Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

இலங்கைப் பெண் ரிஸ்னா 4 மாத குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தாள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சவூதி அரசாங்கம் மரண தண்டனை விதித்த சம்பவத்தைத் தொடர்ந்து சவூதி அரசாங்கத்தின் குற்றவியல் தண்டனை குறித்து அதிகளவில் விமர்சனம் செய்யப்படுகிறது.

இந்த விமர்சனங்களையும் மீறி அவதூறுப் பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன. சர்வதேச மனித உரிமை அமைப்புகள்தான் சவூதியின் தண்டனைச் சட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின் றன.

கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் சவூதி யைச் சேர்ந்த ஒருவரை இன்னொருவர் தாக்கியதில், தாக்கப்பட்ட நபரின் உடல் செயலற்றுப் போனதால் அவரைத் தாக் கிய நபருக்கும் அதேபோன்ற தண்ட னையை வழங்கி அவரது உடலியக்கத் தையும் செயலிழக்கச் செய்ய வேண்டும் என சவூதி நீதிமன்றம் தண்டனை விதித்த தாக செய்தி பரப்பப்பட்டது.

இந்த தண்டனையை சர்வதேச பொது மன்னிப்புச் சபையான ஆம்னெஸ்டி இன் டர்நேஷனல் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிய பின் இப்பிரச்சினை பூதாரக மாக வெடித்தது. இந்த கடுமையான தண் டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஆம்னெஸ்டி இன்டர்நேஷ னல் சவூதி அதிகாரிகளை கேட்டுக் கொண் டிருந்தது.

இதனை பொய்ப் பிரச்சாரம் என மறுத் துள்ளது சவூதி அரசின் நீதித்துறை அமை ச்சகம். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பிரிட்டன் அலுவலகம் இந்த தண்டனை மிக விவகாரமானதாகும் என கடுமையான சொற்பிரயோகத்துடன் கண் டனம் தெரிவித்ததையடுத்து, சவூதியின் நீதித்துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பதிவில் "இந்தச் செய்தி முற்றிலும் பொய் யானது' என மறுப்பு தெரிவித்திருக்கிறது.

"உரிமைகள் என்ற பெயரில் லாபி செய் யும் மீடியாக்களும், மனித உரிமை அமைப் புகளும் இந்த தகவலை நன்றாக சரிபா ருங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளது.

சவூதி அரசின் நீதித்துறை அமைச்ச கம், "குற்றவாளியின் உடலை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை தள்ளுபடி செய்ய நீதிபதி முடிவு செய்திருக்கிறார்...' என்றும் அது தெரிவித் துள்ளது.

சவூதியைச் சேர்ந்த அலி அல் கவா ஹிர் என்ற 24 வயது இளைஞர் 2003ன் பிற்பகுதியில் அவரது நண்பரைத் தாக்கி யுள்ளார். தாக்குதலுக்குள்ளான நபர் இடுப் புக்கு கீழே செயலிழந்த தன்மைக்கு ஆளாகி விட்டார். அலி கவாஹில் இந்த குற்றத்தில் ஈடுபட்டபோது அவருக்கு வயது 14தான். இந்த குற்றத்திற்காக அலி கவாஹிர் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மில் லியன் ரியால்களை (இந்திய மதிப்பில் ரூ. 1,43,90,000) இழப்பீடாகத் தர வேண்டும். தவறினால் அவருக்கு உரிய வகையில் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

அதாவது, அலி கவாஹிருக் கும் இடுப் புக்குக் கீழே செயலிழக்கத்தன்மையை ஏற்படுத்தப்படும் என்று சவூதி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக செய்தி வெளியிட்டி ருந்தது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்.

மேலும், இதேபோன்ற உடலியக் கத்தை முடக்கும் தண்டனை 2010ல் சவூ தியில் ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாக வும், ஆனால் அந்த தண்டனை நிறைவேற் றப்பட்டதா என்பது தெரியவில்லை என் றும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரி வித்திருந் தது.

சவூதி அரேபியாவில் மட்டும் தான் இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள் அமல்படுத் தப்படுகின்றன. இஸ்லாமிய ஷரியா சட்டங் களுக்கு எதிராக விஷ(ம)ப் பிரச்சாரம் செய்து வரும் மேற்குலக ஊடகங்களுக் கும், சர்வதேச மனித உரிமை அமைப்பு களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதமான தீர்வை வழங்கும் ஷரியா சட்டங் கள் எட்டிக்காயாக கசக்கின்றன.

மனித உரிமைகள் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நியாயங்க ளைப் பற்றி, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் குற்றவாளிகளுக்கு மட் டுமே பரிந்து பேசி போலியாக மனித உரி மைகளை நிலை நிறுத்தத் துடிப்போருக்கு நடுநிலையான நீதியை வழங்கும் ஷரீயா சட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதில் வியப்பில்லைதான்.

சவூதி அரேபியாவில் மட்டுமே ஷரீயா சட்டங்கள் அமலில் இருப்பதால் அதனை இல்லாது ஆக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, சவூதியின் தண்டனைச் சட்டங்களை சர்வதேச அளவில் விவாதப் பொருளாகவும் கேள்விக் குறியாகவும் மாற்றத் துடிக்கின்றன போலி மனித உரிமை அமைப்புகளும், மீடியாக் களும்!

இதுபோன்ற உள்நோக்கத்துடன் அவை செயல்படுவதால்தான் செய்திக ளைக் கூட சரியாக உள்வாங்காமல் சவூதி அரசாங்கத்தின் மீது அவை அவசர கோல த்தில் அவதூறுகளை அள்ளி வீசி வரு கின்றன.

அலி அல் கவாஹிர் விஷயத்திலும் இவை அவதூறு பிரச்சாரம் செய்து வரு கின்றன என்பதை சவூதியின் நீதித்துறை அமைச்சகம் அளித்துள்ள மறுப்புச் செய் தியின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

அத்தோடு, "உடலியக்கத்தை முடக்கும் தண்டனை 2010ல் சவூதியில் ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அது நிறை வேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை' என்ற ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் வரிகள், சவூதி அரசாங்கத் தின் தண்டனைகள் குறித்த விஷயத்தில், உண்மை நிலையை ஆய்ந்து உணரும் முஸ்தீபுகளை மேற்கொள்ளாமல், தகவல் களை உரிய வகையில் உள்வாங்காமல் நுனிப்புல் மேய்ந்து விட்டு, அவதூறுப் பிரச்சாரம் செய்யும் அதன் சுயரூபத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ஆக, சவூதி அரசின் தண்டனைச் சட் டங்களை விமர்சனம் என்ற நேர்மையான பார்வையையும் தாண்டிய காழ்ப்புணர்ச்சி யோடும், உள்நோக்கத்தோடும், விஷத்தன் மையோடும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், மீடியாக்களும் சர்ச்சை யாக்கி வருகின்றன என்பது மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 லறீனா அப்துல் ஹக் 2013-05-15 01:16
சவூதியில் நடைமுறையில் இருப்பது சவூதி நாட்டுச் சட்டம் என்று வேண்டுமானல் சொல்லுங்கள், ஏற்கிறோம். மாறாக, அங்கு நடைமுறைப்படுத்த ப்படுவது இஸ்லாமிய ஷரீஆச் சட்டம் என்று கூறி தயவுசெய்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

ரிஸானாவுக்கு இழைக்கப்பட்டது மிகப் பெரும் அநீதியே! இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டமைக்கு இதுவரை எந்தச் சான்றும் முன்வைக்கப்படவி ல்லை. சவூதியின் தயவில் வாழும் முல்லாக்கள் இந்த உண்மையை மூடி மறைத்து, ஷரீஆ அது இது என்று சாதாரண மக்களின் காதுகளில் பூச் சுற்றுகிறார்கள் .

சவூதியில் நடைமுறையில் இருப்பது ஷரீஆ சட்டம் தான் என்று வாதிடும் முல்லாக்களின் முன்னிலையில் ஒரே ஒரு கேள்வியை வைக்கிறேன், முடிந்தால் பதில் சொல்லட்டும்: சூடானில் இருந்து உரிய பாதுகாவலர்கள் (மஹ்ரம்) துணையின்றி வந்தார்கள் என்ற காரணம் காட்டி நூற்றுக் கணக்கான சூடானியப் பெண்களை ஹஜ் செய்ய விடாமல் (கஃபா ஆலயம் அவங்க அப்பன் வீட்டுச் சொத்து என்று நினைப்புப் போல!) திருப்பி அனுப்பி, "ஷரீஆ" பேணிய (!?) அதே சவூதியில் ஆயிரக் கணக்கான அந்நிய இளம் பெண்கள் வருடக் கணக்கில் வீட்டுப் பணிப் பெண்களாக அமர்த்தப்படும் போது, இதே ஷரீஆ சட்டத்தை எந்தப் பானைக்குள் போட்டு மூடி வைக்கிறார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?
Report to administrator
0 #2 Venthan 2013-05-15 01:17
நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் குற்றம் செய்தவர்களை கறிக்கடையில் மிருகத்தை வெட்டி பங்கு போடுவது போல் வெட்டிப் போடுவது சரி என்பது போல் இருக்கின்றது. உங்களிடம் இருக்கும் நியாயம் என்ன என்றே புரியவில்லை. மனித நேயம் இல்லாமல் எழுதாதீர்கள். எந்த மனிதனும் குற்றம் செய்யாமல் இல்லை. குற்றம் செய்தவர்கள் எல்லோருக்கும் இவ்வாறு தண்டனை கொடுத்தால் உலகத்தில் யாருமே மீதமிருக்மாட்டா ர்கள். போலி மனிநேய அமைப்புகள் என்று எழுதுகின்றீர்கள ், அது சரியா? உங்கயுளுடைய மதத்தையோ கொள்கைகளையே போலி என்றால் கருத்துச் சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்விர்களா?
Report to administrator
0 #3 முத்தமிழன் 2013-05-15 16:05
நண்பர் அபு அவர்களே, சவுதியின் தண்டனைச் சட்டம் சரி எனில் இலங்கைக்கு உதவி செய்து லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழிக்க இலங்கையுடன் கைகோர்த்திருந்த தற்காக சவுதியின் ஆட்சியாளர்களுக் கு என்ன தண்டனை கொடுக்கலாம்?. உயர்மட்டத்திலிர ுக்கும் ஒரு அரேபியனுக்காவது இதுவரை கொடும் தண்டனை வழங்கப்பட்டுளதா க நம்மால் அறியமுடியவில்லை யே இதற்கு தங்களின் விளக்கம் என்ன?
Report to administrator
0 #4 Isarudeen M Aliyar 2013-05-17 13:31
Dear sister Lareena, I agreed with you in the house maid matter in the Middle east, but we must stop the housemaids in the future & we Muslim community must help them to solve their problems through our support with alternative option. The Ladies are coming without maharam is wrong practices against to share'a Law. but based on our analyzing & research with all reliable sources, there are many evidences available including postmortem report from the Doctor as prove of killed the child by Rizana who was accepted & then accused. The Sri Lankan government, Foreign Ministry and mediators and Coordinators were made many wrong things without arabic communication too and responsible for the lost of Poor Muslim Lady Rizana for the last 7 yrs which you did not know all well.

Iniyavan Isarudeen
Report to administrator
0 #5 Guest 2013-05-24 16:12
சவூதி அரேபியாவில் மட்டும் தான் இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள் அமல்படுத் தப்படுகின்றன. இஸ்லாமிய ஷரியா சட்டங் களுக்கு எதிராக விஷ(ம)ப் பிரச்சாரம் செய்து வரும் மேற்குலக ஊடகங்களுக் கும், சர்வதேச மனித உரிமை அமைப்பு களுக்கும், பாதிக்கப்பட்டவர ்களுக்கு நீதமான தீர்வை வழங்கும் ஷரியா சட்டங் கள் எட்டிக்காயாக கசக்கின்றன.''

சகோதரி லறீனா... இந்த கட்டுரையில் சவுதி அரேபியாவில் இஸ்லாமிய தண்டனை சட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன என்கிறார் கட்டுரையாளர்.ஆம ்,தண்டனை சட்டங்களை பொறுத்தவரை இஸ்லாமிய தண்டனை சட்டங்கள் தான் அங்கே.அதில் மாற்று கருத்து இல்லை.ஆனால்,அதை அவர்கள் ஷரீயா படி நீதமாக பின்பற்றுவதில்ல ை.சட்டம் சில நேரங்களில் அங்கும் வளைகிறது.மற்ற விஷயங்களில் ஷரீயாவை அவர்கள் சரியாக பின்பற்றுவதில்ல ை.உதாரணம்.நீங்க ள் சொன்ன சூடானிய பெண்கள் மேட்டர்.ஆனால் நீங்கள் விளங்குவதை போல் இந்த கட்டுரையை விளங்கினால் இஸ்லாமிய சட்டம் தவறு என்கிறீர்களா?இங ்கே கட்டுரையாளர்,இஸ ்லாமிய சட்டங்களை காழ்புணர்ச்சியோ டு விமர்சிக்கும் போக்கை தான் கண்டிக்கின்றார் .சவுதிக்கு வக்காலத்து வாங்கவில்லை என்றே நினைக்கிறேன்.
Report to administrator

Add comment


Security code
Refresh