மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.)பெங்களூருவைச் சேர்ந்த இளம்விஞ்ஞானியான அஜாஸ் மிர்ஸாவை தீவிரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி நீக்கம் செய்திருந்தது.

பெங்களூரு காவல்துறையால் பொய்யாக பயங்கரவாதச் செயலில் தொடர்புபடுத்தப்பட்ட அஜாஸ் மிர்ஸாவிற்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என தேசிய புலனாய்வு நிறுவனம் அவரை விடுதலை செய்தது.

சில வாரங்களுக்கு முன் வெளியான இந்த செய்தி முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

அஜாஸ் மிர்ஸா பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து துறைரீதியான நடவடிக்கைக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருக்கி றார் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந் தோணி.

இந்நிலையில்,பாதுகாப்புதுறை மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அஜாஸ் மிர்ஸாவிற்கு முன்பே பயங்கரவாதக் குற்றம் சுமத்தப்பட்டு,பாதுகாப்பு துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப் பட்ட அன்வர் அலி என்கிற பேராசிரியரின் கதை வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ.வைப் போன்றே அதன் இன்னொரு பிரிவாக தேசிய பாதுகாப்பு அகாடமி (என்.டி.ஏ.) இருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் விரிவுரையாளராக பணி யாற்றி வந்தவர் பேராசிரியர் டாக்டர். அன்வர் அலிகான். இவரை பயங்கரவாத வழக்குகளில் மும்பை போலீஸ் தொடர் புபடுத்த,இதையே காரணங்காட்டி அவரை பணியிலிருந்து நீக்கியிருக்கிறது தேசிய பாது காப்பு அகாடமி.

ஒரு வழக்கிலிருந்து ஏற்கெனவே விடுதலை ஆகியிருக்கிறார் அன்வர் அலி. அவர் மீதான இன்னொரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவரை ஜாமீனில் விடு தலை செய்திருக்கிறது நீதிமன்றம்.ஒரு காலத்தில் விரிவுரையாளராக இருந்தவர் இன்று வயிற்றுப் பிழைப்புக்காக புத்தகங்களை விற்று வருகிறார்.

மார்ச் 13,2003ல் அன்று மும்பை முலுந்த் ரயில் நிலையத்தில் லோக்கல் ரயில் ஒன்றில் குண்டு வெடித்து ரயிலின் மேற்கூரை சேதமானது. பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் மோதிகானா பகுதியில் வசித்து வந்த டாக்டர் அன்வர் அலிகானை மே 9, 2003ல் கைது செய்தது மும்பை போலீஸ்.

அன்வர் அலிகானை இரண்டு நாள் சட்ட விரோ தமாக தடுப்புக் காவலில் வைத்து விசாரித்த மும்பை போலீஸ் மே 11,2003ல் அவரை கைது செய்ததாக குற்றப் பத்திரிகையில் காட் டியிருந்தது.

அன்வர் அலி, ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற் றம் சாட்டப்பட்டிருந்த நிலை யில், ஜூலை 29, 2003 அன்று வடக்கு மும்பையிலுள்ள காட்கோப ரில் பெஸ்ட் பஸ் என்ற பேருந்து ஒன்றில் குண்டு வெடித்தது. இதில் இருவர் உயிரிழந்தனர். காட் கோபர் பெஸ்ட் பஸ் குண்டு வெடி ப்பு என்று சொல்லப்பட்ட இந்த வழக்கிலும் அன்வர் அலிகானை கைது செய்தது மும்பை போலீஸ்.

“எனது கைதுக்கு முன் தேசிய பாதுகாப்பு அகாடமியின் அயல் நாட்டு மொழிகள் துறையில் உருது விரிவுரையாளராக பணி யாற்றி வந்தேன். ஆனால் மும்பை முலுந்த் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பான எனது சாதாரண கைதுக்குப் பின் நான் பணியிலி ருந்து மே 12, 2003ல் பணி நீக்கம் செய்யப்பட்டேன்.

மே 9,2003ல் என்னை கைது செய்த போலீஸ் மே 11,2003ல் கைது செய்ததாக நீதிமன்றத்தில் காட்டியது.தொலைக்காட்சி சேனல்களும்,பத்திரிகைகளும் என்னை கொடூரமான பயங்கர வாதியாகவும், ரயில் குண்டு வெடிப் பின் முக்கிய குற்றவாளியாகவும் சித்தரித்து செய்திகளை வெளி யிட்டன. ஒரே நாள் இடைவெளியில் மே 12, 2003 அன்று என்னை பணியிலிருந்து தேசிய பாதுகாப்பு அகாடமி நீக்கியது...''என்று விரக்தியுடன் சொல்கிறார் அன்வர் அலி.

இவரது பணி நீக்கத்திற்கு பாதுகாப்பு அகாடமி சொன்ன காரணம்தான் வேடிக்கையானது. பணி நீக்க கடிதத்தில்,அன்வர் அலி அலுவலக பணிக்கு வராத தால் பணி நீக்கம் செய்யப்படுவ தாக குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்க்க படம்)

“பயங்கரவாத குற்றச்சாட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் கர்னல் புரோஹித் இராணுவத்திலிருந்து பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்படுவதை விட்டு சிறையில் இருந்தபடியே முழுமையான ஊதி யம் பெறும் நிலையில் நான் மட்டும் ஏன் (ஊதியம் இல்லாமல்)இப்படி நடத் தப்படுகிறேன்?'' என அர சாங்கத்தை பார்த்து கேள் வியெழுப்பும் அன்வர் அலி,

“என்னைப் போன்றே பாதுகாப்பு துறையில் பணி புரிந்த லெஃப்டினட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் 2008ல் நிகழ்ந்த மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை யில் இருக்கிறார். ஆயினும், அவர் பணியிலிருந்து இன் னும் நீக்கப்படவில்லை. அர சாங்கத்திலிருந்து வழக்கம்போல சம்பளம் பெற்று வருகிறார்.

அதே சமயம், எனது கைது குறித்து அறிவிப்பு வந்த மாத்தி ரத்தில் எனது பணியை விட்டு நான் நிறுத்தப்பட்டிருக்கிறேன்.இது அதிர்ச்சியளிக்கும் அநீதி யாகும்...''என தனக்கு இழைக்கப் பட்டிருக்கும் அநீதியை அம்பலப் படுத்துகிறார்.

நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தனக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு புனே, தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு உத்தர விடுமாறு பாதுகாப்பு அமைச்ச கத்தைக் கேட்டுக் கொண்டிருக் கிறார் அன்வர் அலி.

தற்போது வேலையில்லாமல் இருக்கும் அன்வர் அலி,வேலை யில்லாதவருக்கான அடையாள அட்டையை வைத்திருக்கிறார்.புனே பல்கலைக் கழகத்தின் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அவர் அனுப்பியுள்ள வேண்டுகோள் கடிதத்தில்,தான் விரிவுரையாளருக்கான தகுதி கொண்டிருப்பதால் அதற்கான வேலை வாய்ப்பு இருந்தால் தனக்கு அழைப்பு அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இக்கடிதம் அனுப்பி ஒரு வருடம் கடந்த நிலையிலும் இதுவரை புனே பல்கலைக்கழ கத்திலிருந்து வேலைக்கான எவ்வித அழைப் பையும் அனுப்பாமல் இருக்கிறது பல்கலைக் கழகம்.

இது குறித்து கூறும் அன்வர் அலி,“அர சாங்கத்திற்கு எனது கேள்வி என்னவென்றால்... லெப்டினட் கர்னல் புரோஹித் ஹிந்து என்பதால் அவர் இன்றுவரை தனது பணி அந்தஸ்தை அனுபவித்தும், முழு சம்பளத்தை பெற்றும் வருகிறாரா? நான் முஸ்லிம் என்ப தால்தான் எனக்கு இந்த அநீதி இழைக்கப்படு கிறதா என்பதுதான்...'' என்று கேட்கிறார்.

பெங்களூரு இளம் விஞ்ஞானியான அஜாஸ் மிர்ஸாவின் விவகாரம் மீடியாக்க ளில் வெளிப்பட்டதையடுத்து, அசத்துத்தீன் உவைசி எம்.பி. போன்றவர்கள் நாடாளுமன் றத்தில் குரலெழுப்பி அநீதியைச் சுட்டிக் காட் டிய பின்னர் அஜாஸ் மிர்ஸாவின் விவகா ரத்தை கவனிக்கத் தொடங்கியிருக்கிறது மத் திய பாதுகாப்பு அமைச்சகம். ஆனால் 2003ல் நிகழ்ந்த அன்வர் அலிகானின் விவகாரம் யாராலும் கண்டு கொள்ளப்படாமல் இருந் துள்ளது.

இனி இந்த விஷயம் மஹாராஷ்டிராவின் இஸ்லாமிய அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும். அதன் மூலம் அன்வர் அலிகானுக்கு ஆதரவும், நீதியும் கிடைக்கும் என எதிர்பார்க் கலாம்.

அதே சமயம்,பொய் வழக்குகளில் அப் பாவி இளைஞர்களை சிக்க வைத்து வருடக் கணக்கில் அவர்களை சிறையிலடைத்து, அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் செயலில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் வெறும் நீதி மன்ற கண்டனத்துடன் விடப் படுகிறார்கள். இவர்களுக்கு எதிராக எந்த நட வடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது இந்தியாவின் ஜனநாயகத்தன்மை மீதும், நீதி நிர்வாகத்தின் மீதும் இருக்கின்ற கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் தகர்ப்பதா கவே உள்ளது.

நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை,பாது காப்புத்துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித் துவம் போதிய அளவில் இல்லை.அதனால் அதிக அளவில் முஸ்லிம்கள் பாதுகாப்புத் துறையில் நியமிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது. இந்த அறிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தலைகீழா கப்புரிந்து கொண்டிருக்கிறதோ என்னவோ? அதனால்தான் பாதுகாப்புத்துறையில் இருக்கும் முஸ்லிம்களை அது வெளியேற்றி வருகிறது.

 கண்ணீர் விடும் அன்வர் அலி!

எனக்கு எதிராக ஆதாரம் இல்லை என அரசு ஒப்புக் கொண் டுள்ளது. ஆனாலும், எனக்கு அநியாயம் இழைக்கப்படு கிறது எனக் கூறும் அன்வரி அலிகான் அதை விவரிக்கிறார்.

“காட்கோபர் பெஸ்ட் பஸ் குண்டு வெடிப்பு சம்பவ வழக்கில் ஏறக் குறைய 9 மாத சிறை வாசத்திற்குப் பின்னர்,நானும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வேறு எட்டு பேரும் எங்களுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை என்று மும் பையிலுள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமான அறிக்கையை சமர்ப்பித்த பின், கடந்த 4-03-2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டிருக்கிறோம்.

நானும்,ஏனைய எட்டு பேரும் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்ததால் பொடா சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டோம். இருந்தபோதிலும், முலுந்த் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் எனது சிறைக் காவல் 7 வருட காலம் நீண்டது.

கடைசியில், முலுந்த் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்திலும் எனக்கு எதிராக எவ்விதமான ஆதாரங்களும் இல்லையென்று மும்பை பொடா சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் எழுத் துப்பூர்வமாக அறிக்கை சமர்பித்ததன் அடிப்படையில் நீதிமன் றம் கடந்த 28 பிப்ரவரி 2011 அன்று என்னை பிணையில் விடுவித்தது. அன்று முதல் நான் சிறைக்கு வெளியில் இருக்கிறேன்.  

47 வயதாகும் நான் ஒரு குடும்பஸ்தன். எனக்கு மனைவியும் 3 சிறு குழந்தைகளும் உள்ளன. அவர் கள் புனேவில் படிக்கின்றனர்.வயது முதிர்ந்த விதவை தாயார் உடன் இருக்கிறார்கள். நான் பிறந்ததி லிருந்து மோதிவானாவில்தான் வசித்து வருகிறேன்.

மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப் பட்டு சிறையில் இருக்கின்ற லெப்டினட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்திற்கு வழங்கப்படும் சம்பள விகிதத்தைப் போலவே, நான் பணி நீக்கம் செய்யப் பட்ட 12-05-2003முதல் இன்றுவரையிலான முழுமையான காலகட்டத்திற்கு உரிய சம்பளம் கொடுக் கப்பட வேண்டும் என நீதிபதி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பளத் தொகை எனது வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும்வரை தொடர்ந்து வழங்கப்பட வேண் டும். இந்த வழக்கு, மும்பை பொடா சிறப்பு நீதிமன்றத்தின் கோப்புகளிலும், சிட்டி செசன்ஸ் நீதிமன்றத்தி லும் நிலுவையில் உள்ளது.

நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எனது நிலுவைத் தொகையை வழங்குமாறு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து,புனே தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு பிரத்யோகமான உத்தரவு வழங்கப்படலாம் என நம்புகிறேன்.

எனது வழக்கின் இப்போதைய நிலையைப் பொறுத்தவரை,குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள் ளபடி எனக்கு எதிராக ஆதாரம் இல்லை என்பதை அரசுத் தரப்பு எழுத்துப்பூர்வமாக பொடா சிறப்பு நீதி மன்றத்திற்கு முன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இருப் பினும், என்னை விசாரித்த மும்பை டி.சி.பி. - சி.ஐ.டி. போலீஸ், என்னிடமிருந்து துப்பாக்கியை கைப்பற் றியதாக பொய்யாக சொன்ன விஷயத்தில் நான் குற்றமற்றவன் என்பதை மட்டும் அரசுத் தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை.

மும்பை பொடா சிறப்பு நீதிமன்றம் மூலம் நான் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோதும், மாநில அரசு பொடா நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக,எனது பிணையை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய் தது.17 ஆகஸ்டு 2012ல் அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்திருக்கிறது.

இந்த வழக்கு எனக்கும் இதர 15 பேருக்கும் எதிராக நிலுவையில்தான் இருக்கிறது. இந்த 15 பேரில் ஒருவரைத் தவிர எல்லோரும் பிணை பெற் றுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்னும் துவக்கப்படவே இல்லை...'' என தனது கண்ணீர்க் கதையை விவரிக்கும் டாக்டர் அன்வர் அலிகான் தற்போது குடும்பச் செலவிற்காக புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார்.

Pin It