ஒரு நாட்டின் பெரும்பான்மை இனம் அந்த நாட்டின் ஆட்சியதிகாரம் மற்றும் முக்கிய விஷயங்களில் அது முடிவெடுக்கும் தன்மை என்பன தனது கையை விட்டு நழுவிவிடக் கூடும் என்று கருதுமாயின் அந்த பெரும்பான்மை இனம் வன்முறைமிக்கதாக மாறும் இப்படியொரு யதார்த்தமான ஆனால் ஆய்வுக்குரிய வார்த்தைகளை வெளிப்படுத்தியவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழ கத்தின் பேராசிரியர் எம்.டி. முனி.

எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை! அப்படியே சிங்கள இனத்திற்கு கனகச்சிதமாய் பொருந்துகிறதல்லவா! முப்பது வருடங்கள் தொடர்ந்து தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான சிங்கள அரசின் யுத்தம், மேற்கண்ட பேராசிரியர் முனியின் கூற்றுக் கொப்ப சிங்கள இனத்தின் அச்சத்தினால் விளைந்ததுதான். இந்த அச்சம் இலங்கை சிறு பான்மை சமூகமான முஸ்லிம்களின் சமூக அரசியல் எழுச்சியைக் கண்டும் சிங்கள் இனத் திற்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் முஸ்லிம்களுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கிறது சிங்கள இனவெறிக் கூட்டம்.

கடந்த மார்ச் 9ம் தேதி காலியில் சிங்கள இனவெறிக் கூட்டமான பொதுபல சேனா என்கிற அமைப்பின் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்த பய ராஜபக்சே கலந்து கொண்டார்.

இது, இலங்கை குடிமக்களின் பார்வையில் சாதாரண நிகழ்வாக - ஒரு அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தாலும், சிங்கள பௌத்த இனத்திற்காக, அவர்களின் நலன்களுக்காக மட்டுமே பாடுபடுவதாக கூறிக் கொள் ளும், அந்த சிங்கள பௌத்த மக்களின் நலன்களுக்காக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறைத் தாண்டவமாடும் மதவாத அமைப்பான பொதுபல சேனாவிற்கு ஆட்சியாளர்க ளின் ஆசிகள் உண்டு என்பதை மறைமுகமாக உணர்த்தும் ஒரு நிகழ்வாகவே இதை பார்க்க முடிகிறது.

இந்த நிகழ்வோடு, இன்னொரு செய்தியையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் சென்னைக்கு வந்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டணியின் இணை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், பொதுபல சேனாவை உருவாக்கியதும், அதைபின் நின்று இயக்குவதும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜ பக்சேதான் என்று வெளியுலகத்திற்கு தெரி யாத உண்மையை அம்பலப்படுத்தினார்.

கோத்தபயவின் பொதுபல சேனா நிலையத் திறப்பு விழாவிற்கும், பிரேமச் சந்திரன் வெளியிட்ட உண்மைக்கும் தொடர்பிருக்கிறதல் லவா?

ஆக, சிறுபான்மையினரை ஒரு கை பார்க்ககளமிறக்கப்பட்டிருக்கும் பொதுபல சேனாவின் பிதாமகன் யார் என்பதை இனி சந்தேகத் திற்கிடமில்லாமல் நம்ப முடியும். அந்த பொது பல சேனாவின் பயணம் என்பது நம் நாட்டின் சிவசேனாவையொட்டி இருக்கிறது. பெயரில் மட்டுமல்ல செயற்பாடுகளிலும்தான்.

"மராட்டா சிர்ஃப் மராட்டியோங்கேலியே' (மராட்டியம் மராட்டிய மக்களுக்கே) என்ற கோஷத்தை முன் வைத்துதான் சிவசேனா துவங்கப்பட்டது.

1970களில் இந்த கோஷத்துடன் துவங்கப் பட்ட சிவசேனா... மும்பைத் தமிழர்களை விரட்டியடித்தது. தொடர்ந்து, உத்திரப் பிரதேசம், பீஹார் மேற்கு வங்கம் என பல மாநிலத்த வரை மும்பையை விட்டும் விரட்டியடித்தது. மராட்டியம் என்ற ஒற்றை கோஷத்தை முன் வைத்து துவக்கத்தில் மராட்டியர்களின் நலன்களைப் பற்றி மட்டும் பேசிய சிவசேனா மெல்ல மெல்ல தனது நிகழ்ச்சி நிரலை பல் வேறு தளங்களுக்கு மாற்றிக் கொண்டது. அத்தனையும் வன்முறைத் தளங்கள்தான்!

1992 டிசம்பர் மாதம் பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் கலவரத்தில் ஈடுபட்டது சிவ சேனா. 1993 ஜனவரி கடைசிவரை ஏறக்குறைய 2 மாதங்கள் இந்த வன்முறை நீடித்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பதை சிவசேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு ஒரு வாய்ப்பாக அது ஆக்கிக் கொண்டது.

அதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக சிவ சேனா செய்து வந்த அவதூறுப் பிரச்சாரங்கள் விஷக் கருத்துகள் எத்தகையது என்பதற்கும், இந்தப் பரப்புரைகள் மூலம் மராட்டிய மக்க ளிடத்தில் அது எத்தகைய செல்வாக்கு செலுத் தியது என்பதற்கும் இந்த 1992-93 கலவரமே சான்று.

சிவசேனாவின் வன்முறை அரசியலின் அரிச்சுவடியைத்தான் தனது கொள்கையாக வகுத்துக் கொண்டு, "சிங்கள நாடு சிங்கள வர்க்கே' என்ற கோஷத்துடன் பொதுபல சேனா வெளியுலகிற்கு வந்திருக்கிறது.

பொதுபல சேனாவின் இனவெறிக்கு முதல் சாட்சி தம்புள்ள பள்ளிவாசல். பள்ளிவாசலை பதம் பார்த்த பொதுபல சேனா ஹலால் பிரச் சினை, பர்தா என அடுத்தடுத்த நிகழ்ச்சி நிர லுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.

சிறுபான்மை தமிழ் - முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு இணையான அதிகாரத்தைப் பெறக் கூடாது என்ற சங்கல்பத்துடன் களமாடி வருகிறது பொதுபல சேனா.

இந்த வன்முறை அமைப்பின் உறுப்பினர்கள் பௌத்தபிக்குகள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியல்ல. ஏனெனில், அமெரிக் காவை இஸ்ரேலியர்கள் இயக்கு வதைப்போல, சிங்கள ஆட்சியார்களை இயக்குவது இந்த புத்த பிக் குகள்தான். அதனால், பிக்குகள் அடங்கிய பொதுபல சேனா சட்டத்திற்கு கட்டுப்படாமல் சிவசே னாவைப்போல தனி ராஜ்ஜியம் நடத்துகிறது.

பொதுவாக இலங்கை முஸ் லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் தேசிய ஒருமைப்பாடு மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட வர்கள் இந்திய முஸ்லிம்களைப் போலவே! புலிகள் அமைப்பினால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும் - தென் பகுதிகளில் அவர்கள் தஞ்சமடைந்தவர்களே தவிர தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் களம் கண்டதில்லை.

உண்மையில், தமிழ் போராட்ட அமைப்புகளுக்கு முஸ்லிம்கள் ஆதரவளித்திருந்தார்களேயானால் தமிழ் போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கும். இன்று தமிழ் அமைப்புகள் தங்கள் நோக் கங்களை அடைய அது வழி வகுத்திருக்கும். தேசிய ஒரு மைப்பாட்டின் மீதான முஸ்லிம் களின் அசைக்க முடியாத நம்பிக்கை பிரிவினைக் குரல் எழுப்பு வதை விட்டும் அவர்களைத் தடுத்தது.

சக இனங்களோடு அமைதியான வாழ்வையே விரும்பும் இலங்கை முஸ்லிம்கள் மீது சிங்களப் பெரும்பான்மை கட்ட விழ்த்து விடுகின்ற இன, மத ரீதியான தாக்குதல்கள் தொடருமானால் இலங்கையின் தேசிய ஒற் றுமை எதிர்காலத்தில் கேள்விக்கு றியாகும் சூழ்நிலை உருவாகலாம்.

இலங்கைத் தீவின் முப்ப தாண்டு காலயுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன் னும் மீள் குடியேற்றம் செய்யப் படவில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் விரட்டினார்கள் என்ற கூப்பாட்டை இன்று வரை போட்டுக் கொண்டிருக்கும் சக்திகள், இன்றுவரை முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக மண்ணில் குடியமர்த்தப்படாமல் இருக்கும் நிலையைப் பற்றி வாய்திறப்ப தில்லை.

யுத்த முடிவுக்குப் பின் அரசியல் மாற்றங்களினூடாக சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற் சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இலங்கை தெற்கின் பாசிச இனவாதிகள் அந்த சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வரு கின்றன.

தமிழ் - முஸ்லிம் உறவுகள் மறுமலர்ச்சி அடைந்து வரும் இத்தகு சூழலில் சிங்கள பாசிச இனவாதிகளின் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தமிழ் - முஸ்லிம் உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதே இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்தியாக உள்ளது.

எந்த பெரும்பான்மையினம் தமிழ் முஸ்லிம் உறவுகளை பிரி த்து வைக்கச் செய்ததோ, அதே இனம் இன்று இரு சமூகத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்கும் வேலையை செய்து வருகிறது.

ராஜீவ் காந்தியின் படுகொலை மூலம் விடுதலைப் புலிகளை சர்வதேச அரங்கில் பயங்கரவாத இயக்கமாக சித்தரித்து அதில் வெற்றி கண்ட சிங்கள அரசு, காத் தான்குடி முஸ்லிம் படுகொலை சம்பவம் மூலம் தமிழ் - முஸ்லிம் உறவுகளுக்குள் ஏற்பட்ட விரி சலை தொடர்ந்து தக்க வைப்பதி லும் வெற்றி கண்டிருக்கிறது.

புலிகளின் போராட்டக் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ரொம் பவே யோசித்து, யோசித்து அடியெடுத்து வைத்த சிங்கள அரசு, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் வழியாக முஸ் லிம்களுக்கு எதிரான திறந்த நிலைப் போரை அறிவித்திருக் கிறது.

புலிகள் இருந்த காலத்தில் முஸ்லிம்களை சீண்டினால் அது சம காலத்தில் இரண்டு எதிரி களை சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கி விடும் என்பதில் தீர்க் கமாக இருந்திருக்கிறது சிங்கள அரசு. இப்போது அதன் சுயரூ பத்தை காட்டியிருக்கிறது.

இலங்கை வரலாற்றில் இல் லாத அளவிற்கு நடைபெற்ற தம் புள்ள பள்ளிவாசல் தாக்குதல் தான் சிறுபான்மை முஸ்லிம்க ளுக்கு எதிரான சிங்கள இனவாதி களின் தாக்குதலுக்கான முதல் முயற்சி. இப்போது ஹலால், ஹிஜாப் விவகாரங்கள் கிளப்பப் படுகின்றன.

ஹலால் பிரச்சினையில், ஹலால் சான்றிதழ் மூலம் திரட் டப்படும் நிதி அல் காயிதா போன்ற போராளி அமைப்புக ளுக்கு செல்கிறது என்று சிங்கள வெறியர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஹிஜாப் அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவதும், ஹிஜாபை கிழித்தெறியும் சம்ப வங்களும் முஸ்லிம்களை வன்மு றையின் பக்கம் நோக்கி திரும்பும் முயற்சிகள்.

இந்தியாவில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலை அப்படியே பிர திபலிக்கிறது பொதுபல சேனா. முஸ்லிம்கள் மீதான சிங்கள இன வெறித் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும். இதில் சிங்கள அரசு, இனவாதிகளுக்கு அணுசரணை யாக நடந்து கொள்ளுமேயா னால் அது இன்னொரு யுத்தத் திற்கு கூட அடித்தளமாக அமை ந்து விடக் கூடும்.

இலங்கையில் இன்னொரு யுத்தம் தொடங்கினால் அது வட கிழக்கில் என்ற அளவில் மட்டும் இருக்காது. ஒட்டுமொத்த இலங் கையிலும் பிரதிபலிக்கும். அப் போது இரண்டு எதிரிகளை எதிர் கொள்ளும் நிலையை இலங்கை அரசு சந்திக்கும்.

Pin It