ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்புகளில் தொடர்பு வைத்திருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்க விருதுகள் வழங்கப்பட மாட்டாது என்ற அறி விப்பைத்தான் வெளியிட்டிருக்கிறார் அசோக் கெலாட்.

தங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ, ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பிலோ எந்தவித மான தொடர்பும் இல்லை என்று உறுதிப் பிரமாணம் தாக்கல் செய் யும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும்தான் அரசாங்க விருது கள் வழங்கப்பட்டு வருகிறது என்று ஸ்டார் நியூஸ் சேனல் கடந்த 13ம் தேதி செய்தி வெளி யிட்டிருக்கிறது.

இந்நிலையில், அசோக் கெலாட் அரசின் இந்த முடிவை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக ஆட் சேபித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராம் மாதவ் டிவிட்டரில், “காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியல் செய்கிறது. விளையாட் டுக்கான விருதை வழங்குவதற் காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடர்பு இல்லை என்று உறு திப் பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் என ராஜஸ்தான் அரசு கோருவது சட்ட விரோதமாகும்.இந்த உத்தரவுக்கு காரணமான அதிகாரிகள் பணி நீக்கம் செய் யப்பட வேண்டும்...'' என பதிவிட் டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் எதிர்ப்பை விட ஜமாஅத்தே இஸ்லாமி ராஜஸ்தான் அரசின் இந்த முடிவை கடுமையாகவே எதிர்த் துள்ளது.

“ராஜஸ்தான் அரசின் சட்ட விரோத நடவடிக்கை இது. அரசு கொடுக்கும் தேவையற்ற தொந்த ரவு...'' என கண்டனம் தெரி வித்துள்ளார் ஜமாஅத்தே இஸ்லாமியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் குர்ஷித் ஹுசைன்.

ஜமாஅத்தே இஸ்லாமி யின் ராஜஸ்தான் அரசுக் கெதிரான எதிர்ப்பு நியாயமா னதுதான். ஆனாலும் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு எங்களையும் சேர்த்து எப்படி சொல்லலாம் என்ற வகையில் அதன் எதிர்ப்பை முதலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.ஸம்,ஜமா அத்தே இஸ்லாமியும் ஒன்றல்ல...இரு அமைப்புகளின் செயல்பாடுகளும்கூட வெவ்வேறானவை. தேசிய ஒருமைப்பாட்டிற்கோ, தேச நலனிற்கோ குந்தகம் ஏற்ப டுத்தும் நோக்கில் ஜமாஅத்தே இஸ்லாமியின் செயல்கள் அமைந்ததில்லை. ஆனால், ஆர். எஸ்.எஸ். அமைப்போ தேசிய ஒற் றுமையை குலைக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டிருக்கிறது. தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகா பயிற்சி வகுப்புகளும், இந்த அமைப்பின் துணை அமைப்புக ளாக செயல்படும் துர்கா வாஹினி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் துப்பாக்கி, திரிசூலம் சகிதம் பயிற்சி எடுப்பதும் தேசத்திற்கு அச்சுறுத்தலான செயல்பாடுகள் தான்.

பிரிட்டீஷ் ஆட்சியிலும்,சுதந்திர இந்தியாவிலும் கூட தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர். எஸ்.எஸ். சம காலத்திலும் சமூக ஆர்வலர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸ தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

மாலேகான், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போதாக்குறைக்கு,மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே,“ஆர்.எஸ்.எஸ். ஸம், பாஜகவும் பயங்கரவாதத் திற்கு பயிற்சி அளிக்கின்றன...''என்று சமீபத்தில் தெரி வித்திருக்கிறார். இவரது கூற்றுக்கு மத்திய உள்துறை செயலாளர்

ஆர்.கே. ஷர்மா ஆதாரங்களை வெளியிட்டிருந்தார்.

இது தவிர,திக் விஜய் சிங்,ப.சிதம்பரம்,ராகுல் காந்தி போன்றவர்களும் காவி பயங்கரவாதம் நாட்டுக்கு மிக ஆபத்தானது என்று தெரிவித்துள்ளனர்.

இப்படி,ஆர்.எஸ்.எஸ்.ஸக்கு எதிராக,அதன் தேச விரோத நட வடிக்கைகளுக்கு எதிராக நீண்ட பட்டியல் கொண்ட ஆதாரங்கள் இருக்கின்றன.ஆனால் ஜமா அத்தே இஸ்லாமிக்கு இப்படி எந்தக் கெட்டப் பெயரும் இல்லை.ஜமாஅத்தே இஸ்லாமி தடை செய்யப்பட வேண்டும் என்று எவரும் குரலெழுப்பியதுமில்லை.

எனவே ராஜஸ்தான் அரசு ஆர்.எஸ்.எஸ்.úஸாடு ஜமாஅத்தே இஸ்லாமியை இணைத்து பேசுவது முதல் தவறு.ஜமாஅத்தே இஸ்லாமியில் தொடர்பு வைத்திருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு விருது வழங் கப்படமாட்டாது என்று சொல்லியிருப்பது இரண்டாவது தவறு

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு விருது தரப்படமாட்டாது என்று அறிவிக்க தைரியம் இல்லாமல்,குற்றவாளி மீதும் பாதிக்கப்பட்டவர் மீதும் வழக்கை போடும் காவல்துறையைப்போல பேலன்ஸ் நடவடிக்கையாக ஜமா அத்தே இஸ்லாமியையும் இதில் இணைந்திருக்கும் ராஜஸ்தான் அரசின் முடிவு கண்டிக்கப்பட வேண்டியதே!

Pin It