களுடன் இருக்கவே விரும்பினேன்...'' என் கிறார் டி.ஆர்.டி.ஓ.வின் இளம் விஞ்ஞானி விருது பெற்ற அஜாஸ்.

ஆகஸ்டு 25, 2012ல் இவருடன் கைது செய்யப்பட்டவர்களில் பத்திரிகையாளரான மத்தியுர் ரஹ்மான், சையது யூசுப் மற்றும் சையது தன்சீம் ஆகியோரும் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

ஒரு இளம் விஞ்ஞானியின் வாழ்க்கையை கெடுத்து கேள்விக் குறியாக்கியது மட்டுமல்லாமல் எங்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது என்கிறது பெங்களூரு போலீஸ்.

பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் ஜோதி பிரகாஷ், “நாங்கள் ஒருவருடைய முன்னேற்றத்தை நாசப்படுத்தி விட்டோம் என்று உங்களால் சொல்ல முடியாது...'' என்கிறார்.

அஜாஸ் மிர்ஸாவின் தந் தையோ, “என் மகனின் முன்னேற் றத்தோடு இப்படி விளையாடியவர்கள் யார் என்பதை கண்டறிய ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்...'' என்கிறார் கவலை தோய்ந்த குரலில்!

அஜாஸ் இழந்த ஆறுமாத கால வாழ்க்கையை யார் திருப்பித் தருவது? பெங்களூரு போலீசா? தேசிய புலனாய்வு நிறுவனமா? அதிகார மையங்களா? அல்லது அஜாûஸ தீவிரவாதியாக அடையாளப்படுத்திய சதிகாரர்களா? 

புரோஹித்துக்கு ஒரு நீதி! அஜாஸ் மிர்சாவுக்கு ஒரு நீதி!!

இந்திய அரசின் இரட்டை நிலை - கொந்தளித்த உவைசி

அஜாஸ் மிர்சாவை டி.ஆர்.டி.ஓ. வேலையிலிருந்து நீக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர மாநில மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசத்துதீன் உவைசி.

“அஜாஸ் மிர்சாவுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை. அதனால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடு விக்கிறோம் என தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்த பின்பு விடுதலை செய்யப்பட்டிருக்கும் அவரை, டி.ஆர்.டி.ஓ. எந்த காரணத்திற் காக வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது என பாராளுமன்றத்தில் கடந்த 6ம் தேதி கேள்வியெழுப்பியுள்ளார் அசத்துத்தீன் உவைசி.

மேலும், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலி ருக்கும் கர்னல் புரோஹித்துக்கு மட்டும் எப்படி சம்பளமும், சலுகைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

“டி.ஆர்.டி.ஓ.வில் இரண்டு வருடங்கள் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருக் கிறார் அஜாஸ் மிர்சா. இஸ்லாமிய சமூகமான எங்களிடத்தில் விஞ்ஞானிகள் இல்லை. மிர்சா தவறாக சிக்க வைக்கப்பட்டிருக்கிறார். தேசிய புலனாய்வு அமைப்பு அவரை விடுதலை செய்திருக்கிறது. எந்த வகை மதச்சார்பின்மை இங்கே பின்பற் றப்படுகிறது என்பதை அரசாங்கத்திடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகி றேன்...'' என்றும் மக்களவையில் ஜனாதிபதி உரையின் மீதான விவாதத்தின்போது கொந்தளித்திருக்கிறார் உவைசி.

டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானியான அஜாஸ் அஹமது மிர்சா பயங்கரவாத குற்றச்சாட் டில் கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு நிறுவனத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாத காரணத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக் கிறார்.

ஆனால், 2008ல் மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் புரோஹித்துக்கு சம்பளமும், சலுகைகளும் வழங்கும் மத்திய அரசின் இரட்டை நிலையை, “கர்னல் புரோஹித் மஹாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதே மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 4 வருடங்களாக புரோஹித்துக்கு சம்பளம் கொடுத்து வருகிறது. இதை நான் சொல்லவில்லை. புரோ ஹித்தின் கூட்டாளியும், பயங்கரவாத வழக்கில் புரோஹித்துடன் குற்றம் சாட்டப்பட்டவருமான இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் மனு செய்து கேட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தக வல் கூறுகிறது...'' என தெரிவித்திருக்கிறார் உவைசி.

மேலும், “அஜாஸ் மிர்சாவிற்கு எதிராக ஆதாரங் கள் இல்லையென்றால் அவர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகள் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்...'' என பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணிக்கும், கர்நாடக மாநில முதல்வர் ஜகதீஷ் ஷெட்டருக்கும் இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதி பதியுமான மார்க்கண்டேய கட்சு கடிதம் எழுதியி ருப்பதையும் மக்களவையில் சுட்டிக் காட்டியுள் ளார் உவைசி.

நீதிபதி கட்சு தனது கடிதத்தில், “அஜாஸ் மிர்சா விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அஜாஸ் அஹ்மது மிர்சா விற்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பது உண்மையானால் அவர் பணி நீக்கம் செய் யப்படுவதற்கு முன் இருந்த பதவியில் அமர்த்தப்பட வேண்டும். இல்லையென்றால் முஸ்லிம்கள் பயங்க ரவாதிகள் என்றதவறான செய்தி நாடு முழுவதும் சென்றடையும். இது, முஸ்லிம்களை துன்புறுத்த இனவாத சக்திகள் ஆடிய முறையான ஆட்டமாகவே இருக்கும்...'' என்று தெரிவித்துள்ளார்.

Pin It