உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப் பூர் மற்றும் கோவா என 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்திருந்தாலும் தேசிய அரசியலில் அதிகமாகப் பேசப்பட்டு வருவது உத்திரப் பிரதேசம்தான். இதற்கு காரணம் 403 சட்டமன்றத் தொகுதிகளை அடக்கிய பெரிய மாநிலம் உத்திரப் பிரதேசம் என்பதோ அல்லது இங்கு தேசிய கட்சிகளாகக் கருதப்படும் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் மோதிக் கொண்டதோ அல்ல...

உத்திரப் பிரதேச தேர்தல் முஸ்லிம்களை மையப்படுத்தி அரசியல் விவாதமாக மாறியிருக் கிறது. இதனால்தான் அரசியல் கட்சிகளுக்கு மத்தியிலும் மீடி யாக்களிலும் முக்கிய இடத் தைப் பிடித்திருக்கிறது உத்திரப் பிரதேசம்.

மாயாவதியும் வேண்டாம், ராகுலும் வேண்டாம் என தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறார்கள் உத்திரப் பிரதேச மக்கள் என்றா லும் மாநிலத்திலுள்ள 20 சதவீத முஸ்லிம்கள்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்திருக்கி றார்கள் என்பது மீடியாக்கள் வெளியிடும் செய்தியினூடாக மாத்திரமல்ல... மாநில கவர்னர் பி.எல். ஜோஷியிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்த கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் மாயாவதி, தேர்தல் தோல்விக்கு காரணமாகச் சொன்ன வார்த் தைகள் மூலமும் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.

“மாநிலத்திலுள்ள முஸ்லிம்க ளின் 70 சதவீத வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு விழுந்தி ருக்கிறது. இதற்கு காரணம் முஸ் லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் விளையாடிய தவறான ஆட்டம்தான்...'' எனத் தெரிவித்திருக்கிறார் மாயா.

பாட்லா ஹவுஸ் போலி என்க வுண்ட்டர் விவகாரம், டெல்லி ஜாமியா நகர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் வங்காள தேசத்திலிருந்து குடியேறியவர்க ளாகவும் சித்தரித்து அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களை டெல்லி போலீஸ் அடிக்கடி பிடித் துச் சொல்வது, இட ஒதுக்கீடு விஷயத்தில் காங்கிரஸ் ஆடிய நாடகம் எல்லாம் சேர்ந்து காங் கிரசுக்கு எதிரான முடிவை உத்தி ரப் பிரதேச முஸ்லிம்கள் எடுக் கும் நிலைக்கு ஆளாக்கி விட் டது.

பாட்லா ஹவுஸ் விவகாரம் தான் உ.பி. முஸ்லிம்கள் மத்தி யில் மிகப் பெரிய அதிருப்தியை உண்டாக்கியது. உ.பி. மாநிலத்தி லுள்ள ஆஸம்கர் மாவட்ட மக் கள், ராகுலின் தேர்தல் பிரச்சா ரத்தை அனுமதிக்கவில்லை. பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் விவகாரத்திற்கு பதில் சொல்லா மல் உள்ளே அனுமதிக்க மாட் டோம் என முஸ்லிம் இளைஞர் கள் ராகுலுக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்திருந் தனர்.

உ.பி. தேர்தலை கவனத்தில் கொண்டு இட ஒதுக்கீடு விவகா ரத்தை கையில் எடுத்த காங்கி ரஸ் கட்சி, சல்மான் குர்ஷிதை களமிறக்கி உ.பி. முஸ்லிம்களு க்கு 9 சதவீத இட ஒதுக்கீட்டைத் தருவோம் என அறிவித்தது.

இட ஒதுக்கீடு பிரச்சாரத்தின் மூலம் முஸ்லிம்களின் வாக்கு களை கவர்ந்து விடலாம் என காங்கிரஸ் போட்ட கணக்கிற்கு ஏற்ப மீடியாக்களும் இட ஒதுக் கீடு விவகாரத்தை மையப்படுத்தி முஸ்லிம்களின் வாக்குகள் காங் கிரசுக்குத்தான் என செய்தி களை வெளியிட்டு காங்கிரûஸ குஷிப்படுத்தின.

ஆனால், ஏற்கெனவே காங்கி ரஸ் தேசிய அளவில் முஸ்லிம்க ளுக்கு அளித்த 4.5 சதவிகித இட ஒதுக்கீட்டு விஷயத்தில் உள் ஒதுக்கீட்டைத் தராமல் பொத் தாம் பொதுவாக சிறுபான்மை யினருக்கான இட ஒதுக்கீடாகத் தந்ததில் ஏனைய மாநிலங்களின் முஸ்லிம்களைப் போலவே உ.பி. முஸ்லிம்களும் அதிருப்தியாய் இருந்த நிலையில் சல்மான் குர்ஷித்தின் 9 சதவிகித இட ஒதுக்கீட்டின் அறிவிப்பை "தமாஷா' (கேலிக் கூத்து) என்றனர் அவர்கள்.

சல்மான் குர்ஷித், திக் விஜய் சிங், பொனி பிரசாத், ராகுல் காந்தி என ஆளாளுக்கு ஒவ் வொரு கான்செப்டை கையில் எடுத்துக் கொண்டு நடத்திய பிரச்சாரத்தை முஸ்லிம்கள் ரசிக் கவில்லை என்பது இப்பொழுது காங்கிரசுக்கு நன்றாகவே புரிந்து விட்டது.

உ.பி.யின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது பாட்லா ஹவுஸ் விவகாரம் சூடு பிடித்ததைக் கருத்தில் கொண்ட காங்கிரஸ் திக் விக் விஜய் சிங்கை விட்டு முஸ்லிம்களுக்கு ஆதர வான அறிக்கைகளை விட வைத் தது.

மீண்டும் களத்தில் இறக்கி விடப்பட்ட சல்மான், “பாட்லா ஹவுஸ் விவகாரத்தை சோனியா விடம் சொன்னபோது அவர் கண்ணீர் விட்டுக் கதறினார்...'' என உ.பி. மக்கள் மத்தியில் பேசி, 9 சதவிகித இட ஒதுக்கீடு விவகா ரத்தில் தேர்தல் கமிஷனின் கண் டனத்தைத் தொடர்ந்து “என் உயிர் போனாலும் முஸ்லிம் களுக்காக குரல் கொடுப்பேன்'' என்று காட்டிய பில்ட்அப்புகள் ஓவர் பில்ட் அப்புகளாகவே தெரிந்தன உ.பி. முஸ்லிம்களுக்கு.

காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரக் களங்களில் இறக்கி விடப்படும் தலைவர்கள் ஏனைய காலங்களில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை கண்டு கொள் ளாததால் அவர்களை "சீசண்டு லீடர்ஸ்' என அழைக்கின்றனர் உ.பி. முஸ்லிம்கள்.

“மாயாவதிக்கு ஒரே மாற்று சமாஜ்வாதி கட்சிதான்! மாயாவ தியின் கட்சியானது சில தலித் சமூகங்களுக்கு நன்மையாக உள் ளது. காங்கிரஸ் கட்சியோ சீசண்டு லீடர்களை வைத்துக் கொண்டு பாசாங்கு செய்கிறது. தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ முஸ்லிம்க ளின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்கிற தீவிர அக்கறை உண்மையில் காங்கிரசுக்கு கிடை யாது...'' என உள்ளூர் இணைய தளம் ஒன்றில் தெரிவித்திருக்கி றார் கலிலாபாத் தொகுதிவாசி யான அப்துல் ரஷீத்.

ஜமானியா தொகுதிவாசியான சையத் காஸிம் அலியோ, “முஸ் லிம்கள் காங்கிரசுக்கு ஏன் வாக்க ளிக்கவில்லை என்றால்... காங்கிர ஸின் பொய்யான வாக்குறுதிக ளையும், இரட்டை நிலையையும் அறிந்து வைத்திருப்பதால்தான். காங்கிரஸ்காரர்கள் பாடம் கற் றுக் கொள்ள வேண்டும். அந்த பாடத்தை மாநில முஸ்லிகளிட மிருந்து (தேர்தல் தோல்வி மூலம்) அவர்கள் கற்றுக் கொண்டு விட் டார்கள் என்றே நினைக்கிறேன்...'' என தெரிவித்திருக்கிறார்.

மாநிலத்திலுள்ள பெரும் பான்மை முஸ்லிம்கள் காங்கிர ஸின் நடவடிக்கைகளில் அதிருப் தியுற்றவர்களாகவே இருக்கின்ற னர். திக் விஜய் சிங்கின் பேச்சும் அவர்களை கோபப்படுத்தியிருக் கிறது. தில்லி இமாம் அப்துல் லாஹ் புகாரி முலாயம் சிங்கிற்கு ஆதரவளித்ததற்காக அவரை வகுப்புவாதி என திக் விஜய் சிங் விமர்சித்ததும் காங்கிரசுக்கு பின் னடைவை உண்டாக்கி விட்டது.

“முஸ்லிம் வாக்குகளைப் பெறு வதற்காக திக் விஜய் சிங் பேசிய பேச்சுகள் கிட்டத்தட்ட முஸ்லிம் களுக்கும் இந்துக்களுக்குமி டையே பிரச்சினையை உருவாக் கும் ரகத்தில் அமைந்திருந்தன...'' என்று கூறும் சையத் காசிம் அலி, திக் விஜய் சிங்கின் பேச்சுகளைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் உண்மையான பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதாக இருந்த தில்லை. மாறாக உணர்வுப்பூர்வ மான விஷயங்களைப் பேசி இந் துக்களுக்கு எதிராக முஸ்லிம்க ளைத் தூண்டி விட்டு, இந்து - முஸ்லிம் உறவில் நெடுங்கால விரி சல்களை உண்டுபண்ணுவதா கவே இருந்தது...'' என்கிறார்.

இட ஒதுக்கீடு விஷயத்தை காங்கிரஸ் தவறாக கையாண்ட தால் சமாஜ்வாதி கட்சிக்கு முஸ் லிம்கள் வாக்களித்து விட்டார் கள் என்ற மாயாவதியின் கூற்று சரிதான் என்றாலும், பொதுவாக காங்கிரஸ் கட்சியின் வஞ்சகத் தனமான வாக்குறுதிகளும், முஸ் லிம்கள் விஷயத்தில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இரட்டை நிலை யும், முஸ்லிம்களின் காங்கிரஸ் வெறுப்புக்கு காரணங்களாகியுள் ளன.

உ.பி. முஸ்லிம்கள் சீரியசாக எடுத்துக் கொண்ட பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்ட்டர், முஸ்லிம் இளைஞர்களை சந்தே கத்தின் பேரில் டெல்லி போலீஸ் பிடித்துச் செல்லும் நிகழ்வுகள் போன்றவற்றில் ப. சிதம்பரம், திக் விஜய் சிங், சல்மான் குர்ஷத் என காங்கிரஸின் முக்கியத் தலைவர் கள் முரண்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியதும் காங்கிரஸ் மீதான முஸ்லிம்களின் நம் பிக்கை தகர்ந்து போகக் காரணம் எனலாம்.

ஆக, முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற காங்கிரஸ் கட்சி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததற்கு காரணங்கள் என்ன என்பதை அக்கட்சி ஆசுவாசத் தோடு அமர்ந்து சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை உ.பி. முஸ்லிம்கள் ஏற்படுத்தியுள்ளனர். காங்கிரசுக்கு உ.பி. முஸ்லிம்கள் புகட்டிய பாடத்தை பிற மாநில முஸ்லிம்களும் புகட் டுவதற்குள் முஸ்லிம்கள் விஷயத் தில் அது அக்கறை கொண்ட கட்சியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவே உ.பி. தேர்தல் தரும் செய்தியாக இருக்கிறது.

- ஃபைஸல்

Pin It