மியான்மரில் கடந்த மார்ச் 20ம் தேதி இரண்டாவது இன்னிங்ஸ்ஸாக துவங்கிய முஸ் லிம்களின் மீதான பௌத்த வெறியர்களின் தாக்குதலும் அதன் மூலம் நிகழ்த்தப்பட்ட கலவரங்களும் மியான்மர் முஸ்லிம் பகுதிகளை பெரும் நாசத்திற்குள் ளாக்கியுள்ளது.

அரசு தரும் புள்ளி விபரங்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர்.

உலக நாடுகள் இது குறித்து மௌனம் சாதித்து வரும் வேளையில், பிரபல சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரி மைகள் கண்காணிப்பகம் மத்திய மியான்மரில் இருக்கும் மெய்க்டி லாவில் அழிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் குடியிருப்பை செயற்கைகோள் படங்களாக எடுத்து கடந்த 27ம் தேதி வெளியிட்டிருக்கிறது.

அதோடு, இந்த வன்முறை குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வன்மு றையை தூண்டி விட்டவர்கள்,மற்றும் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும் மியான்மர் அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருக்கிறது.

மியான்மர் அரசாங்கம் மத்திய மியான்மரில் கடந்த மார்ச் மாதம் 20-22வரை நடந்த கலவரத்தை தூண்டி விட்டவர்களையும்,அதில் ஈடுபட்டவர்களையும் முழுமையான முறையில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.

மேலும், மதக் குழுக்களுக்கி டையே மத நல்லிணக்கம் மற்றும் சகிப்புத் தன்மை, அமைதி ஏற்பட அரசு ஆவண செய்து இது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் அந்த செயற்கைகோள் படத்தை கடந்த ஏப்ரல் 1ம் தேதி மீடியாக்களுக்கு மத்தியில் வெளியிடும்போது கூறியது.

மியான்மரில் நடந்த கலவரத்தி னால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேத விபரங்க ளைப் பற்றி கூறும்போது, புத்த மதத்தினர் பெருமளவில் வசிக்கும் மேட்கிலாவில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் 40பேர் கொல்லப்பட்டதாகவும்,61பேர் காயமடைந்துள்ளனர் என்றும், ஏறத்தாழ 828 கட்டிடங்கள் முழு மையாக சேதமடைந்துள்ளது என்றும் 35வேறு பல கட்டிடங் கள் சிறிதளவு சேதமானதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

சேதமடைந்த பெருவாரியான பகுதிகள் மேட்கிலா நகரின் 24ஹெக்டேர் பரப்பளவுள்ள இடத் தில் நகரத்தின் முக்கியமான கடை வீதியின் மேற்கு பதியிலிருந்து வட கிழக்கு பகுதிவரை வியா பித்து இருந்ததாகவும், தற்பொ ழுது நடந்த தாக்குதலின் செயற் கைக்கோள் படங்கள் - இதே பர்மாவில் கடந்த வருடம் 2012 அரக் கான் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின் போது தீ வைத்து சாம்பலாக்கப் பட்ட குடியிருப்புகளின் செயற் கைக்கோள் படங்களை ஒத்திருப் பதாகவும் அந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

மேலும்,மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய கண்டத்திற் கான இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறுகையில், “மேட்கிலாவில் மார்ச் மாதம் நடந்த கலவரத்திற் கும், அங்கு நடந்த இரக்கமற்ற கொலைகளுக்கும்,காவலர்களின் கையாலாகாத தன்மைக்கும் மியான்மர் அரசே பொறுப் பேற்க வேண்டும் என்றும்,கடந்த வருடம் அரக்கான் பகுதியில் நடந்த கலவரத்திலிருந்து அரசு பாடம் படித்து தற்பொழுது நடந்த கலவரத்தின்போது அதிகப்படியான காவலர்களை அனுப்பி கலவரத்தை தடுத்து நிறுத்தி உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் தவிர் த்திருக்க வேண்டும்...'' என் கின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய உறவுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு தகவலின்படி,மேட்கிலாவில் நடந்த கலவரத்தி னால் ஏறக்குறைய 12ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக குடில்களில் தங்கியிருப்பதாக தெரிய வருகிறது.

மேட்கிலா கலவரத்திலிருந்து தொடங்கி மத்திய மியான்மரின் பேகு பகுதியின் ஊர்களான ஓக்போ, கியோபிங்காக், மின்லா போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்க ளுக்கு எதிரான இன ஒழிப்பு தாக்குதல்கள் நடந்ததாகவும் அங்கெல்லாம் இராணுத்தினர் கலவரக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி எச்சரிக்கைக்காக துப்பாக்கியால் சுட்டதாகவும் மேலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டு மக்கள் கூடுவதற்கு தடுக்கப் பட்டதாகவும் கூறுகிறார் ஆடம்ஸ்.

கடந்த மாதம் நடந்த கலவரத் திற்கு புத்த பிட்சுகளின் கூட்ட மைப்பு அல்லது "சங்கா' என்ற அமைப்பின் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ பிரச்சாரங்களும்,முஸ்லிம்களின் வியாபார நிறுவ னங்கள் மற்றும் தொடர்புகளை புறக்கணித்து தவிர்க்குமாறு கேட் டுக் கொண்ட மேற்கூறிய அமைப் பின் கட்டளைகளும் இஸ்லாமிய எதிர் சிந்தனைகளுமே காரணம் என்று கூறியுள்ளது மனித உரிமை கண்காணிப்பகம்.

மியான்மரில் 2008ம் ஆண்டின் அரசியல் சாசன சட்டம் நாட்டின் மத சுதந்திரத்தை காக்கும் வகையில்,“அரசாங்கத்தால் அங்கீகரிக் கப்பட்ட மதங்களின் செயல்பாடுகளைகாப்பது மற்றும் உதவுவது தலையாய கடமையாக இயற்றப்பட்டுள்ளது...'' குறிப்பிடத்தக்கது.

மேலும் மார்ச் 28ம் தேதி பர்மா வின் ஜனாதிபதி தீயன் சீயனின் அலுவலக செய்தி வெளியீடும் கல வரக்காரர்களை ஒடுக்கவும்,அனைத்து விதமான இனமற்றும் மத மோதல்களை அரசியல் சாசன சட்டத்தின்படி தடுக்கவும் ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டி ருந்தது.

கடந்த வருடம் அரக்கான் பகு தியில் ஜூன் மற்றும் அக்டோபர் மாதம் நடந்த கலவரத்தின்போது மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை புத்த தீவிரவாதிக ளோடு கை கோர்த்து அப்பாவி ரெஹிங்கியா முஸ்லிம்களை தாக் கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தீர்வாக பிராட் ஆதம் கூறுகையில், “பர்மாவின் அரசாங்கம், அரசியலமைப்பு, மத அமைப் புகள் மற்றும் சமுதாயத் தலைவர் கள் அனைவரும் இந்த கலவரங்க ளுக்கு காரணமான துவேச பிரச் சாரங்கள் மற்றும் பிரசங்கங்களை முதலில் தடுக்க வேண்டும். அப் பொழுதுதான் மியான்மரின் மிக மென்மையான கலாச்சார சமுதாயத்தை அழிவில் இருந்து காக்க முடியும்...'' என்று தெரிவித்துள்ளார்.

Pin It