1980 - 90களில் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரி போராடத் துவங்கினர் சீக்கியர்கள்.இந்தப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாகவும், பயங்கரவாதப் போராட்டங்களாகவும் வடிவமெடுத்தன.

காலிஸ்தான் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கிய இளைஞர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவி விட்டது அரசு. பஞ்சாப்பின் அப் போதைய டி.ஜி.பி. கில், காலிஸ் தான் போராட்டத்தை ஒடுக்குவ தில் முக்கியப் பங்காற்றினார்.

சீக்கியர்களின் மீது அரச பயங் கரவாதம் கட்டவிழ்த்து விடப்ப ட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மத்திய அரசும், மாநில அரசும் சீக்கியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டின.

அரச பயங்கரவாதத்தின் உச்ச கட்டமாக சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் இராணுவத் தாக்குதலுக்கு பயந்து தஞ்சம் புகுந்த நூற்றுக்க ணக்கான சீக்கியப் போராளி களை சுட்டுக் கொன்றது இராணு வம்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, "ஆபரேஷன் புளூ ஸ்டார்' என்ற பெயரில் பொற் கோவிலுக்குள் புகுந்த இராணு வம் சீக்கியர்களை சுட்டுக் கொன்று பொற்கோவிலுக்குள் ரத்தத்தை ஓட்டியது.

பின்னாளில் இதன் எதிரொலியாகத்தான் தனது சீக்கிய மெய்க் காப்பாளர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி.

இராணுவமும், காவல்துறையும் களமிறக்கப்பட்டு சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தும் வகையில் "சத்தா ஹக்'என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை வெளியிட பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 5ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருந்தது.படம் திரைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கைகளை வைத்தும், போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீ நகரில் கடந்த 8ம் தேதி நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தப் படத்திற்கு பஞ்சாப்,ஹரியானா மாநில அரசுகள் தடை விதித்திருப்பதற்குக் கார ணம், மீண்டும் காலிஸ்தான் போராட்ட உணர்வுகள் சீக்கியர் களுக்கு மத்தியில் தூண்டி விடப்படலாம் என்பதையும் தாண்டி, அரசு நிகழ்த்திய சீக்கிய படுகொலைகள், அரச பயங்கர வாதம் ஆகிய அரசின் ஜனநாயக விரோதச் செயல்கள் அம்பலப் பட்டு விடும் என்பதால்தான் என் பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதே சமயம், சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்த "ஜோ போலே 'ஸா நிஹால்' என்ற திரைப்படத்திற்கு மட்டும் பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளும், மத்திய அரசும் அனுமதி அளித் தன. ஆனால், பத்து ஆண்டுகள் சீக்கியர்கள் அனுபவித்த கொடு மைகளை விளக்கும் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு எதிராக ஏன் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் என சீக்கியர்கள் எழுப்பும் கேள்வியில் நியாயம் இருப்பதா கவே படுகிறது.

பொய்யான...நடக்காத சம்ப வங்களை வைத்து அல்லது வர லாற்று திரிபுகளை செய்து ஒரு சமுதாய,மத,இன உணர்வுகள் புண்படுத்தப்படும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கெல்லாம் அனுமதி வழங்கும் மத்திய, மாநில அரசுகள் யதார்த்தமாக, நாட்டில் நடந்த சம்பவத்தை எதிர்காலத் தலைமு றையினருக்கு எடுத்துச் சொல் லும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களை தடை செய் வது என்பது, ஜனநாயக விரோ தச் செயல் மட்டுமல்ல... அது ஜன நாயகப் படுகொலையாகும்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி எடுக்கப்பட்ட "விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை, இலங்கைப் போரில் காயமடைந்த பெண் போராளிக்கும் அவளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருக் கும் இடையே ஏற்படும் காதலை சித்தரிக்கும் வகையில் அமைந்த இயக்குனர் புகழேந்தி இயக்கத் தில் உருவான "காற்றுக்கென்ன வேலி' என்ற திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை என பல படங்களுக்கு தடை விதிக்கப்பட் டபோது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூப்பாடு போட்ட தேசிய ஊடகங்களும், அறிவு ஜீவி வட்டாரங்களும், சீக்கியர்கள் மீதான கொடுமைகளை "விளக்கும் சத்தா ஹக்' படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஏனோ குரலெழுப்பவில்லை.

இந்தி திரைப்பட உலகம் கூட மௌனம் சாதிக்கிறது.கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒருதலைப் பட்சமாகத்தான் பேசப்படுகிறது.

சத்தா ஹக் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகள் நீக்க முன்வர வேண்டும்.

குஜராத், மும்பை, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நடை பெற்ற முஸ்லிம் இனப்படுகொ லைகள் மற்றும் சீக்கியப் படுகொலைகள்,நாட்டில் நடைபெற்ற தலித் படுகொலைகள் குறித்து படம் எடுத்து அதற்கு காரணமா னவர்களை உலகிற்கு அடையா ளப்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்.இதில் முழுமையான கருத்துச் சுதந்திரத்திற்கு இடம் அளிக்க வேண்டும்.இல்லை யென்றால் வரலாற்று திரிபுடன் எடுக்கப்படும் படங்கள்,ஒரு சமுதாயத்தை,மதத்தை கேவலப்ப டுத்தி எடுக்கப்படும் படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். இப் படி நடுநிலையாக அரசு செயல் பட்டால் அதை முழுமையான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என வரவேற்கலாம்.

ஒரு சமுதாயம் கொடுமைப் படுத்தப்பட்டதை அதுவும் அரச பயங்கரவாதம் நிகழ்த்தப்பட் டதை மறைக்க முயற்சிக்கும் அரசு, ஒரு சமுதாயம் பாதிக்கப்ப டும் வகையில் மோசமாக சித்த ரித்து எடுக்கப்படும் திரைப்படங் களுக்கும் தடை விதிக்க வேண் டும். இதில் இரட்டை அளவு கோல் கடைபிடிக்கும் அரசு ஜன நாயக அரசாக இருக்க முடியாது. அது பாசிச போக்கு கொண்ட அரசாகத்தான் இருக்க முடியும்.

குஜராத் கலவரத்தை விளக்கிய படத்திற்குத் தடை!

குஜராத்தில் முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவா தத்தை வெளிப்படுத்தும் படம் பர்ஸா னியா. பிப்ரவரி 28, 2002ல் குஜராத் வன் முறையின்போது குல்பர்க் சொûஸட்டி யில் 65 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸின் முன்னாள் எம்.பி. இஹ் சான் ஜாஃப்ரியும் இங்குதான் எரித்துக் கொல்லப்பட்டார்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் காணாமல் போன அஸார் மோதி என்கிற 10வயது சிறுவனை அவனது குடும்பம் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிதான் இப்படத்தின் கரு.

இந்தக் கதையினூடே,குஜராத்தில் முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகளையும் காவல்துறையும், அரசாங்கமும் இந்துத்துவா வெறியர்களுடன் இணைந்து நடத்திய பயங்கர வாதத்தையும் தத்ரூபமாக விளக்குகிறது இந்தப் படம்.

சமூக ஆர்வலர்களும்,மனித உரிமைப் போராளிகளும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இப்படம் 26, ஜனவரி 2007ல் நாடு முழுவதும் வெளியாக இருந்தது. அதற்கு முன் 26, நவம்பர் 2005ல் கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

2006ல் தேசிய விருதும், 2008ல் ராம்நாத் கோயங்கா நினைவு விருதும் பெற்ற படம் இது! இந்தப் படத்திற்கு தடை விதித்தது குஜராத் அரசு. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கூட இப்படம் திரைப்படப்படவில்லை.

Pin It