மே 13, 2008ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பலர் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் பிரபல ஐ.டி. நிறுவனமான இன்ஃபோ சிஸ்ஸில் பணியாற்றிய இஞ்சினியர் ரஷீத் ஹுசைன்.

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணைக்காக ஜெய்ப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஷீத் ஹுசைன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். 10 நாட் கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட ரஷீத் ஹுசைனுக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் அவரை விடுதலை செய்தது ஜெய்ப் பூர் போலீஸ்.

குண்டு வெடிப்பு தொடர்பாக ரஷீத் கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவோ இல்லை. ஆனால், ரஷீத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவார காலத்திற்குள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அவரை பணி நீக்கம் செய்தது இன்ஃபோசிஸ் நிறுவனம். விளக்கம் கேட்டு கடிதமோ, நிரூபிப்பதற்கான வாய்ப் பையோ ரஷீதுக்கு தரவில்லை இன்ஃபோஸிஸ். அப்போது ஜெய்ப்பூரிலுள்ள இன்ஃபோஸிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சீனியர் நெட்வெர்க் இஞ்சினியராக பணி புரிந்து வந்தார் ரஷீத் ஹுசைன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஷீத் ஹுசைனுக்கு ஆதரவாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பை ஏற்று ரஷீதுக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறது இன்ஃ போசிஸ் நிறுவனம்.

தங்களின் வாழ்க்கையையும், முன்னேற்றத்தையும் இழக்கும் வகையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை அமைப்புகளால் பயங்கரவாதச் சம்பவங்களில் கைது செய்யப்படத் தொடங்கியதிலிருந்து இப்போதுதான் அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்ஃபோசிஸ் தனது தவறை ஒப்புக் கொண்டு இழப்பீட்டைத் தர முன் வந்திருப்பதன் மூலம்!

தன்னை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்து விட்டதை நினைத்து இடிந்து போய் உட்கார்ந்துவிடவில்லை ரஷீத். ஆகஸ்டு 2008ல் பணி நீக்க உத்தரவுக்கு எதிராக தொழிலாளர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ரஷீத். மூன்று வருட கால நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் 2011ல் தீர்ப்பளித்த தொழிலாளர் நீதிமன்றம் இன்ஃபோசிஸ்ஸின் பணி நீக்க உத்தரவு செல்லாது என்று உத்தர விட்டது.

இதனையடுத்து, ஏப்ரல் 2011ல் தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராஜஸ் தான் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது இன்ஃபோசிஸ் நிறுவனம். சுமார் 20 மாத காலமாக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீடித்தது.

இறுதியில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரஷீத் ஹுசைனுக்கு எதிரான பணி நீக்க உத்தரவு செல்லாது என்று அறிவித்த தோடு, இன்ஃபோசிஸ் நிறுவனம் 20 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ரஷீதுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இன்ஃபோசிஸ் மற்றும் ரஷீத் ஹுசைனுக்கு இடையேயான உடன்பாட்டிற்குப் பின் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்திருக்கி றது நீதிமன்றம்.

ராஜஸ்தான் முஸ்லிம் ஃபோரம் என்ற அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பும் இஞ்சினியர் ரஷீத் ஹுசைனுக்காக தொடக்கத்திலிருந்தே போராடி வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷீத் ஹுசைன் 2006 முதல் ஜெய்ப்பூரில் வசித்து வருகிறார். இவர் சமூகரீதியிலான நடவடிக்கைகள் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இழப்பீட்டு ஒப்பந்தம் குறித்துப் பேசிய ராஜஸ்தான் முஸ்லிம் ஃபோரம் அமைப்பின் தலைவரும், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்தின் தேசியச் செயலாளருமான இஞ்சினியர் முஹம்மது சலீம்,

“இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால் இழப்பீட்டுத் தொகை போதுமான தல்ல. வெறும் இழப்பீட்டுத் தொகை என்பதும் போதுமானதல்ல. வெறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுபோன்ற அப்பாவிகளின் வாழ்க்கையை நாசமாக்கிய நிறுவனங்கள் அல்லது அரசுத் துறைகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவிகளின் முன்னேற்றத்தை அழிக்கும் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தண்டிக்கப் பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

அப்பாவி இளைஞர்கள் பலர் பிடிக்கப்பட்டு, பயங்கரவாத வழக்குகளால் சிக்கவைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லையென்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுகின்றனர். அதன் பின்னர், இதற்கு காரணமான அதிகாரிகள், விசாரணை அமைப்புகள் மீது எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

அப்பாவி இளைஞர்களை வேண்டுமென்றே பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைக்கும் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. இதுபோன்ற வழக்குகள் மீண்டும் தொடராமல் இருக்க குற்றம் செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்...” என்கிறார் சமூக அக்கறையுடன்.

ரஷீத் ஹுசைன் ஜெய்ப்பூர் போலீசா ரால் பிடிக்கப்பட்டதில் வேடிக்கை என்ன வென்றால்...

13 மே 2008ல் பயங்கரமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது அடுத்த சில மணித் துளிகளுக்குள் சவாய் மன் சிங் மருத்துவமனைக்கு வெளியே குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக முகாம் அமைத்த சில இளைஞர்களில் முதன்மையானவர் ரஷீத் ஹுசைன் என்பதுதான்.

இந்த உதவும் முகாமை மானுட வளர்ச்சி சங்கம் என்ற பேனரின் கீழ் அமைத்திருந்தார் ரஷீத் ஹுசைன். ஆயினும், இதன் பிறகு 20 நாட்கள் கழித்து குண்டு வெடிப்பு தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையால் பிடித் துச் செல்லப்பட்டார்.

ஜூன் 1, 2008ல் ஜெய்ப்பூர் பிரதாப் நகரில் ரஷீத் இருந்த வாடகை வீட்டில் அதிரடியாக நுழைந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்காக அவரைப் பிடித்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்தது. பின்னர், ரஷீத் தடை செய்யப்பட்ட சிமி அமைப்போடு தொடர்பு கொண்டிருந்தார் என்றும், குண்டு வெடிப்பு குறித்து முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தார் என் றும் கூறியது.

ஆயினும், 10 நாட்கள் அவரை சட்ட விரோத தடுப்புக் காவலில் வைத்திருந்து விட்டு, அவருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்தது. ஆனால், ரஷீத் விடுதலை செய்யப்படு வதற்கு முன் வலுக்கட்டாயமாக அவரிடம் எழுதப்பட்ட மற்றும் வெற்றுக் காகிதங்க ளில் கையெழுத்து பெற்றிருக்கிறது சிறப்பு பு(டலங்காய்)னாய்வுக் குழு.

ரஷீத் கையெழுத்திட்ட பேப்பர்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை ரஷீதே வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதில் ஒரு பேப்பரில், ரஷீத் விடுதலை செய்யப்பட்ட தினத்தன்று காலையில் தான் அவர் காவல்துறையினரால் சிறை பிடிக்கப்பட்டார்; அவர் துன்புறுத்தப்பட வில்லை என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால், துன்புறுத்தப்படவில்லை என்பது உண்மையல்ல எனக் கூறும் முஹம்மது சலீம், “போலீஸ் கஸ்டடியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முழுமையாக பத்து நாட்கள் ரஷீத் சட்ட விரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்தார்...” என்கிறார்.

இன்ஃபோசிஸ் நிறுவனமோ இருவருக்குமிடையிலான உடன்பாடு குறித்து மீடியாக்களிடம் எதையும் வெளிப்படுத்தக் கூடாது என மறைமுகமாக ரஷீதை மிரட்டி யிருக்கிறது.

நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கும் ரஷீத் ஹுசை னுக்குமிடையில் கையெழுத்தான இந்த உடன்பாடு பத்திரத்தில் மேற்கண்ட நிபந்தனையும் எழுதப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்ற ஜியன் விஹார் பல்கலைக் கழகத்தில் மின்னனுத் துறையின் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார் ரஷீத் ஹுசைன். ரஷீதை சட்ட விரோதமாக பிடித்துச் சென்ற போலீசார்... அடுத்தகட்ட சட்ட விரோத செயலில் ஈடுபட அப்பாவிக ளைத் தேடிவருகிறார்கள் (?!)

Pin It